Back
Home » வீடு-தோட்டம்
வாடகைக்கு வீடு தேடறீங்களா?... அப்போ இந்த விஷயங்களை நல்லா கவனிங்க...
Boldsky | 27th Jun, 2018 11:47 AM
 • வாடகை வீடு

  வாடகை வீடு தேடும்போது எப்படி தேட வேண்டும் என்று சில திட்டங்களை வகுத்துக் கொண்டால் தான் விரைவான நேரத்தில் நமக்குப் பிடித்தமான சௌகரியமான வீட்டைத் தேடிப் பிடிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படி நாமே நமக்காகப் பார்த்துப் பார்த்து கட்டின வீடு மாதிரியே வாடகைக்கு ஒரு வீடு கிடைச்சா எப்படி இருக்கும்?... ஆமாங்க... அந்த சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. ஆனால் அதுக்கு நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

  வீடு வாடகைக்கு தேடுவதற்கு முன்பாக நீங்கள் என்னென்ன திட்டங்களைத் தீட்ட வேண்டுமென்று இப்போது தெரிந்து கொள்ளுங்கள். அதன்பின், தே ஆரம்பியுங்கள். உங்களுக்கு அலைச்சல் எளிதாகும்.


 • லிஸ்ட் போடுங்க...

  உங்களுடைய தேவை, முக்கியத்துவம் இரண்டையும் அடிப்படையாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வீடாகவோ முக்கியமான ஏரியாவிலோ பார்ப்பது என்பது தேவை. அலுவலகம் அல்லது குழந்தைகளின் பள்ளிக்கு அருகில் என்று தேடுவது அத்தியாவசியமும் சௌகரியமும். அதனால் இரண்டையும் சமாளிக்கும் வகையில் உங்களுக்கு என்னென்ன முக்கியத்துவம் இருக்கிறது என்று யோசித்து ஒரு லிஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள்.


 • வீடு பராமரிப்பு

  நீங்கள் வாடகைக்கு பார்க்கப் போகும் வீட்டை யார் சமீப காலங்களில் பராமரிக்கிறார்கள் என்று தெளிவாக விசாரிக்க வேண்டும். சில வீடுகளில் ஹவுஸ் ஓனரே பராமரிப்பார். சில வீடுகளின் உரிமையாளர்கள் கொஞ்சம் தூரத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ இருப்பார்கள். வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருப்பார்கள். அந்த விஷயங்களை விசாரித்துக் கொள்ள வேண்டும்.


 • பேச்சுவார்த்தை

  அப்பார்ட்மண்ட் அல்லது காம்பவுண்ட் வீடுகள் என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது என்னுடைய ஏரியா, இங்கு நான் தான் துணி காய போடுவேன், கார் அல்லது டூவீலர் பார்க் செய்யும் இடம் என அத்தனையும் பஞ்சாயத்தாகவே இருக்கும். அதுபோன்ற விவரங்களை நன்கு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வீட்டுக்கு வந்த பின் தினம் தினம் பஞ்சாயத்தாகவே இருக்கும்.


 • ஏஜெண்ட்கள்

  முடிந்தவரை உரிமையாளரை தேடிப் பிடிப்பது நல்லது. ஒருவேளை ஏஜெண்ட் மூலமாக வீடு தேடும் சூழல் உண்டாகிற பொழுது, நம்பிக்கையான ஏஜெண்ட்டாக இருக்கிறாரா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டைப் பற்றிய முழு விவரங்கள், வாடகை, அட்வான்ஸ், தண்ணீர் வசதி, சுவற்றில் ஆணி அடிக்கலாமா வேண்டாமா இப்படி வீட்டில் நீங்கள் குடி வந்தபின் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ அது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டபின் அந்த வீட்டுக்கான அட்வான்ஸ் பணத்தை கொடுங்கள்.


