வாட்ஸ்அப் குறுந்தகவல் செயலியை நம்மில் பலர் எந்நேரமும் பயன்படுத்தி வரும் சூழலில், சில சமயங்களில் அதனை கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சிக்கலை சரிசெய்யவே வாட்ஸ்அப் வெப் சேவை துவங்கப்பட்டது. இதை கொண்டு பிரவுசரிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.
வழக்கமான வாட்ஸ்அப் வெப் இன்றி மற்றொரு வழிமுறையை கொண்டும் வாட்ஸ்அப் செயலியை கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். இதற்கு செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்.