Back
Home » வீடு-தோட்டம்
இந்த டீ கறை மட்டும் போகவே மாட்டேங்குதா?... அட! டூத் பேஸ்ட் போதுமே இத சரிபண்ண...
Boldsky | 6th Jun, 2018 03:30 PM
 • துணிகளில் நீக்க

  நம்ம ஆபிஸூக்கு அவசரமாக கிளம்பும் சமயங்களிலோ அல்லது எதாவது நிகழ்ச்சிகளின் போதோ இந்த மாதிரியான அவசர காலங்களில் நம்ம அழகான ஆடையில் இந்த மாதிரியான டீ கறைகள் நேரிடலாம். கண்டிப்பாக இது நமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். ஆசைப்பட்டு வாங்கிய ஆடை பாழாகி விட்டதே இந்த கறையை எப்படி போக்குவது என்ற புலம்பல் கூட எழும். அதற்கு நீங்கள் கீழ்க்காணும் வழிகளை பின்பற்றினாலே போதும். உங்கள் ஆடைகளில் ஏற்பட்ட டீ கறைகளை இடம் தெரியாமல் செய்து விடலாம்.


 • வழிமுறைகள்

  முதலில் டீ கறைகளை குளிர்ந்த நீரில் கழுவவும். இதன் மூலம் கறைகளை எளிதாக தேய்த்து சுவைக்க இயலும்.

  இப்பொழுது லிக்வியூட் டிடர்ஜெண்ட்டை டீ கறைகளில் ஊற்றி தேய்க்க வேண்டும். அப்படியே டிடர்ஜெண்ட்டை 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். உங்கள் டீ கறைகள் பட்டு ரெம்ப நாளாகி உறைந்து போய் இருந்தால் டிடர்ஜெண்ட் கொண்டு அந்த இடத்தை தேய்த்து பிறகு 30 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். நன்றாக தேய்த்து பிறகு 10-15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.

  உங்கள் டீ கறை இன்னும் ப்ரஷ்ஷாக இருந்தால் அதன் மேல் பேக்கிங் சோடாவை லேயர் மாதிரி தேய்க்க வேண்டும். இந்த பேக்கிங் சோடா டீ கறையில் உள்ள ப்ரவுன் நிறத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும். இதை அப்படியே இரவு முழுவதும் வைத்து விட்டு காலையில் அதை சுரண்டி எடுத்து விட வேண்டும். கண்டிப்பாக இதில் முக்கால் வாசி கறைகள் போய்விடும். பிறகு இந்த துணியை வாஷிங் மெஷினில் போட்டு சாதாரணமாக சுவைத்தாலே போதும் கறைகள் காணாமல் போய் விடும்.

  குளிர்ந்த நீரில் கறைகளை நீக்கும் ஆக்ஸிடைஸிங் ஸ்டைன் ரிமூவர் கூட பயன்படுத்தலாம்.

  இப்பொழுதும் கறைகள் போகவில்லை என்றால் ஸ்டைன் ரிமூவர் ஜெல், ஸ்டிக் அல்லது ஸ்ப்ரே போன்றவற்றை கூட அந்த இடத்தில் பயன்படுத்தி பலன் பெறலாம். 5 நிமிடங்கள் கழித்து கழுவினால் கறைகள் மாயமாய் மறைந்து போகும்.


 • கார்பெட் கறைகள் நீக்க

  நீங்கள் உங்கள் துணையுடன் உங்களுக்கு பிடித்தமான ஒரு நிகழ்ச்சியை கையில் டீ கப்புடன் டீவியில் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். தீடீரென்று உங்கள் சோஃபா அல்லது கார்பெட் போன்றவற்றில் கொட்டி விடுகிறது. என்னவாகும் உங்கள் மனநிலையை மாறிவிடும் அல்லவா? இதை எப்படி சுத்தம் செய்வது கறைகள் போகுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் எழத் தொடங்கி விடும். இதற்காக நீங்கள் ரெம்ப சிரமப்பட வேண்டாம். கீழே காணும் எளிய முறையை செய்தாலே போதும்.


 • வழிமுறைகள்

  1 டேபிள் ஸ்பூன் டிஷ் வாஷ் லிக்யூட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் அதனுடன் 2 கப் குளிர்ந்த நீர் சேர்க்கவும்.