 • வீட்டு புகைப்படங்கள்

  ஒருவேளை ஆன்லைனில் வீடு தேடும் நபராக நீங்கள் இருந்தால், வெறுமனே சிலர் வீட்டைப் பற்றி அப்படி இப்படி என்று புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். அதில் கூறப்பட்டிருக்கும் ரேட்டிங்கை வைத்து மட்டும் முடிவு செய்யாதீர்கள். ஏனென்றால், ரேட்டிங் என்பது வீட்டு உரிமையாளரே குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் கேட்டு, பதிவிடச் சொல்லியிருக்கலாம். அதனால் ஒரிஜினல் புகைப்படங்கள் அப்லோடு செய்திருந்தால் அதை நன்கு கவனியுங்கள். புகைப்படங்களில் ஒவ்வொரு அறையும் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்கு அந்த வீடு சௌகரியமாக இருக்கும் என்று தெரிந்தால் மட்டும் நேரில் ஒரு விசிட் அடிங்க. இல்லையென்றால் விட்டுவிட்டு அடுத்த வீட்டை தேட ஆரம்பிக்கலாம். அதை விட்டுவிட்டு, பார்க்கும் எல்லா வீட்டுக்கும் நேரில் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தால், உங்கள் நேரம் வீணாவதோடு வீண் அலைச்சல் தான் உருவாகும். அதனாலேயே சிலர் இப்போதைக்கு ஏதாவது ஒரு வீடு கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.


 • கட்டுப்பாடுகள்

  வீட்டு உரிமையாளர்கள் எப்போதுமே வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். இதை செய்யக்கூடாது. அதைப்பற்றி தெளிவாக விசாரித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக அக்ரிமெண்ட் விஷயத்தில் முழு கவனமாக இருங்கள். எவ்வளவு நாள், ரிப்பேர், மெயின்டனன்ஸ் போன்ற முழு விவரங்களையும் அக்ரிமெண்ட்டில் பதிவு செய்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.


 • எப்படி வாடகை தருவது

  வாடகையை சிலர் செக்கான கேட்டு வாங்குவார்கள். சிலருக்கு அக்கவுண்டில் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். சிலருக்கோ கையில் பணம் ரொக்கமாகக் கொடுக்க வேண்டும். இதை தெளிவாக கேட்டுக் கொள்ளுங்கள். முடிந்தவரை, கையில் பணமாகக் கொடுப்பதை விட, அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபர் தான் சிறந்தது. அது பின்னாளில் ஏதேனும் பிரச்னை வந்தால், ஆதாரமாகவும் அமையும்.


 • வீட்டு அலங்காரம்

  இன்ட்டீரியர் டெக்ரேஷன் ஏதாவது ஏற்கனவே செய்திருந்தால், அதில் ஏதாவது மாற்றமோ அல்லது புதிதாக பெயிண்ட் செய்யப்பட வேண்டும் என்றால், வீட்டுக்கு குடி புகுவதற்குள் செய்து தர சொல்லுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத வீண் செலவுகள், பராமரிப்பு வேலைகள் எல்லாம் உங்கள் தலையில் வந்து விழும்.

  இவ்வளவு தாங்க. இந்த அளவுக்கு கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும். உங்களுக்கு பிடித்தமாக, சௌகரியமான நல்ல வீடு ஈஸியாக அமைந்துவிடும்.
வாடகைக்கு வீடு தேடி அலைந்த அனுபவம் பொதுவாக நம் எல்லோருக்குமே இருக்கும். வாடகை வீட்டோட ஓனர் போடுகிற கண்டிஷன்கள், இடையில் வீட்டு புரோக்கர்கள் செய்யும் சில தில்லுமுல்லுகள் இவை எல்லாவற்றையும் தாண்டி, நம்முடைய தேவைகளுக்குத் தகுந்தபடி, மன திருப்தியுடன் ஒரு வீடு தேடி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

ஆனால் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரோக்கர் சிக்கல், ஹவுஸ் ஓனர் டார்ச்சர் எல்லாவற்றுககும் அவர்கள் தான் காரணமா?...இல்லை அதில் நமக்கும் ஏதாவது பங்கு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். அதில் பெரும்பகுதி தவறு நம் மீது இருப்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

   
 
ஆரோக்கியம்