Back
Home » ஆரோக்கியம்
அடேங்கப்பா! இத்துனூண்டு ஏலக்காய்க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?...
Boldsky | 9th Jul, 2018 02:56 PM
 • ஏலக்காய்

  இந்தியில் எலாச்சி, மலையாளத்தில் ஏலக்கா, தெலுங்கில் எலக்குழு, கன்னடத்தில் யலேக்கி, குஜராத்தி மொழியில் இலைச்சி, நேபாளி மொழியில் ஹர்தயா ரோகா, அரபி மொழியில் ஹுபா அல்ஹால் என்றும் அழைக்கப்படுகிறது. ஏலக்காய் என்னும் மசாலா "ஜிங்கிபெராசியே" குடும்பத்தை சேர்ந்த பல தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் விதைகள்தான். ஏலக்காய் இந்தியா, பூட்டான், நேபாளம் மற்றும் இந்தோனேசியாவை பூர்விகமாகக் கொண்டது. இதன் காய்கள் சிறியவை. ஏலக்காய் முக்கோணவடிவமும் உள்ளே விதைகள் சுழல் அச்சுகளாகவும் இருக்கும்.


 • வகைகள்

  ஏலக்காய் மசாலாக்களின் ராணி. குங்கமப்பூ, வெணிலாவுக்கு அடுத்ததாக மிகவும் விலை உயர்ந்த மூன்றாவது மசாலா இதுதான். ஏலக்காயில் பல வகைகள் உள்ளன. பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய்கள் பரவலாக உள்ளவை.

  பச்சை ஏலக்காய்தான் உண்மையான ஏலக்காய். பொதுவான வகை. இது இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு அனுப்பப்படுகிறது. இது ருசிக்காகவும், மனத்திற்காகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

  பாலை உபயோகப்படுத்தி செய்யப்படும் உணவுகளில் இது மணத்துக்காக சேர்க்கப்படுகிறது. மசாலா தேநீர் மற்றும் காப்பியில் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. கறி வகைகளிலும், பிரியாணி வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. கரம் மசாலாவில் மிகவும் முக்கியமாக இது சேர்க்கப்படுகிறது.

  அடர் பழுப்பு நிற விதைகள் அதன் மருத்துவ குணத்துக்காக பொதுவாக உபயோகப்படுத்தப் படுகிறது. குறிப்பாக அதிலுள்ள ஊட்டச் சத்துக்களுக்காக (எளிதில் ஆவியாகும் எண்ணெய், கால்சியம், இரும்பு தாது போன்றவை.)
  ஏலக்காயை பொடித்து ஏலக்காய் பொடியாகவும் உபயோகப்படுத்தலாம்.


 • ஏலக்காயின் வரலாறு

  4000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் பழமையான மசாலாப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பண்டைய எகிப்தில், ஏலக்காய் அதிலுள்ள மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் சடங்குகளிலும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. கிரேக்கர்கள், ரோமானியர்கள் இதை இதன் அடர்த்தியான வாசனைக்காக மசாலாவாக பயன்படுத்தினர். முற்கால ஸ்காந்தினேவிய கடற்கொள்ளை வீரர்கள் தங்களது பயணத்தின் போது இதை கண்டு பிடித்து இதை ஸ்கேண்டிநேவியாவிற்கு கொண்டு வந்தனர்.

  கௌதமாலா தான் இன்று ஏலக்காய் அதிகமாகப் பயிரிடும் ஒரு நாடாக உள்ளது. ஏலக்காய் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து முதலில் வந்ததாக நம்பப்படுகிறது. இதெல்லாம் சரி. ஆனால் இன்று அதன் ஊட்ட சத்துக்களுக்காக ஏலக்காய் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.

  ஏலக்காய் ஜீரணத்திற்கு உதவுகிறது. புற்று நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயிலுருந்தும் பாதுகாத்து மன அழுத்தம் வராமலும் தடுக்கிறது. ஏலக்காய் சேர்த்த பால் போன்று ஏலக்காய் சேர்த்துக்கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டால் அளவற்ற நன்மைகளை பெறலாம்.


 • ஜீரணத் தன்மை

  ஒரு இந்திய ஆய்வின் படி, ஏலக்காய் சுவைக்காக மட்டுமல்ல, செரிமானத்தை அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுத்தலாம். ஏலக்காய் வளர்சிதைமாற்றத்தை தூண்டும். ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொடுக்கும்.

