Back
Home » உலக நடப்புகள்
கிருஷ்ணா பரமாத்மா பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்!
Boldsky | 11th Jul, 2018 02:45 PM
 • பெயர்க் காரணம்

  கிருஷ்ணர் என்னும் பெயரே ஒரு பண்பு பெயர்தான். அதன் அர்த்தம் " கருப்பு" அல்லது " இருண்ட" என்பதாகும். கிருஷ்ணருடைய நிறத்தால்தான் அவருக்கு " கார்மேக கண்ணன்" என்னும் பெயரும் வந்தது. கிருஷ்ணா என்பதன் மற்றொரு பொருள் "வசீகரிக்க கூடியவன்" என்பதாகும் . அந்த வகையில் இந்த பெயர் மிகவும் பொருத்தமானதுதானே.


 • மனைவிகள்

  அனைவரும் நினைத்து கொண்டிருப்பது போல கிருஷ்ணருக்கு பாமா மற்றும் ருக்மணி மட்டும் மனைவிகள் அல்ல. அவர்களையும் சேர்த்து மொத்தம் அவருக்கு 8 மனைவிகள், அவர்கள் அஷ்டபார்யா என்று அழைக்கப்படுகிறார்கள். விதர்ப தேசத்து இளவரசி ருக்மணியை அவருடைய விருப்பத்தின் பேரில் கடத்திச் சென்று திருமணம் செய்தார். மீதமுள்ள மனைவிகளின் பெயர்கள் சத்தியபாமா, ஜாம்பவதி, களிந்தி, மித்ரவிந்தா, நாக்னஜிதி, பத்ரை மற்றும் லக்ஷ்மணை.


 • எல்லையற்றவர்

  கிருஷ்ணருக்கு எல்லை என்பதே கிடையாது அவர் மனித வாழ்க்கைக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர். பல ஆண்டுகளை கடந்தும் கிருஷ்ணருக்கு வயது முதிர்வு என்பதே இல்லையென புராணங்கள் கூறுகிறது. மகாபாரத்திலியே அர்ஜுனனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டும்போது தான்தான் உலகின் சகலமும் எனக்கு எந்த எல்லைகளும், வரைமுறைகளும் கிடையாது என்று கூறியிருப்பார்.


 • மதம்

  கிருஷ்ணர் ஜைன மதத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். அதனால்தான் அவர் வாசுதேவ கிருஷ்ணர் என்றும் அழைக்கப்படுகிறார். வாசுதேவர் என்றால் வீரர்களுக்கெல்லாம் வீரர் என்று பொருள்.


 • திரௌபதியின் சகோதரர்

  மகாபாரதத்தில் இருந்த ஒரு அற்புதமான உறவு கிருஷ்ணர் மற்றும் திரௌபதி இடையே இருந்த பவித்திரமான உறவாகும். புராணங்களின் படி அவர்கள் இருவரும் சகோதர, சகோதரிகள் என்று நம்பப்படுகிறது. கிருஷ்ணர் திருமாலின் அவதாரம் என நாம் அறிவோம் ஆனால் திரௌபதி பார்வதி தேவியின் அவதாரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மகாபாரதத்தில் சபையில் வைத்து துயிலுரித்த போதும் சரி , துருவாச முனிவரின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்த போதும் சரி திரௌபதிக்கு இன்னல் நேரும்போதெல்லாம் அங்கே அவரை காப்பாற்ற கிருஷ்ணரே வந்திருப்பார்.


 • ஏகலைவன்

  பலரின் பரிதாபத்திற்கு உரிய கதாபாத்திரம் ஏகலைவன் ஆகும். குருபக்திக்கு சிறந்த உதாரணமாக கூறப்படும் ஏகலைவன் குருதட்சணையாக தன் கட்டைவிரலையே துரோணாச்சாரியாருக்கு கொடுத்தார். கிருஷ்ணர் ஏகலைவனுக்கு மறுபிறவியில் திருஷ்டத்துய்மனாக பிறப்பாய் என்று வரம் கொடுத்தார். அதன்படியே ஏகலைவன் திருஷ்டத்துய்மனாக பிறந்து போரில் துரோணாச்சாரியாரை கொன்றார்.


 • ராதை-கிருஷ்ணர்

  ராதை மற்றும் கிருஷ்ணரின் காதல் கதை மிகவும் பிரபலமானது. ஆனால் உண்மையில் மஹாபாரதத்திலோ, அல்லது கிருஷ்ணரின் வாழ்க்கை குறிப்பான ஹரிவன்ஷத்திலோ ராதையை பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை என்பதே உண்மை.


