Back
Home » ஆரோக்கியம்
உங்கள் வீட்டு சமையல் அறையில் மறைந்துள்ள 8 மருத்துவ ரகசியங்களும் அதன் பயன்களும்.
Boldsky | 12th Jul, 2018 11:46 AM
 • மாதவிடாய் வலியா ..?

  பல பெண்களுக்கு மாதத்துக்கு ஒரு முறை இந்த மாதவிடாய் வலி வந்து விடும்.இதனை எளிய முறையில் சரி செய்ய சீனர்கள் பெரும்பாலும் நம்ம சமையல் அறையில் உள்ள "இஞ்சி"யை தான் அதிகம் உபயோகிக்கின்றனர். ஆம்..! இஞ்சி மாதவிடாய் காலத்தில் இரத்த போக்கை அதிகரிக்கும்.மேலும் தசைகளின் வீக்கத்தை குறைத்து,கர்பப்பையில் ஏற்பட்டு இருக்கும் பிடிப்புகளை குணப்படுத்தும் ஆற்றல் வல்லது. உங்களது மாதவிடாயின் போது வலி இருந்தால் இஞ்சி டீ குடியுங்கள். இஃது ஒரு அற்புதமான நிவாரணமாக செயல்படும்.


 • வறண்ட தோலா..?

  தோல் பார்ப்பதற்கு மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அதற்கு ஒரு அருமையான தீர்வு "கடல் உப்பு". இது பல விதமான தோல் பிரச்சனைகளை சரி செய்ய வழி செய்கிறது. பொதுவாகவே கடல் உப்பு உடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. முட்டி,பாதம்,முழங்கைகள் ஆகிய இடத்தில் ஏற்பட்ட கடினமான காயங்களை இது குணபடுத்திவிடும். மேலும் சுர சுரப்பான தோல் பகுதிகளை மென்மையாக மாற்ற கூடிய சக்தி இதற்கு உண்டு.இருப்பினும் முகம் போன்ற முக்கிய பகுதிகளில் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


 • வீங்கிய கண்களா..?

  பலருக்கு காலையில் எழுந்தவுடனும், கண்கள் வீங்கிய நிலையில் இருக்கும்.மேலும் சிலருக்கு அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தாலோ, அல்லது கணினியை அதிக நேரம் பயன்படுத்தினாலோ கண்கள் வீங்க ஆரம்பித்து விடும். இப்படிபட்ட பிரச்சனை உள்ளோர்க்கு ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. இதற்கு "வெள்ளரிக்காயை " வெட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து எடுத்தாலே போதும். வீக்கம் குறைந்துவிடும். ஏனெனில் வெள்ளரிக்காயில் 95% தண்ணீரே உள்ளது. எனவே இது கண்களின் இரத்த குழாய்களில் ஏற்படட அழுத்தத்தை குளுமை படுத்தி குறைத்துவிடும். மேலும் கண்களில் கருவளையம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.


 • அடிக்கடி விக்கலா..!

  சிலருக்கு விக்கல் அடிக்கடி ஏற்படும்.இதனால் சாப்பிட கூட அவஸ்தை படுவார்கள். விக்கலானது நிற்க வேண்டும் என்றால் முதலில் வாகஸ் நரம்பானது கொஞ்சம் தூண்டப்பட வேண்டும்.அப்போது தான் அது விக்கலை நிறுத்த வழி செய்யும். அதற்கு சர்க்கரையே தீர்வு...! ஆம்... விக்கல் வரும்போது சர்க்கரையை சிறிதளவு எடுத்து அடி நாக்கில் வைத்து விடவும்.இஃது வாகஸ் நரம்பை தூண்டி விக்கல் நிற்குமாறு செய்து விடும்.


 • நெஞ்செரிச்சலா..?

  இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு எப்படிப்பட்ட உணவு என்று தெரியாமலே நாம் உண்கின்றோம்.ஆனால்,அது பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது.அதிலும் குறிப்பாக நெஞ்செரிச்சல் மிகவும் மோசமானது.இதனை சரி செய்ய கூடிய வழிதான் "ஆப்பிள்". பெக்டின் என்ற நார்சத்து ஆப்பிளில் உள்ளதால் ,அஃது வயிற்றில் உள்ள அமிலங்களை இயல்பாகவே உறிஞ்சுவிடும் தன்மை கொண்டது. மேலும் இதில் மாலிக் மற்றும் டார்ட்டாரிக் அமிலங்கள் உள்ளதால் அதிக நன்மைகளை ஏற்படுத்த கூடியது. அத்துடன் இஃது உடலில் pH யை சரியான அளவில் வைக்க உதவுகிறது.