  ஏலக்காய் பித்த அமிலத்தின் சுரப்பை தூண்டி செரிமானத்தில் உதவுகிறது. இது அமில ரெஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிற இரைப்பை நோய்களை தடுக்கிறது.


 • இதய ஆரோக்கியம்

  அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதிகமான ரத்த அழுத்தத்தை சரி செய்யும். கொத்தமல்லி, ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் பீச்பழச் சாறுடன் சேர்த்து பருகும் போது கிடைக்கும் நன்மைகள் பல.

  கருப்பு ஏலக்காய் பச்சை ஏலக்காயை விட இதய நலத்துக்கு உகந்தது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு மற்றும் நச்சுக்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளவர்கள் கருப்பு ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இதயத்தில் ஏற்படும் ரத்தக் கட்டிகளை கரைக்க உதவுகிறது.

  ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் அறிக்கையின்படி இரவு உணவில் இதய வல்லுநர்கள் கண்டிப்பாக ஏலக்காய் சேர்த்துக் கொள்கிறார்கள்.


 • புற்றுநோய்

  இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது. ஒரு சவுதி அரேபிய ஆய்வின் படி, ஏலக்காய் தூள் கட்டிகள் ஏற்படும் தன்மையை குறைத்தது. இது வீக்கத்தை குறைத்தது. இது புற்று நோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் அதன் இறப்புக்கு ஊக்கமளிக்கிறது. மற்றொரு சவுதி அரேபிய ஆய்வு ஏலக்காய் குடல் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்க மிகவும் உகந்தது என்கிறது. புற்று நோய் அணுக்களை எலிகளில் செலுத்தி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் ஏலக்காய் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியது.


 • சிறுநீர் தூண்டல்

  ஏலக்காய் சிறுநீர் அதிகரிக்கச் செய்யும். இது அதிகப் பதட்டம் மற்றும் வலிப்பு நோய்களுக்கு சிறந்தது. இந்தப் பண்பினால் ஏலக்காய் உட்கொள்ளும் போது நச்சுத்தன்மை அதிக அளவில் வெளியேறுகிறது.


 • மன அழுத்தம்

  சுகாதார அறிக்கையின் படி மனச் சோர்வை சமாளிக்க ஏலக்காய் உதவுகிறது. தேனீர் தயாரிக்கும் போது ஏலக்காயை பொடித்துச் சேர்க்கலாம். இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது நல்ல பலன்கள் ஏற்படும்.


 • ஆஸ்துமா

  மூச்சிரைப்பு, இளைப்பு, இருமல், மூச்சு சீரின்மை, நெஞ்சிருக்கம் போன்ற ஆஸ்துமா அறிகுறிகளுக்கு எதிராக போராடுகிறது. ஏலக்காய் மூச்சு விடுதலை எளிதாக்கி நுரையீரலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. சளி சவ்வுகளை மென்மையாக்கி வீக்கத்தை குறைக்கிறது. இன்னொரு அறிக்கையின்படி ஏலக்காய் ஆஸ்த்துமா, இருமல் போன்ற சுவாச சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்கிறது.


 • நீரிழிவு

  ஏலக்காயில் அதிக அளவில் மாங்கனீசு உள்ளது. இது நீரிழிவு அபாயங்களை குறைக்கிறது. இன்னும் நிறைய ஆராய்ச்சி இதைப் பற்றி நடத்த வேண்டும்.


 • பல் சிகிச்சை

  நுண்ணுயிரிகளை அழிக்கக்கூடிய தன்மையை ஏலக்காய் கொண்டுள்ளது.
  ஐரோப்பிய பத்திரிகை பல் மருத்துவ பிரிவின் அறிக்கையின் படி ஸ்ட்ரெப்டோகாக்கை முயூடன்ஸ் போன்றவற்றை அழிக்கிறது. மூக்கைத் துளைக்கிற ஏலக்காயின் மணம் உமிழ்நீரை அதிகரித்து பற்காரையை தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. பெருஞ்சீரகம், சோம்பு, ஏலக்காய் சேர்த்த மசாலா கலவையை உபயோகிக்கும் போது வாய் துர்நாற்றம் ஒரு பிரச்சினையாக இருக்காது.


