Back
Home » ஆரோக்கியம்
தினமும் ரெண்டு ஸ்பூன் இந்த பூண்டு ஜூஸ் குடிங்க... எந்த நோயும் உங்கள நெருங்காது...
Boldsky | 9th Jul, 2018 05:02 PM
 • பூண்டு

  பூண்டு என்றாலே உங்கள் நினைவுக்கு வருவது அதன் கடுமையான வாசனை தான். நிறைய மக்கள் இதன் கடுமையான வாசனையால் இதை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் இதை நீங்கள் நிறைய வகைகளில் பயன்படுத்தலாம். பூண்டு சாறு மிகவும் அற்புதமான ஒன்று என்றே சொல்லலாம்.


 • பயன்படுத்தும் முறைகள்

  சில பூண்டு பற்களை உணவில் கூட சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பூண்டை உரித்து அரைத்து சாறு எடுத்து ஜூஸூடன் கலந்து கொள்ளலாம். சில பூண்டு பற்களை பாலுடன் சேர்த்து பருகலாம். இப்படி எந்த முறையில் எடுத்து வந்தாலும் நிறைய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  பூண்டின் ஊட்டச்சத்துக்கள்
  100 கிராம் பூண்டில்
  கலோரிகள் : 0
  கொழுப்பு: 0 கிராம்
  சோடியம் :35 மில்லி கிராம்
  கார்போஹைட்ரேட் : 0 கிராம்
  மொத்த கார்போஹைட்ரேட் : 0 கிராம்
  புரோட்டீன் : 0 கிராம்


 • ஜலதோஷம்

  பூண்டின் வாசனையே போதும் ஜலதோஷத்தை போக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது. இது குறித்து 146 பேர்களிடம் ஆராய்ச்சி செய்த போது பூண்டு அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஜலதோஷத்தை எதிர்த்து போரிடுவது தெரிய வந்துள்ளது. இந்த தகவல்கள் அட்வான்ஸ் இன் தெரபி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கு 12 வாரங்களுக்கு பூண்டு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூண்டை சாப்பிட்ட குரூப் மற்ற பிளாஸ்போ குரூப்பை காட்டிலும் வியர்த்தல், நுரையீரல் ஆரோக்கிய மேம்பாடு மூலம் ஜலதோஷத்தை போரிடுவது தெரிய வந்தது. எனவே பூண்டு சாறு ஜலதோஷத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த மருந்து.


 • ஆஸ்துமா

  இந்த நவீன காலத்தில் நம்மை சுற்றி எங்கு பார்த்தாலும் மாசுவும் புகையும் தான் சூழ்ந்து இருக்கிறது. இதனால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆஸ்துமா. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடியுங்கள். ஆஸ்துமா போன்றவற்றால் ஏற்படும் மூச்சுப் பிரச்சினையை எளிதில் சரி செய்கிறது.


 • இதய ஆரோக்கியம்

  பூண்டு உங்கள் உடலில் இரத்தம் கட்டிக் கொள்ளலாமல் சீராக பாய உதவுகிறது. இரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் போன்றவை வராமல் காக்கிறது. நாள்பட்ட இரத்த அழுத்த பிரச்சினைகளைக் கூட சரி செய்து இதய நோய்களுக்கு பை பை சொல்லுகிறது.


 • நோயெதிர்ப்பு மண்டலம்

  பூண்டு சாறு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதிலுள்ள அலினினானது அல்சினாக மாற்றம் பெறுகிறது. இதில் சல்பர் அதிகளவில் உள்ளது. இந்த சல்பர் நோய்களை எதிர்த்து போரிட பெரிதும் பயன்படுகிறது. இது நமது உடலை தாக்கியுள்ள வைரஸூக்கு எதிராக இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.


 • புற்றுநோய்

  பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் குடல் மற்றும் வயிற்று புற்று நோயிலிருந்து காக்கிறது என்று யுனிவர்சிட்டி ஆஃப் மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சி கூறுகிறது. பூண்டு சாறு புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை ஒடுக்குகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.