 • அரிப்புகள்,வீக்கங்கள் போக்க.."

  அதிக மாசு ஏற்படுவதால் தோலில் அரிப்புகள்,வீக்கங்கள் ஏற்பட பல வாய்ப்புள்ளது. இதனை சரி செய்ய ஒரு அற்புதமான வழி இருக்கிறது. ஓட்ஸ் தான் இதற்கு விடை..! ஓட்ஸில் உள்ள பிட்டோகெமிக்கல்ஸ் வீக்கம்,அரிப்பு போன்றவற்றை தடுக்கும் தன்மை கொண்டது. எனவே 1/3 கப் அரைத்த ஓட்சுடன் மிதமான தண்ணீரை சிறிதளவு ஊற்றி நன்கு கலக்கி அதனை வீக்கம் ,அரிப்பு ஏற்பட்ட இடத்தில் 10 நிமிடம் தடவி பின் கழுவினால், விரைவில் குணமடையும்.


 • மாதவிடாயின் போது மனவுளைச்சலா..?

  பெண்கள் என்றாலே மாதவிடையின் போது எண்ணற்ற பிரச்சனைகள் வர கூடும்.85% பெண்களுக்கு அதிக அளவில் இந்த பாதிப்பு இருக்கிறது என்று ஒரு அறிக்கை சொல்கிறது.அதனை சரி செய்ய உங்கள் சமையல் அறையிலே இருக்கும் பாதாம் ஒரு அட்டகாசமான நிவாரணம். இஃது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன உளைச்சல் ஏற்படாமல் தவிர்க்கும். மேலும் ப்ரோக்கோலி, இலை கீரைகள் மற்றும் கால்சியம் நிறைந்த பொருட்களை மாதவிடாயின் போது உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நன்று.


 • மலச்சிக்கலா..?

  உணவு கட்டுபாடின்றியும்,உணவு முறையின் புரிதல் இன்றியும் நாம் இருப்பதால் இந்த மலச்சிக்கல் ஏற்படுகிறது என்றே கூறலாம். கரைக்க முடியாத நார்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதால் இந்த மலசிக்கல் வருகிறது.இதற்கு தீர்வு "ப்ரூன்ஸ்" என்று சொல்லப்படும் இந்த கொடிமுந்திரி தான். இதில் உள்ள இயற்கையான மலமிளக்கிகள், சர்பிபோல் மற்றும் டிஹைட்ரோபினிலலிடின் நம் உணவை சீரான முறையில் செரிக்க செய்கிறது. மேலும் வயிற்று பகுதியை எரிச்சலின்றி மிதமான நிலையில் வைக்க உதவுகிறது.

  இவையே உங்கள் வீட்டு சமையல் அறையில் மறைந்து கொண்டுள்ள 8 மருத்துவ ரகசியங்களும் அவற்றின் பயன்களும்.
உங்கள் வீட்டு சமையல் அறையில் மறைந்துள்ள 8 மருத்துவ ரகசியங்களும் அதன் பயன்களும்.பொதுவாக நமக்கு சமைக்க தெரிந்த அளவிற்கு அந்த உணவின் மருத்துவ குணமும் பயன்களும் தெரிய வாய்ப்பில்லை.அதனை பற்றி விளக்குவதே இந்த கட்டுரை. இந்த கட்டுரையில் சமையல் அறையில் மறைந்துள்ள 8 மருத்துவ ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

நம்மில் பலர் இன்றளவும் கூட மருத்துவமனை பக்கம் போகாமலே பல நோய்களை வீட்டில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களை வைத்தே சரி செய்துவிடுகின்றர்.அதிலும் குறிப்பாக சமையல் அறையில் இருக்கும் அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் அறிய உணவு பொருட்களை வைத்தே குணம் அடைந்துவிடுகின்றனர்.இந்த முறை வைத்தியம் நமக்கு புதிது ஒன்றும் இல்லை. இஃது நம் முன்னோர்களிடம் இருந்தே வழி வழியாக பின்பற்றபட்டு வருகிறது.

   
 
ஆரோக்கியம்