Back
Home » வேலைவாய்ப்பு
சவால்களில் விருப்பமா... ஓஷனோகிராபி படிக்கலாம்!
Career India | 7th Jul, 2018 04:25 PM

ஆழ்கடல் ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சிகளைவிட சிரமம் வாய்ந்தது என்பதே விஞ்ஞானிகளின் கருத்து. அதனால்தான் ரஷ்ய விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்பு ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக நீர் முழ்கி கப்பல் அனுப்பப்பட்டது.

பொதுவாக வேதியியல், இயற்பியல், ஜியோபிஸிக்ஸ், ஜியாலஜி, கணிதம், என்ஜினீயரிங் உள்ளிட்ட மொத்த துறைகளையும் உள்ளடக்கியதுதான் கடலியல் என்று அழைக்கப்படும் ஓஷனோகிராபி.

இந்த வகையான படிப்பு இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, போன்ற வகைகளில் மரைன் பயாலஜி, ஓஷனோகிராபி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

யார் படிக்க முடியும்?

பிஎஸ்சியில் உயிரியல், தாவரவியல், வேதியியல், மீன் வளஇயல், பூமியியல், இயற்பியல், விவசாயம், மைக்ரோபயாலஜி, அப்ளைட் சயன்ஸ் ஆகியவற்றில் ஒன்றைப் படித்திருப்பவர் இந்த படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம்.

இதில் எம்பில்., மற்றும் பிஎச்டி., படிப்புகளையும் படிக்கலாம். அதற்கு நெட் அல்லது கேட் தகுதி தேர்வு எழுதுவது அவசியம்.

வகைகள்:

ஜியோலஜிகல் ஓஷனோகிராபி:

கடற்பகுதியின் வடிவம், அமைப்புகள், அளவுகள், கடல்சார்ந்த வளம், கடற்பகுதி மற்றும் பாறைகளின் தோற்றம் போன்றவற்றை இதைப் படிப்பதின் மூலம் அறியமுடியும்.

பிஸிகல் ஓஷனோகிராபி:

கடலின் அனைத்து இயற்பியல் பண்புகளைப் பற்றியும் பிஸிகல் ஓஷனோகிராபி கற்றுத்தருகிறது. கடலின் வெப்பநிலை, அடர்த்தி, அலை இயக்கங்கள், அலைகள் மற்றும் நீரோட்டங்கள் போன்ற கடல் பண்புகளை இந்த படிப்பை முடிப்பதின் மூலம் எளிதாக ஆராய்ச்சி செய்ய முடியும்.

கடல், வானிலை மற்றும் காலநிலை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளை பயிற்றுவிப்பதும் இந்ததுறைதான்.

மெரைன் பயோலஜி:

மெரைன் பயோலஜி என்பது கடல் சூழ்நிலையியல் பற்றிய படிப்பாகும், கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்தி, வாழ்க்கை முறை, உள்ளிட்டவைகளை இதைக்கொண்டுதான் ஆய்வு செய்கின்றனர்.

மெரைன் ஆர்கியாலஜி:

இவர்கள் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கடலில் முழ்கிய கப்பல்கள், புதைகுழிகள், கட்டிடங்கள், கருவிகள் மற்றும் மட்பாண்டங்கள் போன்ற பொருள்களை முறையாக மீட்டு மற்றும் ஆய்வுகளில் ஈடுபடுவார்கள்.

மெரைன் இன்ஜினீயர்:

சயின்டிபிக், டெக்னிகல் அறிவை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்துபவர்கள் மெரைன் இன்ஜினீயர்.

மெரைன் பாலிசி எக்ஸ்போர்ட்:

கடலியல் மற்றும் கடலோர மூலவளங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல், கடலியலின் கொள்கைகளை பயிற்றுவிப்பதும், உருவாக்குவதும் இவர்களின் பணி.

வேலைவாய்ப்பு:

இவ்வகையான படிப்பை முடிக்கும் பட்சத்தில் தனியார் துறை மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களிலும் சிறப்பான எதிர்காலம் உண்டு.

வேலைவாய்ப்பு வழங்கும் துறைகள்:

  • கோல் இந்தியா.
  • ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா.
  • சென்ட்ரல் கிரவுண்ட் வாட்டர் போர்ட்.
  • ஓ.என்.ஜி.சி.,
  • இந்துஸ்தான் ஸிங்க்.
  • ராணுவம்.

போன்ற அரசு நிறுவனங்களில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகம்.காரைக்குடி.

ஆந்திர பல்கலைக்கழகம். ஆந்திரா.

அண்ணாமலை பல்கலைக்கழகம்.சிதம்பரம்.

கொச்சி யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, கொச்சி.

இந்தியன் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி, சென்னை.

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம்,ஒடிசா.

கோவா பல்கலைக்கழகம்,கோவா.

மங்களூர் பல்கலைக்கழகம்,மங்களூர்.

சம்பளம்:

இதில் பட்டப்படிப்பை முடிக்கும் பட்சத்தில் ஆரம்ப கட்ட சம்பளம் ரூ. 6,500 முதல் ரூ .8,000 வரையிலும் சம்பாதிக்கலாம், அரசாங்க துறையில் சற்று அதிகமான முறையில் சம்பள விகிதம் இருக்கும்.

இதில் பட்ட மேற்படிப்பு, பிஎச்டி போன்ற படிப்புகளை முடிக்கும் பட்சத்தில் சற்று கூடுதலாக சம்பாதிக்க முடியும்.

கரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 18க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

   
 
ஆரோக்கியம்