 • பசியின்மை

  ஒரு ஆராய்ச்சியில் பசியின்மைக்கு ஏலக்காய் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வலியுறுத்துகிறது. ஏலக்காய் எண்ணையை கூட பசியைத் தூண்ட பயன்படுத்தலாம். ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்னும் பசியின்மை அறிகுறி நோய்க்கு ஏலக்காய் சிகிச்சை ஏற்றது.


 • உயர் ரத்த அழுத்தம்

  ஒரு இந்திய ஆய்வின் படி, ஏலக்காய் இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கிறது. எளிதாக நாம் தயாரிக்கும் சூப் மற்றும் அசைவ உணவுகளில் ஏலக்காயை பயன்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.


 • தாம்பத்ய நலம்

  ஏலக்காய் பாலுணர்வைத் தூண்டும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சினியோல் கலவையில் (நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்) ஏலக்காய் அதிகமாக உள்ளது. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை பயன்படுத்தும் போது கூட அது நரம்புகளைத் தூண்டி பேரார்வமாக செயல்பட வைக்கும். ஆண்மைத் தன்மையை அதிகரிக்க ஏலக்காய் பயன் தருவதாக ஒரு அறிக்கை சொல்கிறது. அடுத்தடுத்த ஆராய்ச்சிகளும் அதற்கு உத்திரவாதமளிக்கின்றன.


 • விக்கல்

  ஏலக்காயில் தசையை தளர்வாக்கும் பண்புகள் உள்ளதால் விக்கலை நிறுத்துகிறது. விக்கலை நிறுத்த ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியை கலந்து 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டி மெதுவாக குடிக்க வேண்டும்.


 • தொண்டைப் புண்

  இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, ஏலக்காய் கலந்து தொண்டைப் புண் ஆற பயன்படுத்தலாம். ஏலக்காய் எரிச்சலை குறைகிறது. இலவங்கப்பட்டை தொண்டையை பாதிக்கும் நுண் கிருமிகளை அழிக்கிறது. மிளகு இவ்விரண்டும் நன்கு வேலை செய்ய உறுதுணை புரிகிறது. ஒரு கிராம் அளவில் இலவங்கப்பட்டை பொடி, ஏலக்காய் பொடி 125 மிகி மிளகுப்பொடியோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்க வேண்டும். இக்கலவையை நன்றாக கலந்து தினமும் மூன்று முறை நாக்கில் தடவ வேண்டும். ஏலக்காய் வாந்தி உணர்வை நிறுத்தி வாந்தி வராமல் செய்கிறது. ஒரு ஆய்வில் ஏலக்காய்பொடி வாந்தி உணர்வைப் போக்கி, வாந்தி அடிக்கடி எடுப்பதை குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.


 • ரத்தம் உறைதல்

  இந்தியாவில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் படி, ஏலக்காயில் ரத்த உறைதலை தடுக்கும் பல மூலக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால் இதில் இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.


 • நன்மைகள்

  ஏலக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் தோலுக்கு மிகவும் நல்லது. தோல் ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்கவும், தோல் நிறம் அதிகரிக்கவும் ஏலக்காய் பயன்படுகிறது. தோலை சுத்தப்படுத்தவும் ஏலக்காயை பயன்படுத்தலாம்.


 • தோற்றப் பொலிவு

  ஏலக்காய் நம் தோலுக்கு நல்ல நிறத்தை தருகிறது. ஏலக்காய் எண்ணெய் நம் தோலில் உள்ள மாசுகளை நீக்கி நல்ல பொலிவைத் தருகிறது. நீங்கள் ஏலக்காய் அல்லது அதன் எண்ணை நிறைந்திருக்கும் தோல் பராமரிப்பு பொருட்கள் வாங்கலாம் அல்லது தேனுடன் ஏலக்காய் பொடி கலந்து முகத்தில் தடவலாம்.


 • ரத்த ஓட்டம்

  ஏலக்காயில் உள்ள வைட்டமின் C சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது ரத்த ஓட்டம் உடல் முழுதும் சீராக ஓட உதவுகிறது. ஏலக்காயில் உள்ள பைட்டோநியூட்ரியன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


 • தோல் ஒவ்வாமை சிகிச்சை

  முக்கியமாக கருப்பு ஏலக்காய் அதிக பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. தேனும் ஏலக்காய் பொடியும் கலந்து பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் தடவும் போது விரைவில் குணம் கிடைக்கிறது.


