Back
Home » ஆரோக்கியம்
திக்கு வாய் பிரச்சனையா..? இதோ அதனை சரிசெய்ய வழிகள் பல இருக்கிறது..!
Boldsky | 11th Jul, 2018 10:36 AM
 • திக்குவாய்-உளறல்:-

  பொதுவாக நம்மில் பலருக்கு "ழ" உச்சரிப்பு வருவது கடினம்.அதே போன்று தான் இந்த திக்குவாய் பிரச்சனையும்.

  திக்குவாய் என்பது பேச நினைக்கும் வார்த்தையை தெளிவின்றி அல்லது சொன்ன வார்த்தையையே பல முறை திருப்பி திருப்பி பேசுவதே.மேலும் தொடக்கத்தில் சொன்ன அதே வார்த்தையை அழுத்தி சொல்வதோடு,கண்ணையும் சிமிட்டி கொண்டு பேசுவதே.


 • திக்குவாயால் பாதிக்கப்பட்டோர் :-

  இந்த திக்குவாய் பிரச்சனை பொதுவாக குழந்தை பருவத்திலே தொடங்கிவிடும். அஃதாவது,3 முதல் 7 வயதில் இருந்தே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவர்.

  மேலும் இதன் விளைவு 10 வயதுக்கு மேல் அதிகரிக்கும். உலக அளவில் நான்கில் ஒருவர் இந்த திக்குவாய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் . இஃது பெண்களை காட்டுலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படும்.


 • திக்குவாய் ஏற்பட காரணங்கள்:-

  குரல்வளை வளரும் பருவமான 2 முதல் 5 வயதிலேயே இந்த பிரச்சனையும் வளர தொடரும். இதற்கு பொதுவான காரணமாக மருத்துவர்கள் கூறுவது...
  -வாய் மற்றும் அதன் தசைகள் பேச இயலாமல் செயல் திறன் குறைவது.
  -நரம்பு தசைகளில் பிரச்சனை.
  -நாக்கு மற்றும் உதடுகளில் பேச பிழற்றுதல்.
  எப்படி இருந்தாலும் இதனால் ஒருவர் தன்மீது உள்ள நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது. காரணம் பேச்சு திக்குவதால் ஏற்படும் தயக்கம், குழப்பம், பயம், இவை தான்.


 • பயிற்சிகள் :-

  திக்குவாய் என்பது மிக கடினமான நோய் ஒன்றும் இல்லை.அதனால் இதனை கண்டு பயம் கொள்ள வேண்டாம்.இதனை எளிய முறையில் சரி செய்யலாம்.அதற்கு வாய்,ஜவ்வு,நாக்கு,உதடு,தொண்டை, ஆகிய பகுதிகளின் சக்தியை அதிகரிக்க வேண்டும். எனவே பின்வரும் பயிற்சியை மேற்கொண்டால் எளிதாக திக்குவாயில் இருந்து விடுபடலாம்.

  பயிற்சி 1:-
  எழுத்துக்களை முதலில் தெளிவாகவும்,அழுத்தமாகவும் சொல்லி பழக வேண்டும். ய,ர,ல,வ,ழ,ள போன்ற தொண்டையில் பிறக்கும் எழுத்துக்களை அடிக்கடி சொல்லி பார்க்க வேண்டும்.
  இதனால், சொற்கள் தடை இன்றி வர வழி பிறக்கும்.


 • பயிற்சி 2:-

  வாயை நன்கு திறந்து பேச வேண்டும். வாயில் உள்ள ஜவ்வு திறக்கும் போது அதன் தசைகளும் பேசுவதற்கு உதவி செய்யும்.

  இதனால் தடை இன்றி பேச முடியும்.தினமும் உங்கள் நாக்கை வெளியே நீட்டி கீழ்புறமாக மசாஜ் செய்யவும். இதனை 4 முதல் 5 வரை செய்தால் தசைகள் வலுவடையும். பேச்சும் திக்கி திணறல் பேசலாம்.


 • பயிற்சி 3:-

  அடுத்து, மூச்சு பயிற்சியை மேற்கொள்ளலாம். அதற்கு மூச்சை நன்கு மெல்ல உள்ளே இழுத்து மறுபடியும் மெல்ல வெளியே விடவும்.இதனால் தயக்கம்,பயம் இன்றி பேச முடியும்.

