Back
Home » செய்தி
மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம்: தாயை கொன்று புதைத்த மகன்.. 2 மாதங்களுக்கு பிறகு அம்பலமான உண்மை
Oneindia | 12th Jul, 2018 05:54 PM
  • நெஞ்சை உலுக்கும் சம்பவம்

    சாலையோரங்களில் ஆதரவற்று சாப்பாட்டுக்கு கையேந்தும் முதியவர்களில் பலர் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பெற்ற பிள்ளை செய்த ஒரு காரியம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.


  • தாய் உய்யம்மாள்

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உய்யம்மாள். இவரது மகன் கலியமூர்த்தி.


  • திருமணத்திற்கு பின்

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கலியமூர்த்திக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கு பிறகுதான் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது.


  • மாமியார் மருமகள் சண்டை

    மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏகபொருத்தமாக இருந்துள்ளது. ஆகாத மருமகள் கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என மாமியாரும், மாமியாரால் தனது நிம்மதி போயிவிட்டதாக மருமகளும் நாள்தோறும் முடியை பிடித்துக்கொள்ளாத குறையாக சண்டைபோட்டு வந்துள்ளனர்.


  • முற்றுப்புள்ளி வைக்க முடிவு

    அவர்களின் சண்டையால் தெருவே அல்லோகலப்பட்டுள்ளது. இதனால் நிம்மதியை இழந்த கலியமூர்த்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.


  • தாய் கொன்று புதைப்பு

    ஒரு கட்டத்தில் மாமியார் மருமகள் சண்டை முற்றவே தாயை அடித்துக்கொன்றார் கலியமூர்த்தி. பின்னர் வீட்டு தோட்டத்திலேயே அவரை புதைத்துள்ளார்.


  • போலீஸில் புகார்

    இதைத்தொடர்ந்து தனது தாயை காணவில்லை என ஊர் மக்களை நம்ப வைத்துள்ளார். போலீஸிலும் புகார் அளித்துள்ளார்.


  • கண்டுபிடித்த போலீஸ்

    கடந்த இரண்டு மாதங்களாக காணமல் போன உய்யமாளை போலீசாரும் உறவினர்களும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பெற்ற மகனே தாயை கொன்று புதைத்தை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.


  • ஊர்மக்கள் அதிர்ச்சி

    இதையடுத்து மகன் கலியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக மகனே நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மயிலாடுதுறை: மனைவியுடன் தகராறு செய்த தாயை மகனே அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஆண்பிள்ளைகள் மாறிவிடுவார்கள், மனைவியின் சொல்படிதான் நடப்பார்கள், பெற்றவர்களை மறந்துவிடுவார்கள் என்ற பேச்சு சமூகத்தில் பரவலாக உள்ளது.

அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் ஆதரவற்று விடப்படுவதும், தெரியாத ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு பிள்ளைகள் சொல்லிக்காமல் வருவதும் அதிகரித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

   
 
ஆரோக்கியம்