 • நறுமணம்

  ஏலக்காய் அதன் நறுமணத்திற்காக அழகுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. அதன் தனித்துவமான மணத்திற்காக , ஏலக்காய் மற்றும் ஏலக்காய் எண்ணெய் சேர்ந்த வாசனை திரவியங்கள், சோப்புகள், பொடிகள் மற்றும் இதர அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆசியாக் கண்டத்தவர் பாணி வாசனை திரவியங்கள் மற்றும் இதர வாசனை பொருட்கள் பெரும்பாலும் அத்தியாவசிய எண்ணெய்களோடு கூடுதலாக ஏலக்காய் எண்ணையும் பயன்படுத்துவர்.


 • ஸ்கின் ட்ரீட்மெண்ட்

  ஏலக்காய் அதனுடைய அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்கிருமி அழிப்பு பண்புகளுக்காக தோல் பராமரிப்புப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. அதன் சிகிச்சை பண்புகளை நன்றியுடன் அனுபவித்து மகிழ்வோம். இது வாசனை திரவியங்களில் சேர்க்கும்போது, ​​அது உணர்ச்சிகளை தூண்டுகிறது. முக சோப்புகளில் சருமத்தில் ஒரு வெது வெதுப்பான உணர்வை அளிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகின்றன. அரோமாதெரபியில் ஏலக்காய் சேர்த்த இந்த அழகு சாதனப் பொருட்கள், அதன் குணமாகும் பண்புக்காக பயன்படுத்தப்படுகிறது.


 • பேஸ் மாஸ்க்

  ஏலக்காயில் உள்ள அடர்த்தியான வாசனை துர்நாற்றங்களை போக்குகிறது. இது அழகு சாதனப் பொருட்களில் குறிப்பாக சுத்தம் செய்யும் பொடிகளில் சேர்க்கப்படும் பொருட்களின் தேவையற்ற வாசனையப் போக்கி மேலும் நல்ல மணமுள்ளதாக மாற்ற ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. இதனால் அழகுப் பொருட்களின் திறனும் கூடுகிறது.


 • பளிச் உதடுகள்

  ஏலக்காய் எண்ணெய் லிப் பாம் போன்ற உதட்டுப் பூச்சிகளில் எண்ணெய் சுவை அளிக்கவும், உதடுகளை மென்மையாக்கவும் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. தினமும் இரவில் ஏலக்காய் எண்ணையை தோலில் தடவி காலையில் சுத்தம் செய்து விடலாம்.


 • கிளியர் ஸ்கின்

  கருப்பு ஏலக்காய் தோலிற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை திறமையாக வெளியேற்றுகிறது. ஏலக்காய்களை மெல்லும் போது நம் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி தோலை பளபளப்பாக்குகிறது.


 • வலுவான கூந்தல்

  கருப்பு ஏலக்காய் தலைக்கு தேவையான சத்தினை அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது. மயிர்கால்களுக்கு வலுவளித்து கூந்தலை உறுதியாக்குகிறது. ஏலக்காய் நீரினால் கூந்தலை சுத்தம் செய்யலாம். (ஏலக்காயை நீரில் கலந்து ஷாம்பு போடுவதற்கு முன் உபயோகிக்கலாம்). தலையில் ஏற்படும் தொற்றுகளையும் ஏலக்காய் போக்குகிறது. கூந்தல் வளர்ச்சிக்கும், மண்டையோட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் ஏலக்காய் மருந்தாகிறது.
  தலை ஆரோக்கியமாக இருக்கும் போது கூந்தல் ஆரோக்கியமாக பொலிவுடன் காணப்படும். ஏலக்காய் கூந்தலை உறுதியாக்கி கூந்தலுக்கு ஒரு பொலிவைத் தருகிறது.

  இவை அனைத்தும் நாம் எளிய ஏலக்காயை தொடர்ச்சியாக உபயோகப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டால் கிடைக்கும் நற்பலன்கள்.

  ஏலக்காய்க்கும் தனியாவிற்கும் உள்ள வேறுபாடுகள். இரண்டும் ரத்த அழுத்தம் சரி செய்தல், நீரிழிவை குரணப்படுத்தல், ஜீரண நலத்தை மேம்படுத்தல் போன்றவற்றில் ஒரே போல செயல்படுகின்றன. ஆயுர்வேதத்தில் ஜீரணத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மசாலாக்களில் இவை இரண்டும் இடம் பெறுகின்றன. மற்றவை இஞ்சி, சீரகம் மற்றும் சோம்பு.


