Back
Home » ஆரோக்கியம்
நம்ம உடம்புல ரத்தம் உறையாம இருக்கணும்னா இதெல்லாம் தினமும் சாப்பிட்டே ஆகணும்...
Boldsky | 10th Jul, 2018 11:01 AM
 • இரத்த உறைதல்

  குறிப்பிட்ட இடத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் ஒன்று சேர்ந்த கலவையே இரத்தக் கட்டு அல்லது இரத்த உறைதல் ஆகும். உட்புற இரத்த போக்கை இது நிறுத்துவதால் இது ஆரோக்கியமானது தான் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், இரத்த கட்டு உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும் இவ்விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஏனென்றால், தொடர்ந்து இரத்த கட்டு ஏற்படுவது, ஆழ்நாளக் குருதியடைப்பு (DVT) இன் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.


 • காரணங்கள்

  1. இரத்த சோகை
  2. இருதய பிரச்சனைகள்
  3. கொழுப்பு
  4. உள் காயங்கள்
  5. அதிக இரத்த அழுத்தம்
  6. கல்லீரல் நோய்கள்
  7. உடல் பருமன்


 • அறிகுறிகள்

  1. இதயம்
  வியர்வை, உடம்பின் மேல் பகுதியில் அசௌகரியமாக உணர்தல், மூச்சுத் திணறல், கனமாக உணர்தல், நெஞ்சு வலி.

  2. கால் அல்லது கை
  பாதிக்கப்பட்ட இடத்தில சூடாக உணர்தல், சுளுக்கு, மிகுதியான வலி, வீக்கம் போன்றவை கை அல்லது காலில் இரத்தம் உறைந்திருப்பதை குறிக்கிறது.

  3. மூளை
  கடுமையான தலை வலி, தலை சுற்றல், கண் பார்வை சம்மந்தமான பிரச்சனைகள், பேசுவதில் பிரச்சனை.

  4. நுரையீரல்
  இரத்தத்தை இருமுதல், இதய படபடப்பு, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல்

  5. வயிறு
  வாந்தி, வயிறு வலி, வயிற்றுப்போக்கு


 • ஆளி விதைகள்

  இந்த விதைகள் பல்வேறு தாதுக்கள் மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களின் ஒரு களஞ்சியமாகும். இரத்தக்கட்டு ஏற்படுவதை தடுக்க இந்த சத்துக்கள் அவசியம். உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க நீங்கள் ஒரு கைப்பிடி அளவு ஆளி விதையை உண்ணலாம். கூடுதலாக, அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு சாலடுகள் மற்றும் மிருதுவான பானங்களில் விதைகளை நீங்கள் சேர்க்கலாம். பாதகமான விளைவுகளைத் தடுக்க ஆளி விதைகளை அளவாக உண்ணவும்.


 • சிவப்பு மிளகாய்

  மிளகாய் எப்போதும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுவதில்லை. சில மிளகாய் வகைகளை உண்ட பின் நெஞ்செரிச்சல் ஏற்படுவதாக பல்வேறு மக்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமான காரம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உண்மை தான். இது பெப்பருக்கும் பொருந்தும்.
  எனினும் ஊட்டச்சத்து நிபுணர்கள், சிவப்பு மிளகு ஒரு இயற்கை இரத்த மெலிவூட்டி என்று கூறுவது ஆச்சரியம் தரும் விஷயம் தான். சிவப்பு மிளகில் சாலிசிலேட்டுகள் நிறைந்திருப்பதால், இரத்தம் உறைவதை தடுக்க அது உதவுகிறது. இருந்தாலும், நீங்கள் உங்கள் மருத்துவ ஆலோசகரை கலந்தாலோசிப்பதும் சுய பரிசோதனைகளை தவிர்ப்பதும் நல்லது.


 • மஞ்சள் தூள்

  மஞ்சள் சற்றும் குறைவில்லாத ஒரு மந்திர மசாலா. பல்வேறு சிறிய மற்றும் பெரிய உடல் பிரச்சனைகளை தடுக்க மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சளில் குர்குமின் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள தட்டணுக்களுடன் இணைந்து இரத்தத்தை உறையவைக்கும் காரணிகளை நீக்குகிறது. இரத்தம் கட்டிக்கொள்வதால் ஏற்படும் வலியையும் குர்குமின் தடுக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, இந்த கலவையை உண்டு இரத்தக் கட்டுக்கு சிகிச்சை அளிக்கவும்.