  பொதுவாகவே மூச்சை நெஞ்சில் இருந்து சுவாசிப்பதற்கு பதிலாக வயிற்றில் இருந்து சுவாசிக்க வேண்டும். அப்போது தான் அஃது நல்ல சுவாச முறை ஆகும்.


 • பயிற்சி 4:-

  வேகமாக படித்தல் ஒரு அற்புதமான வழி. திக்கு வாய் பிரச்சனை உள்ளோர் இதனை பழகினால் விரைவில் குணம் அடையலாம்.

  வேகமாக படிக்கும் போது சொற்கள் பயிற்சி பெற்று சரளமாக பேச வழி வகுக்கும்.
  பாடுதல் மற்றோரு அருமையான வழி. அடிக்கடி பிடித்த பாடல்களை பாடி பார்த்தால் இதற்கு எளிமையான முறையாக இருக்கும்.


 • குடும்ப ஆதரவு:-

  திக்கு வாயால் பாதிக்கப்பட்டோருக்கு குடும்ப சூழல் மிகவும் உதவி கரமாக இருக்க வேண்டும்.அவர்கள் திக்கி பேசுகிறார்கள் என்று ஒதுக்கி வைப்பதோ , அல்லது கேலி செய்வதோ கூடாது.அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டாலே பாதி திக்குவாய் பிரச்சனை தீர்ந்து விடும்.

  பேச்சு சிகிச்சையாளரை அணுகவும்:-
  இதற்கென்று பிரத்யேகமாக இருக்கும் பேச்சு சிகிச்சையாளர் போன்ற மருத்துவரை அணுகினால் மேலும் சீரான முறையில் பேச இயலும்.


 • திக்குவாயிற்கு சாப்பிட கூடியவை:-

  -நெல்லிக்காய்

  -பாதம்

  -உலர்ந்த டேட்ஸ்
  இது போன்ற சிறந்தவற்றை சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 • லிடக்கோம்பே ப்ரோக்ராம் :-

  உலக அளவில் இந்த லிடக்கோம்பே மருத்துவ முறை மிகவும் அதிக அளவில் பின் பற்ற படுகிறது. சிறுவயது முதலே இந்த திக்குவாய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முறையால் அதீத கவனம் செலுத்த படுகிறது.

  இதற்கென்றே பிரத்தியேகமாக பல வழி வகைகளை ஆராய்ந்து உள்ளனர்.

  இந்த மருத்துவ முறை மிகவும் கனிவுடனும்,நேச முறையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  "பிரிட்டிஷ் ஸ்டேமராமிங் அசோசியேஷன் அண்ட் தி ஆஸ்திரேலியன் ஸ்டட்டர்டிங் ரிசர்ச் சென்டர்" ஆராயிச்சி மையம் இதை பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.
திக்கு வாய் பிரச்சனை கொண்டவரா நீங்கள்...? உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை கேலி செய்கிறார்களா..? பேசும்போது மிகவும் உளறல் ஏற்படுகிறதா..?

பேசுவதற்கு கூச்சமாக உள்ளதா..? இதனை சரி செய்ய வழி முறைகளும், எதனால் இஃது ஏற்படுகிறது என்றும் தெரிந்து கொள்ள வேண்டுமா..? அதற்கு பின்வரும் கட்டுரையை படிக்கவும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சனை இருக்க கூடும்.சிலருக்கு உடல் ரீதியாகவும்,சிலருக்கு மன ரீதியாகவும், சிலருக்கு சூழல் ரீதியாகவும், பல பிரச்சனைகள் உண்டு.இதில் பல பிரச்னைகளை எளிதாக கடக்க முடியும்.

அதே போன்று ஒன்றுதான் இந்த திக்குவாய்- உளறல் பிரச்சனையும்.உலகில் பல பேர் இந்த வித பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதலால் இஃது ஒன்றும் அவ்வளவு கொடிய பிரச்சனை அல்ல..! இதனை பற்றி பின்வருமாறு அறியலாம்.

   
 
ஆரோக்கியம்