 • ஏலக்காய் தனியாவின் வேறுபாடுகள்

  ஏலக்காய் உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் மசாலாக்களில் மதிப்பு மிக்க ஒன்றாகும். ஏலக்காய் முழுதும் பொடி செய்து பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் பொடி கறிப் பொடிகளிலும், பருப்பு சேர்த்த சமையலிலும், இனிப்பு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காயை உபயோகப்படுத்த சில குறிப்புகளை கீழே பார்ப்போம்.

  1. இந்தியாவில் கரம் மசாலாவில் சேர்க்கப்படும் முக்கியமானவற்றில் ஏலக்காயும் ஒன்று. சைவ, அசைவ வகை உணவுகளிலும் இது சேர்க்கப்படுகிறது. இந்திய சமையலில் சேர்க்கப்படும் கறிப்பொடி வகைகளை தயாரிக்க ஏலக்காயும் சேர்க்கப்படுகிறது.

  2. ஏலக்காய் தேநீர் மற்றும் காபியிலும் புரத்துணர்ச்சி ஊட்டும் நறுமணத்திற்காக சேர்க்கப்படுகிறது. காபி தயாரிக்கும் போது காபிப் பொடியுடன் ஏலக்காய் சேர்த்து தயாரித்து, சர்க்கரை போட்டு மேலே கிரீம் சேர்க்கலாம்.

  3. பச்சை நிற ஏலக்காய் புலாவ், கறிகள் மற்றும் சூடான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. ஏலக்காயின் ஓடு, பிரியாணி, புலாவ், கபாப் சமைக்கும் போது எல்லா மசாலாக்களையும் ஒன்றிணைத்து நறுமணமளிக்கிறது.

  4. ருசியான உணவுகளைத் தவிர கீர், ஃபிர்னி போன்ற உணவுகளிலும், குலாப் ஜமுன், கஜர் கா ஹல்வா போன்ற இனிப்புகளிலும் நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

  5. ஏலக்காய் விதைகளை பொடித்து சூப், அசைவ உணவுகள், களி, அரிசி உணவுகள், பூரி போன்றவற்றில் சேர்க்கலாம். நீங்கள் வீட்டில் தயாரிக்கும் அரிசி புட்டு, ஐஸ் கிரீம், பழக்கூழ், பழ சாலட் போன்றவற்றின் மீது தூவலாம்.

  6. தேன் கோழிக் கறி தயாரிக்க, கோழிக் கறியை தேனில் ஊற வைத்து, ஏலக்காய் மிளகு சேர்க்கவேண்டும். இதை அடுப்பின் மேல் வைத்து வறுக்க வேண்டும். இப்பொது சுவையான தேன் ஏலக்காய் கோழிக் கறி தயார்.

  7. திராட்சை, ஆரஞ்சு சேர்த்த பழ சாலட் தயாரிக்கும் போது தேன் சேர்த்து, மேலே ஏலக்காய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கும் போது சுவை கூடும்.

  8. ஸ்வீடிஷ் காபி ரொட்டி என்பது சிறிது இனிப்புடன் கூடிய ஈஸ்ட் சேர்த்தது. இது பொதுவாக ஏலக்காய் பொடித்துச் சேர்த்த மாலை வடிவிலான ரொட்டியாகும்.

  9. எலுமிச்சையை ஏலக்காய் பயன்படுத்தி பாதுகாக்கலாம். இவை பலவகை உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

  எலுமிச்சையை நீள வடிவில் நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  அதன் மேல் கோசர் உப்பு தடவி, ஜாடியின் அடியிலும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு அதன் மேல் எலுமிச்சையை போட வேண்டும்.

  எலுமிச்சை துண்டுகள், ஏலக்காய், உப்பு, பிரிஞ்சி இலை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு வைக்க வேண்டும்.

  கொஞ்சம் எலுமிச்சை சாற்றை அவை மூழ்கும் அளவு பிழிந்து, இறுக்கமாக மூடி வைக்கவும். மூன்று வாரம் வரை வைக்கவும்.

  உப்பு சமமாகக் கலக்க அவ்வப்போது குலுக்கி விடவும். எலுமிச்சை சாற்றில் மூழ்கிய இந்த எலுமிச்சையை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஆறு மாதம் வரை உபயோகிக்கலாம்.

