Back
Home » பயணம்
5 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படும் செண்பகத்தோப்பு..! மர்மம் தெரியுமா ?
Native Planet | 10th Jul, 2018 04:34 PM
 • செண்பக தோப்பு


  திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. வனங்கள் அடர்ந்த பகுதியான இது சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அடிவாரம் முழுவதும் மாமரங்களும் இதர பழ மரங்களும் நிறைந்த பசுமையான வனப்பகுதியை உடைய செண்பகத் தோப்பு யானை, புலி, கரடி, காட்டெறுமை, மான், செந்நாய் போன்ற மிருகங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது.

  Balu4care


 • மலைக் கோவில்


  இங்குள்ள ராக்காச்சியம்மன் கோவில், பேச்சியம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. கோவில்களின் அருகே ஓடை ஒன்றும் ஓடுகிறது. அங்கிருந்து, மலையின் மேல் 5 கிலோ மீட்டர் தொலைவு ஏறிச் சென்றால், காட்டழகர் கோவில் உள்ளது. இங்குள்ள நூபுர கங்கையில் எப்போதும் வற்றாமல் தண்ணீர் விழும். இது மூலிகை ஆற்றல் மிக்க துர்த்தம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதில் குளிக்கத் தவறுவதில்லை.

  Srithern


 • அழகு ததும்பும் அருவி


  கோவில் சுற்றுப்புறம் இயற்கை அழகு தளும்பி நிற்கும் அடிவாரத்திலிருந்து கோவில் செல்லும் பாதையில் ஏழு ஓடைகளும் இரண்டு அருவிகளும் உள்ளது. தற்ப்போது மேற்க்குதொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் அருவிகளில் நீர்வரத்து பெருகியுள்ளது. அருவியின் அடிப்புறம் வழுக்குப்பாறை உள்ளது. சுமார் 500 மீட்டர் நீளம் உடைய இந்தப் பாறையின் மேற்பரப்பில் ஓடும் நீரோடு நாமும் நீந்தி வியைடலாம். அருவியின் கீழே ஆழமற்ற நீர்த்தடாகமும் உள்ளது. அதில் நீந்தி விளையாட அருமையாக இருக்கும்.

  Balu4care


 • 5 மணிக்கு மேல்...


  திருவில்லிப்புத்தூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் செண்பகத்தோப்புக்கு பேருந்து வசதி உள்ளது. ஆட்டோக்களிலும் செல்லலாம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காட்டழகர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு தான் மண்டூக முனிவருக்கு, விஷ்ணு சாப விமோசனம் கொடுத்ததாக தொன்நம்பிக்கை உள்ளது. இன்றும் முனிவர் இந்த வனப்பகுதியில் சுற்றிவருவதாக நம்பப்படுகிறது. இதனாலேயே மாலை 5 மணிக்கு மேல் பொதுமக்கள் இப்பகுதிக்கு வருவதை தவிர்க்கின்றனர்.

  Balu4care


 • சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்


  அய்யனார் அருவி

  ராஜபாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அய்யனார் அருவி. இதன் அருகில் நீர்காத்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளின் பசுமையை ரசித்தவாறே அருவியில் குளிப்பது அலாதியானது. ராஜபாளையத்தில் இருந்து காலை, மாலையில் பேருந்து வசதி உள்ளது.

  Pragadeeshraja


 • பிளவக்கல் அணை


  விருதுநகர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட சுற்றுலா தலம் பிளவக்கல் அணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நான்கு புறமும் மலைகள் சூழ அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி பகுதியில் இருந்து ஆட்டோக்களில் செல்லலாம். அணையில் மீன் பண்ணை உள்ளது. பல்வேறு வகை மீன்களை இங்கு ரசிக்கலாம்.

  Srinivasan KB


 • தாணிப்பாறை


  வத்திராயிருப்பு அருகே கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் தாணிப்பாறை. இங்கிருந்து தான் சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மலை ஏறுகிறார்கள். தாணிப்பாறையில் அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் தண்ணீரில் சறுக்கி விளையாடும் வகையில் பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளது இதன் சிறப்பு அம்சம். வத்திராயிருப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

  Rameshng


 • இருக்கன்குடி மாரியம்மன் கோவில்


  விருதுநகரில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவிலும், சாத்தூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோவில். கோவில் அருகிலேயே வைப்பாற்று நீரை தடுத்து நிறுத்தி அணை கட்டப்பட்டு உள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவிகிறார்கள். இங்கு தங்குவதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறைகள் உள்ளன. விருதுநகர், சாத்தூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

  Srithern
தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் உள்ள இங்கு அமைந்துள்ள கோவில்கள் இந்தியா முழுவதிலும் புகழ்பெற்றனவாக இருக்கின்றன. தமிழக மக்கள் இவற்றை புனிதமானதாக மதிக்கின்றார்கள். இந்த கோவில் நகரத்தில் பல்வேறு அற்புதமான இடங்கள் இருக்கின்றன. 108 திவ்யதரிசனங்களில் ஒன்றான ஸ்ரீ ஆண்டாள் கோவில் மகா விஷ்ணுவின் வீடுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இன்னும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இங்கு அமைந்துள்ள செண்பகத்தோப்பு குறித்து கேள்விப்பட்டதுண்டா ?. வாங்க, அங்க என்ன இருக்கு, எப்படிச் செல்லலாம் என பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்