Back
Home » ஆரோக்கியம்
வெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இதோ இதை படியுங்கள்..!
Boldsky | 12th Jul, 2018 05:54 PM
 • நல்ல உணவகம் :-

  போகும்போதே எந்த எந்த உணவகங்கள் ஆரோக்கியமான உணவுகளை தருகிறார்கள் என்பதை விசாரித்து வைத்து கொள்ளவேண்டும்.அப்போது தான் தரமான உணவுகளை நாம் கொடுக்கும் பணத்துக்கு உண்ண முடியும்.மேலும் ஊட்டச்சத்து மிகுதியாக உள்ள உணவுகளை தர கூடிய உணவகங்களை தேர்வு செய்தல் மிக நன்று.மற்றும் பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவகங்களில் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


 • ஆர்டர் செய்தல்:-

  உணவகங்களில் உணவு தேர்வில் இந்த முறை மிகுந்த முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக நாம் கடைகளில் சென்றவுடன் மெனு கார்டு பார்த்து அதில் உள்ள உணவுகளையே ஆர்டர் செய்வோம். அதிலுள்ள வண்ணமயமான உணவுகளையே நாம் அதிகம் ரசிப்போம்..!! ருசிப்போம்..!!
  ஆர்டர் செய்யும்போது வறுவல் சார்ந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது.ஏனென்றால் அவை கட்டாயம் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டாம்.


 • தேவையான அளவு:-

  "அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழ்" என்ற பழமொழியின்படி நமக்கு தேவையான அளவு மட்டும் உணவை உட்கொள்ள வேண்டும்.பல கடைகளில் "1 பிரியாணி வாங்கினால் இன்னொன்று இலவசம்" என்ற வாசகங்கள் போட பட்டிருக்கும்.இது ஒருவகையான வியாபார தந்திரமே..! ஆதலால் நிறைய தருகிறார்கள் என்று அளவில்லாமல் சாப்பிட்டு விட்டால் நமது ஆரோக்கியம் நம் கையில் இல்லை என்றே அர்த்தம். பஃபட் போன்ற உணவு முறைகள் நமது உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் வைத்து கொள்ளாமல் உணவை சாப்பிட தூண்டும்.ஆதலால் இதில் மிகுந்த கவனம் வேண்டும்.


 • பாஸ்ட் ஃபுட்ஸ்:-

  காலம் மாற மாற நமது உணவு பழக்கமும் மாறி கொண்டே வருகிறது.பீட்சா,பர்கர்,நூடுல்ஸ்,பிரைட் ரைஸ் போன்ற பொருட்களை தவிர்த்தல் உடலுக்கு மிக நன்று. ஏனென்றால் இதில் எண்ணற்ற கரைக்க முடியாத கொழுப்புகள் உள்ளது .மலசிக்கல்,பருமன்,நெஞ்செரிச்சல் போன்ற பல வயிற்று சார்ந்த கோளாறுகள் உடலுக்கு வர கூடும்.அதிகம் எண்ணெய் உள்ள பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.


 • சாலட்ஸ் :-

  இப்போதெல்லாம் வெளி கடைகளில் சலாட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளும் விற்கப்படுகின்றன.சலாட்ஸ் மிகவும் உடலுக்கு நல்லது.அஃது சுலபமாக ஜீரணம் ஆகக்கூடியது. பழ சலாட்ஸ் மற்றும் காய்கறிகள் கலந்த சால்ட்ஸ்கள் உடலுக்கு பல ஊட்ட சத்துக்களை தர வல்லது.மேலும் சாப்பிடும் போது மெல்ல சாப்பிடவும்.அதுவே உணவை செரிமானமாக்க சரியான வழியாகும்.


 • பாணி பூரி,சாட்ஸ்:-

  நாம் மாலை நேரத்தில் அதிகம் வெளியில் சென்றவுடன் சாப்பிடும் பொருட்களில் ஒன்று இந்த பாணி பூரி மற்றும் சாட்ஸ்.இவை மிகுந்த ருசி கொண்டமையால் நம் மூளை செல்களை தூண்டி இவற்றை அதிகம் சாப்பிட செய்கிறது.மேலும் அதிக கலரிங் ஏஜெண்ட்ஸ் கொண்ட உணவு வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.இல்லையேல் இவை புற்று நோய் கூட ஏற்படுத்தும் ஏற்றால் வாய்ந்தது.


 • குழந்தைகளிடம் கவனம்:-

  உணவகங்களுக்கு சென்றாலே குழந்தைகள் அது வேண்டும்...இது வேண்டும் என்றே அடம்பிடிப்பார்கள்.பெற்றோர்களும் அவர்களை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் கேட்க்கும் அனைத்தையும் வாங்கி தந்துவிடுவார்கள்.ஆனால் இது பல பிரச்சனைகளை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஏற்படுத்தும். பொதுவாக குழந்தைகளுக்கு விரைவில் ஜீரணமாகாத உணவுகள் தருவதை தவிர்க்க வேண்டும்.
உணவு..!! உணவு..!! இந்த உலகத்திலேயே மிகவும் முக்கியமான ஒன்று உணவுதான். ஆடை,ஆடம்பரம்,பணம், இவற்றில் எது வேண்டுமானாலும் இல்லாமல் வாழ முடியும். ஆனால் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் உணவின்றி வாழ இயலாது.மனிதனின் கண்டுபிடிப்பிலே மிக அற்புதமான ஒன்று இந்த உணவுதான்.ஆனால்,அப்படிப்பட்ட உணவின் சரியான சீரான பயனை நாம் அறிந்து கொள்ளாமலேயே அவற்றை பயன்படுத்துகின்றோம். அதன் விளைவாக எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றோம்.உடல் பருமன்,மல சிக்கல்,உடல் உபாதைகள், என பல பிரச்சனைகளால் நாம் அன்றாடம் அவதிபடுகின்றோம்.இதற்கு ஒரே தீர்வு உணவு முறையை பற்றிய புரிதலே...!!

நம்மில் பலருக்கு வெளி உணவகங்களுக்கு போய் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது.அங்கு வித விதமான உணவுகள் பரிமாறப்படுவதால் நாமும் அதற்கு சளைக்காமல் வேண்டியது வேண்டாதது என அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிடுகின்றோம் .இதனால் பல விதமான பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.பின்வரும் கட்டுரையில் உடல் நலம் கெடாமல் எவ்வாறு வெளி உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

   
 
ஆரோக்கியம்