  கறை உள்ள இடத்தில் இந்த கலவையை ஊற்ற வேண்டும். கார்பெட் ஈரமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கறைகளை நீக்க முடியும். நன்றாக துணி கலவையை உறிஞ்சும் வரை பரப்ப வேண்டும்.

  கறைகள் நீங்கும் வரை இதை திரும்ப திரும்ப செய்யவும்.

  கறைகள் நீங்கியதும் ஒரு வெள்ளை துணியை எடுத்து அந்த இடத்தை ஒத்தி எடுத்து குளிர்ந்த நீரில் அலசவும். உலர வைக்கவும்.

  இந்த முறை பலனளிக்கவில்லை என்றால் ட்ரை க்ளீனிங் பொருட்களை பயன்படுத்தலாம்.


 • டீ மக்கில் கறைகளை நீக்க

  டீ மக்கில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதாக போகாது. நம்ம வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்திருந்தால் கூட இதனால் நாம் மிகவும் கஷ்டப்படுவோம். பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதால் அந்த டீ மக்கை உபயோகிக்க யோசிப்போம். கெமிக்கல் லிக்யூட்டை பயன்படுத்தினால் கூட குடிக்கும் கப் என்பதால் அது நல்லதும் கிடையாது. சரி இந்த டீ மக்கில் உள்ள கறைகளை எப்படி எளிதாக போக்குவது. அதற்கு கீழே சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.


 • வழிமுறைகள்

  1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இதை அப்படியே 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு டூத் பேஸ்ட் கொண்டு மக்கின் ஓரங்களில் நன்றாக தேய்த்து கழுவவும்.

  மக்கில் உள்ள கறைகள் நீங்கியதும் நீரில் அலசி விட்டு ஒரு துணியை கொண்டு நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.


 • மற்றொரு முறை : வினிகர் மற்றும் உப்பு

  ஒரு துணியை கொண்டு மக்கின் உட்புறத்தில் துடைத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய பெளலில் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  இந்த கலவையை டீ மக்கில் ஊற்றி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  ஒரு டிஷ் டவலை கொண்டு பேஸ்ட்டை நன்றாக தேய்க்க வேண்டும்.
  கறைகள் நீங்கியதும் தண்ணீரில் கழுவி காய வைக்கவும்.


 • டூத் பேஸ்ட் முறை

  உங்கள் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தி கூட டீ மக்கில் உ் ள்ள கறைகளை நீக்கலாம்.
  ஒரு பழைய ப்ரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை எடுத்து கொள்ளுங்கள்.
  மக்கின் எல்லா ஓரங்களிலும் படும் படி நன்றாக தேய்த்து கொள்ளுங்கள்.
  10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு கழுவவும்.
  இந்த மாதிரியான டிப்ஸ்கள் உங்கள் ஆடைகளில் உள்ள கறைகளை நீக்குவதோடு உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
நமக்கு பிடிச்ச டீ சார்ட் அல்லது எதாவது ஒரு துணியில் டீ கறை பட்டு விட்டால் என்ன செய்வோம்? கண்டிப்பாக அதை போக்குவதற்கான ஒரு வழியையும் விட மாட்டோம். இப்படி எல்லா வழியை செய்தாலும் அந்த கறை போகுமா என்றால் போகாது. நம்மளுக்கும் "அய்யோ அழகான டீ சார்ட் போச்சே" என்று புலம்பி புலம்பி கவலை கொள்ளத் தான் செய்வோம். இந்த டீ கறைகள் ஆடையில் மட்டும் இல்லைங்கா உங்கள் டீ மக்கில் கூட இது போன்ற கறைகளை காண முடியும். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கே என்று நீங்கள் எவ்வளவு தான் சோப்பு போட்டு தேய்த்து தேய்த்து கழுவினாலும் அது போவது சிரமமாக இருக்கும்.

அதற்காகத்தான் இந்த மாதிரியான டீ கறைகளை நீக்க நாங்க உங்களுக்கு சில டிப்ஸ்களை கூற உள்ளோம்.

   
 
ஆரோக்கியம்