 • சியா விதைகள்

  சியா விதைகள் ஏராளமான அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. இந்த இரண்டு கூறுகளுமே உடலில் இரத்தக் கட்டு ஏற்படாமல் காக்க அவசியமாகும். சியா விதைகளை தினமும் எடுத்துக்கொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சீரான இரத்த ஓட்டம் இரத்த கட்டு ஏற்படுவதையும் குறைக்கிறது.


 • நெல்லிக்காய் சாறு

  நெல்லிக்காய் சாறு பல்வேறு நோய்களை குணமாக்குகிறது. இந்திய நெல்லிக்காய் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இவை இரண்டும் இரத்தக் கட்டை சரி செய்வது மட்டுமின்றி நச்சு நீக்கியாகவும் செயல்படுகின்றன. மேலும், பாதகமான விளைவுகள் இல்லாததால் இவை உண்ணுவதற்கு பாதுகாப்பானதும் கூட.


 • இலவங்கப்பட்டை தேநீர்

  பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு வெளி மற்றும் இரத்த உறைதலை சரி செய்வது உட்பட பல்வேறு உட்புற பிரச்சனைகளை சரி செய்ய இலவங்கப்பட்டை பயன்பட்டு வந்துள்ளது. உணவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக்கொள்வது இரத்த ஓட்டத்தை சீராகும் என்று மூலிகையாளர்கள் நம்புகின்றனர். இரத்தக் கட்டை சரி செய்ய நீங்கள் தினமும் புதிதாக காய்ச்சிய இலவங்கப்பட்டை தேநீர் பருகலாம். அதிகமாக பருக வேண்டாம் - ஏனெனில் அது குமட்டல், வாந்தி, சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.


 • வெங்காயம்

  வெங்காயம் சிறப்பு உணவு எனப்படுகிறது. நீங்கள் சிறிதளவு பச்சை வெங்காயத்தை உங்கள் சாலட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் இயற்கை இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் இருதய கோளாறு உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வேலை உணவுடனும் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். இது சுருங்கிய தமணிகளை விரிவுபடுத்தி தடையில்லாமல் இரத்தம் பாய உதவுகிறது.


 • கீரை சாறு

  இந்த பச்சை பசேல் உணவில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. உடலில் தேவையான அளவு வைட்டமின் கே இருக்கும்போது, இரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது. நீங்கள் பிரெஷான கீரையை சாலட், சூப், மிருதுவான பானங்கள் போன்றவற்றுடன் கலந்து உண்ணலாம்.


 • இஞ்சி டீ

  இஞ்சியில் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்ற ஆக்ட்டிவ் காம்பௌண்ட் உள்ளது. இந்த கலவை இரத்த கட்டை நீக்க பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. குணமாதலை விரைவுபடுத்த நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது இஞ்சி டீ பருகவேண்டும். எனினும் உங்கள் மருத்துவ ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.


 • கற்பூரவள்ளி

  கற்பூரவள்ளி பலவகையான பயன்கள் கொண்ட மூலிகை. இது மென்மையாக்கும் மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மூலிகையில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தட்டணு திரட்டலை குறைக்க இது ஒரு பாதுகாப்பான காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதால் இரத்த கட்டால் நீங்கள் அவதிப்பட்டால் கற்பூரவள்ளியை உட்கொள்வது சிறந்த தேர்வு. இந்த வலிமைமிக்க மூலிகையை வித விதமான உணவுகளிலும் சாலடுகளிலும் சேர்த்து உண்ணலாம்.


 • செய்ய வேண்டியவை

  இரத்தக் கட்டிகளால் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இயற்கை சிகிச்சைகள் அல்லது வீட்டு வைத்தியம் பாதுகாப்பானவை. இருப்பினும், உங்கள் உடலில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். அதனால்தான் சரியான சிகிச்சையைப் பெற உங்கள் மருத்துவரை அணுகும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழியில் நீங்கள் உங்களுக்கு இரத்தக்கட்டு ஏற்பட்டதற்கான காரணத்தையும் அது மறுபடியும் ஏற்படாமல் தடுக்கும் முறையையும் அறியலாம்.
உடல் உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் முக்கியமான திரவம் இரத்தமாகும். உடலின் குறிப்பிட்ட பாகத்திற்கு இரத்தம் சரியாக செல்லாத போது அந்த உறுப்பு செயலிழக்கிறது. உடல்நல வல்லுநர்கள், இரத்த உறைவு இருப்பது, இரத்தம் உறுப்புகளுக்குப் பாய்வதை தாமதப்படுத்தி கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

உதாரணமாக, தமனிகளில் இரத்தம் உறையும்போது மாரடைப்பு மற்றும் பக்க வாதம் போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

   
 
ஆரோக்கியம்