 • காந்தாரியின் சாபம்

  எல்லைகளற்ற கிருஷ்ணருக்கும் ஒரு முடிவு வந்தது மாதா காந்தாரியின் சாபத்தின் வடிவில். தன் அனைத்து புத்திரர்களையும் போரில் இழந்த காந்தாரி அதற்கு காரணமான ஸ்ரீகிருஷ்ணருக்கு யாதவ இனமே அழியும் என சாபம் அளித்தார். அதற்கு கிருஷ்ணர் அப்படியே ஆகட்டும் என்று அமைதியுடன் கூறினார். ஸ்ரீகிருஷ்ணர் அனைத்து சாபங்களுக்கும் அப்பாற்பட்டவர் இருப்பினும் தனது முடிவும் இந்த உலக நன்மைக்கு தேவையான ஒன்று என்பதை உணர்ந்த கிருஷ்ணர் அந்த சாபத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.


 • துவாரகை அழிவு

  போர் முடிந்தபின் துவாரகைக்கு திரும்பிய கிருஷ்ணர், அங்கு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தார். அதீத சுகபோகத்தால் துவாரகை மக்கள் ஒழுக்கமில்லாதவர்களாய் மாறினார்கள். வசிஷ்டர், விசுவாமித்திரர், துருவாசர் போன்ற மாமுனிவர்கள் துவாரகை சென்றபோது அங்கே அம்மக்கள் நடந்துகொண்ட விதத்தால் கோபமடைந்த முனிவர்கள் யாதவ இனம் அழியும்படி சாபம் அளித்தனர்.


 • கிருஷ்ணரின் மறைவு

  காந்தாரி மற்றும் முனிவர்களின் சாபம் பலித்தது. யாதவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு அழிந்தனர். இதனால் மனமுடைந்த கிருஷ்ணர் துவாரகைவிட்டு வனத்திற்குள் சென்றார். தன் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த கிருஷ்ணருக்கு துருவசர் " நீ உன் பாதம் மூலமாகத்தான் இறப்பாய் " என்று அளித்த சாபம் நினைவுக்கு வந்தது. எனவே ஒரு மரத்திற்கு அடியில் படுத்து ஜீவ நிலையை அடைந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த வேடன் கிருஷ்ணரை விலங்கு என நினைத்து எய்த அம்பு கிருஷ்ணருடைய உயிரை பறித்துச் சென்றது. கிருஷ்ணரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது யாதெனில் எவ்வளவுதான் ஆற்றலும், அதிகாரமும் இருந்தாலும் ஒழுக்கம் இல்லையெனில் மனித வாழ்க்கை அர்த்தமற்றதாய் போய்விடும்.
ஸ்ரீகிருஷ்ணரை பற்றி அனைவரும் அறிவோம். அவர் திருமாலின் அவதாரம், உலக நன்மைக்காக குருஷேத்திர போரை நடத்தி அதில் நீதியின் பக்கம் நின்று பாண்டவர்களை வெற்றிபெற வைத்தார். கிருஷ்ணருடைய அருளும், புத்திக்கூர்மையும் இல்லையெனில் போரில் பாண்டவர்கள் நிச்சயம் வெற்றிபெற்றிருக்க முடியாது. அதுமட்டுமின்றி போரில் மனமுடைந்திருந்த அர்ஜுனனுக்கு அவர் கூறிய கீதஉபதேசமே பகவத்கீதை என்னும் அரிய நூலானது. அதனால்தான் அவரை கிருஷ்ண பரமாத்மா என்று நாம் அழைக்கிறோம்.

மகாபாரதம் முழுவதுமே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே இருந்த பகை, திரௌபதியின் சபதம் மற்றும் பாண்டவர்கள் எவ்வாறு போரில் வெற்றியடைந்தார்கள் என்பது பற்றி மட்டுமே இருக்கும். கிருஷ்ணருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், அவருடைய மகிமைகளும் பெரிதாக பேசப்பட்டிருக்காது. கிருஷ்ண லீலையில் கூட அவரின் குழந்தை பருவம் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருக்கும். எனவே இங்கு கிருஷ்ண பரமாத்மா பற்றி பலரும் அறியாத செய்திகளை இங்கு பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்