 • கொலஸ்ட்ரால்

  இது இரத்த குழாய்களில் இரத்தம் சீராக பாய உதவுவதால் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து இரத்த ஓட்டம் தடைபடுவதை தடுக்கிறது.


 • இரத்த சர்க்கரை

  பூண்டு தன்னுடைய விட்டமின் பி6 உதவியுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இந்த விட்டமின் கார்போஹைட்ரேட் மெட்டா பாலிசத்தை ஒழுங்குபடுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்காமல் காக்கிறது. இந்த பூண்டு ஜூஸானது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.


 • தொண்டை புண் மற்றும் இருமல்

  மழைக்காலத்தில் இந்த தொண்டை புண் மற்றும் இருமல் பிரச்சினை நம்மை அன்றாடம் தொற்றுக் கொள்ளும். இதற்கு நீங்கள் சூடான நீரில் பூண்டு சாறு கலந்து குடித்தாலே போதும் உங்கள் பிரச்சினை பறந்தோடி விடும். இதை மாதுளை பழம் ஜூஸூடன் கூட சேர்ந்து பருகலாம். ஏனெனில் இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடைடிங் செயல்கள் உள்ளன.


 • கூந்தல் மற்றும் சருமம்

  பூண்டு சாற்றை சிறுதளவு எடுத்து உங்கள் பருக்களில் தடவினால் பருக்கள் போய்விடும். இதன் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படும். பூண்டு சாற்றை தலையில் தடவி வந்தால் மயிர்க்கால்கள் வலுப்பெறும். இதை உங்கள் ஹேர் பியூட்டி பொருட்களுடன் சேர்த்து கூட பயன்படுத்தி பலன் பெறலாம்.

  குறிப்பு

  பூண்டு சாற்றை ரெம்ப நேரம் சருமத்தில் வைத்திருக்க வேண்டாம். இது உங்கள் சருமத்தை எரித்து விடும்.


 • எடை இழப்பு

  புகைபழக்கத்திற்கு அடுத்த படி உடல் பருமன் தான் அதிக தீங்கு விளைவிக்கக் கூடிய விஷயம். உடல் பருமனால் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் நம்மை அண்டி வருகிறது. நீங்கள் பூண்டு சாற்றை தொடர்ந்து எடுத்து வந்தால் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை துரிதப்படுத்தி கொழுப்புகளை வேகமாக கரைக்கும். தினசரி உடற்பயிற்சி, பூண்டு சாறு இந்த 2 விஷயங்கள் போதும் உங்கள் உடல் எடையை குறைக்க.


 • பூஞ்சை தொற்று

  பூஞ்சை தொற்றை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் பாதங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்கு காரணமான பூஞ்சையை எதிர்த்து இது போரிடும். இந்த சாற்றை சருமத்தில் தடவியயுடன் அரிப்பு பிரச்சினையை குறைத்து விடும்.

  பூண்டு ஒரு மிகச்சிறந்த மருத்துவ பொருள். ஒரு பொருள் ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. எனவே இதன் வாசனையை மனதில் கொள்ளலாமல் தினமும் உங்கள் உணவில் சேர்த்து கொண்டாலே போதும் நாம் நீடுழி வாழலாம்.
சில உடல் உபாதைகளை தடுக்க நாம் பெரிதாக மெனக்கெட வேண்டிய தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை கையில் எடுத்தாலே போதும்.

அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த பூண்டு சாறு. இந்த பூண்டு சாறு சலதோஷம், ஆஸ்துமாவை குணப்படுத்தவும் , இதய ஆரோக்கிய மேம்பாடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், புற்று நோயை தடுத்தல், இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்தல், தொண்டை புண், இருமல், சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியம், எடை இழப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது.

   
 
ஆரோக்கியம்