  10. லஸ்ஸி இந்தியாவில் பிரபலமான ஒரு புத்துணர்ச்சியான பானம். இதை மேலும் சிறப்பாக்க இதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கலாம். இதை தயாரிக்க தயிர், முழு கொழுப்பு பால், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கலக்கவும். சர்க்கரை கட்டிகளை சேர்த்து பரிமாறலாம். உலர் பழங்கள் மற்றும் ஏலக்காய் பொடி தூவி அலங்கரிக்கலாம்.


 • ஏலக்காய் தேர்ந்தெடுத்தல்

  பேரங்காடிகளில் மசாலாக்கள் விற்கும் பிரிவில், வறுத்த ஏலக்காயாகவும், விதையாகவும் கிடைக்கும். சில கடைகளில் முழுக்காய்களாகவும் கிடைக்கும். பச்சை நிற ஏலக்காய்களை பார்த்து வாங்கினால் அவை இனிப்பு மற்றும் கார வகை உணவுகளில் பயன்படுத்த நன்றாக இருக்கும். வறுத்த ஏலக்காய் நல்லது. சிறிய கால்பந்து வடிவத்தில், அதன் வாசனை பைன் மற்றும் மலர்களின் ஒரு கலவை போல் இருக்க வேண்டும்.

  பொடித்த ஏலக்காய் வேண்டும் என்றால், அவற்றை முழுதாக சிறிய கல்லில், மிக்ஸியில் பொடித்தால் நன்றாக இருக்கும். ஒரு வருடம் வரை கூட வாசனை மாறாமல் இருக்கும்.

  ஏலக்காய் மிகவும் விலை உயர்ந்த மசாலா. அதனால் அதனுடன் வேறு ஏதாவது மசாலாவை சேர்த்து அரைத்து விடுகின்றனர். தோலை உரித்து விட்டு அரைத்தால் ஏலக்காயின் மணம் சீக்கிரமாக போய் விடும்.


 • சேமித்து வைத்தல்

  ஏலக்காயை முறையாக சேமித்து வைத்தால் அதன் சுவையும் மனமும் என்றும் மாறாமல் இருக்கும். ஏலக்காயை காய்களாக சேமித்து வைப்பதே நல்லது. ஏலக்காய்களை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைப்பது நல்லது. நேரடியாக சூரிய வெளிச்சம் புகாத வகையில் வைக்க வேண்டும்.

  நீண்ட நாட்கள் பயன்படும் வகையில் சேமிக்க, பாலீதின் உரையுடன் கூடிய கோணிப்பைகளில் சேமித்து மரப் பெட்டிகளில் வைக்க வேண்டும். அதற்கு முன் அவை ஈரமில்லாமல் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அடிக்கடி சோதனை செய்து கெட்டுப் போகாமல் காக்க வேண்டும்.

  சேமித்து வைக்கும் அறை இருட்டாக, காய்ந்து, சுத்தமாக பூச்சிகள் இல்லாமல் இருக்க வேண்டும். அரைக்குள் பூச்சிகள் நுழையாமல் இருக்க கதவு, ஜன்னல்களுக்கு கொசுவலை அடிக்க வேண்டும். அதனருகில் வாசனை அதிகமான உணவுப் பொருட்கள் இருக்கக் கூடாது. சோப்பு, பெயிண்ட் போன்றவற்றையும் வைக்கக் கூடாது. இவை ஏலக்காயின் மணத்தையும், சுவையையும் கெடுத்து விடும்.
  இப்போது தரமான ஏலக்காயை வாங்கி எவ்வாறு சேமிப்பது என்பதை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? அவற்றை உணவில் பயன்படுத்துவது எப்படி? எனப் பார்ப்போம்.


