Back
Home » ஆரோக்கியம்
வறட்டு இருமல் நிக்கவே இல்லையா?... இந்த ஒரு இலை போதும் உடனே நிறுத்த...
Boldsky | 12th Jul, 2018 07:26 PM
 • ஆராய்ச்சி

  நாராயணா சூப்பர்ஸ் பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள சீனியர் ஊட்டச்சத்து நிபுணருமான பர்மீத் காரு என்ன கூறுகிறார் என்றால் 5-7 துளசி இலைகளை 300-500 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை குடித்தாலே போதும் உங்கள் இருமல் பறந்தோடி விடும். இந்த கசாயத்தை தினமும் நீங்கள் குடித்து வந்தால் கருவளையம், பருக்கள், சரும வடுக்கள் மற்ற சரும நோய்கள் கூட காணாமல் போகும். அதுமட்டுமல்லாமல் இது நமது உடலில் உள்ள உடலுறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை மன அழுத்தத்திலிருந்து காக்கிறது. இதற்கு காரணம் இதிலுள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தாகும்.


 • ஆஸ்துமா

  ஆஸ்துமா போன்ற நிலையில் மூச்சுக் குழல் வீங்கி அதன் பாதை சிறியதாக ஆகிவிடும். இருமல் தான் இதன் முதல் அறிகுறியாகும். இதனால் நீங்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாக நேரிடும்.


 • இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்

  இந்த நோய் ஒரு நாள்பட்ட அமில நோயாகும். இந்த நோயில் வயிற்றில் உள்ள அமிலம் வாய் வழியாக எதுக்களித்தல் ஏற்படும். அதிகமான அமிலத் தன்மை உங்கள் உணவுக் குழலை எரிச்சலடையச் செய்து இருமலை ஏற்படுத்தும்.


 • வைரல் தொற்று

  நம்மைச் சுற்றி ஏராளமான நோய்களை பரப்பும் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த வைரஸ் தொற்றுகளாலும் இருமல் ஏற்படும். ஜலதோஷத்திற்கு பிறகு ஏற்படும் இருமல் சளியுடன் வெளிப்படும். வறட்டு இருமலானது உங்கள் மூச்சுக் குழல் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தி அசெளகரியத்தை உண்டாக்கும்.


 • சுற்றுச்சூழல் காரணிகள்

  நம்மைச் சுற்றி இருக்கும் புகை சூழல், காற்று மாசுக்கள், தூசி போன்றவற்றில் உள்ள கெமிக்கல் மூலக்கூறுகள் நாம் சுவாசிக்கும் போது சுவாசப் பாதையில் அழற்சியை ஏற்படுத்தி இருமலை உண்டாக்கும்.


 • புகை பிடித்தல்

  புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வறட்டு இருமல் ஏற்படும். சிகரெட்டில் உள்ள கெட்ட நச்சுக்கள் சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த நச்சுக்கள் அப்படியே நுரையீரலில் படிந்து இருமலாக வெளியேறும்.


 • மூச்சுக் குழாய் அழற்சி

  கடுமையான மூச்சுக் குழாய் அழற்சியானது ஜலதோஷம் மற்றும் ப்ளூ காய்ச்சலுக்குப் பிறகு பொதுவாக மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து இருக்கும். இது நீடித்தால் அப்படியே வறட்டு இருமலுடனோ அல்லது சளியுடனோ ஏற்படலாம்.


 • துளிசி டீ

  ஆயுர்வேத முறையில் தொன்மைதொட்டு பயன்படுத்தி வருவதுதான் இந்த துளிசி இலைகள். இந்த துளிசி இலைகளை கடவுளின் புனிதமாக கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்த இலைகளில் மைக்ரோபியல் தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த துளிசி டீ இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, வறட்டு இருமல் போன்ற எல்லா பிரச்சினைகளையும் போக்கும் ஒரு அற்புதமான பொருள். இதில் நிறைய ஆன்டி செப்டிக் மற்றும் அனலசிக் பொருட்கள் உள்ளன. இதன் நோயெதிர்ப்பு சக்தி வறட்டு இருமலை போக்கி நுரையீரலுக்கு உதவுகிறது.


 • தயாரிப்பது எப்படி

  இந்த துளிசி டீயை நீங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
  ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து அதில் 5-7 துளிசி இலைகளை போட வேண்டும். பிறகு மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

  பிறகு அடுப்பை அணைத்து விட்டு டீயை ஆற விடுங்கள். பிறகு அதை வடிகட்டி குடித்து வந்தால் வறட்டு இருமல் இல்லாமல் போகும்.
  வேண்டுமென்றால் இதனுடன் பட்டை, இஞ்சி, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவற்றை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

  இதனுடன் தேன் சேர்த்து கூட பயன்படுத்தி வரலாம். கண்டிப்பாக இது உங்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்து.
வறட்டு இருமல் பொதுவாக எல்லோரும் அனுபவிக்கும் ஒரு தொந்தரவு. மூச்சுக் குழல் பாதையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சளி ஆகியவை இதற்கு காரணமாக அமைகிறது. ஆனால் வறட்டு இருமலுக்கு பெரும்பாலும் சளி காரணமாக இருக்காது. இந்த வறட்டு இருமல் தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால் உங்களால் பல நேரங்களில் பேசக் கூட முடியாது. இந்த வறட்டு இருமல் சுற்றுச்சூழல் மாசு, அழற்சி மற்றும் நச்சுகள் என்று நம்மைச் சுற்றி இருக்கும் காரணிகளால் ஏற்படுகிறது. இந்த தொண்டையில் ஏற்படும் எரிச்சலை சில இயற்கை முறைகளைக் கொண்டே சரி செய்யலாம். அதில் துளிசி ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உங்கள் நாள்பட்ட இருமலைக் கூட குணப்படுத்தும் வல்லமை படைத்தது.

   
 
ஆரோக்கியம்