 • ஏலக்காய் தேநீர்

  தேவையான பொருட்கள்

  1 தேக்கரண்டி இஞ்சித் தூள்
  1/2 தேக்கரண்டி ஏலப்பொடி
  1/8 தேக்கரண்டி மிளகுப்பொடி
  1 இலவங்கப்பட்டை
  2 1/2 கப் தண்ணீர்
  2 தேநீர் பைகள்
  2 1/2 கப் கொழுப்பு நீக்கிய பால்
  2 தேக்கரண்டி தேன்
  2 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பொடி அழகு படுத்த

  செய்முறை

  1. ஒரு சிறிய பாத்திரத்தில் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, கருப்பு மிளகு, மிளகுத்தூள் சேர்த்து வைக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேநீர்ப் பைகளையும், லவங்கப் பட்டையும் அதில் சேர்க்கவும். அதைக் கலக்கி விட்டு சிறு தீயில் வைக்கவும்.
  3. தேநீர் நீரில் முழுதும் கரைய ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
  4. தேநீர்ப் பைகளையும், லவங்கத்தையும் எடுத்து விடவும்.
  5. இத்துடன் பால், தேன் சேர்க்கவும். போதுமான அளவு சூடேறும் வரை அடுப்பில் வைக்கவும். மேலே இருக்கும் நுரை போகாதவாறு மெதுவாகக் கலக்கவும்.
  6. கப்பில் தேநீரை ஊற்றி, ஆரஞ்சு தோல் பொடியை அழகாக தூவவும்.


 • ஏலக்காய் தேன் கோழிக்கறி

  தேன் 4 தேக்கரண்டி
  சர்க்கரை 2 தேக்கரண்டி
  1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி, மற்றும் மிளகுத்தூள்

  இறைச்சிக்கு

  1 முழுக்கோழியை துண்டாக்கி கொள்ளவும்.
  2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  1 சன்னமாக நறுக்கிய எலுமிச்சை
  உப்பு மற்றும் மிளகு

  செய்முறை

  தேனைச் சூடாக்கி சர்க்கரைப் பாகும், ஏலக்காயும், மிளகுத்தூளும் கலந்த கலவையில் ஊற்றவும். மசாலாவையும், கோழிக் கறியையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ஊற வைக்கவும். அந்த பாத்திரத்தை பிளாஸ்டிக் கவரினால் மூடி முப்பது நிமிடங்கள் அறையில் வைக்கவும்.

  2. ஓவனை 390 டிகிரியில் சூடாக்கவும்.

  3. ஆலிவ் எண்ணையை சூடாக்கி நடுத்தரமான அளவில் உள்ள வாணலியில் மசாலாவில் ஊறிய கோழிக்கறியை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

  4. எலுமிச்சை துண்டுகளை வறுத்த வாணலியில் வைத்து அதன் மேல் கோழித்துண்டுகளை வைத்து மசாலா கலவையை பூசவும். இதை அலுமினியம் ஏடுகளால் சுற்றவும்.

  5. இதை ஓவனில் வைத்து 30 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். அலுமினியம் ஏட்டை எடுத்து விட்டு மீண்டும் ஓவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கோழிக்கறி மிகவும் கருத்து விட்டால் அலுமினியம் ஏட்டுடனே ஓவனில் வைக்கவும்.

  6. ஓவனில் இருந்து எடுக்கவும். பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

  7. மசித்த உருளைக்கிழங்குடன் பரிமாறவும். ஏலக்காய் இதற்கு மிகுந்த சுவையும் மணமும் அளிக்கும்.


 • வரலாறு

  கௌதமாலாவில் 1914 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று பெருமளவில் ஏலக்காய் விளைவிக்கும் நாடாக அது உள்ளது. ஏலக்காய், மஞ்சள், இஞ்சி ஆகியவை ஒரே தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை (ஜிஞ்சிபெராசியே).


 • யார் சாப்பிடக்கூடாது?

  கருவுற்ற பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், ஏலக்காயை அளவாக பயன்படுத்தல் நலம். சிகிச்சைக்காக இதை எடுத்துக்கொள்ளும் போது தேவையற்ற விளைவுகள் ஏற்படும்.

  பித்தப்பை கற்கள் இருந்தால் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது பித்தப்பை கற்களை அதிகரிக்கும்.
உங்கள் வீட்டில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிறப்பான உணவிலும் நீங்கள் ஏலக்காயின் சுவையை ரசித்திருப்பீர்கள். குறிப்பாக, இனிப்பு வகைகளில் பெரும்பாலும் நாம் ஏலக்காய் அவசியமாக சேர்ப்போம்.

அதை உணவில் சேர்ப்பதற்கும் காரணம் இருக்கிறது. ஏலக்காயில் மனிதனுக்கு தேவையான மகத்தான நன்மைகள் உள்ளன. நீங்களும் ஏலக்காயை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ள மேற் கொண்டு படியுங்க.

   
 
ஆரோக்கியம்