Back
Home » ஆரோக்கியம்
நைட் ஷிஃப்ட்ல வேலையா..? இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..?
Boldsky | 19th Jul, 2018 12:50 PM
 • #தண்ணீரே..!

  நீங்க நைட் ஷிஃப்ட் வேலையில இருக்குறவரா..? முதலில் உங்களுக்கு அதிகம் தேவையானது பணம்கூட இல்லைங்க...! இந்த தண்ணீர்தாங்க..' தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான் உங்கள் உடல் எடையை குறைக்க முதல் வழி. ஒரே இடத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் உட்காராமல் சிறிது அங்கையும் இங்கையுமாக நடந்து வருவது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைக்கும். உங்கள் மூளை களைப்படைந்து சோர்வாக இருக்கும் போதெல்லாம் தண்ணீர் குடித்தால் அந்த சோர்வு உடனே காணாமல் போய்விடும்.


 • #ஜங்க் ஃபூட்ஸ்

  இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு அதிகாலையில் விடு திரும்போது உங்கள் வயிறு பசி எடுக்கிறது..' என்றே சொல்லும். அந்த நேரத்தில் நீங்கள் பசி அடங்க வேண்டும் என்பதற்காக கண்ட உணவுகளையெல்லாம் வாயில் போட்டு கொறித்து கொண்டே இருப்பீர்கள். இதன் விளைவு அதிக எடை போடுதல். இதனை தவிர்க்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் வீட்டில் அதிக பழ வகைகள், பிரெஷ் ஜூஸ்கள், பச்சை காய்கறிகளால் தயாரித்த சாலட்களே முதன்மை மளிகை பொருட்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு நன்கு பசி எடுக்கும் போதெல்லாம் இவைகளை சாப்பிட்டாலே உடல் பருமன் ஆவதை தடுக்கலாம்.


 • #நல்ல தூக்கம்

  நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருந்தாலும் உங்களுக்கும் 6-8 மணி நேர தூக்கம் வேண்டியது மிக அவசியமே. அதிகாலை 3 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்கு வருபவர் என்றால்...' 3 மணியிலிருந்து 9 மணி வரை நன்றாக தூங்குவது உடல் எடை ஏற விடாமல் செய்யும். எப்போதும் தூங்கும் போது இருட்டான அரையிலையே தூங்க வேண்டும். லைட்டை போட்டு கொண்டு தூங்கினால் அது நல்ல தூக்கமாகாது. மேலும் தூக்கம் வரவில்லை என்றால் கண்களை கட்டிக்கொண்டு நிம்மதியாக தூங்குங்கள்.


 • #உணவே மருந்து

  இப்போலாம் நம்மில் பலர் மூன்று வேலை சாப்பாடு சாப்பிடும் பழக்கத்தையே விட்டுவிட்டோம். நேர காலமின்றி கண்ட நேரத்துக்கும் உணவுகளை சாப்பிடுகிறோம். உடல் எடை அதிகமாவதற்கு முதல் காரணமே காலம் தாழ்த்தி உணவு எடுத்து கொள்வதே. நைட் ஷிஃப்ட் முடிந்தவுடன் 6-8 மணி நேரம் தூங்கி எழுந்து, பிறகு காலை உணவை சாப்பிட்டு விட்டு அதன்பின்பு வேண்டுமென்றால் தூங்கி கொள்ளலாம். தூக்கம் வருகின்றது என்பதற்காக காலை உணவை மட்டும் சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள். காலை உணவை தவிர்ப்பதே உடலின் பல பிரச்சனைகளுக்கு காரணம்.


 • #காஃபி

  நைட் ஷிஃப்ட் என்றாலே நம்மில் பலருக்கு அடிக்கடி ஞாபகம் வருவது இந்த காஃபீ தான்... வரைமுறையே இல்லாமல் தோன்றும்போதெல்லாம் அதிக காஃபி குடிப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து விடும். அதோடு சேர்த்து உடலின் மெட்டபாலிசத்தை கெடுத்து உடல் எடை போடுவதற்கு வழி செய்கிறது. காஃபியில் உள்ள அதிக அளவு காஃபீன்கள் மூளைக்கு ஆரம்பத்தில் சுறுசுறுப்பு கொடுப்பது போல கொடுத்துவிட்டு பின்பு மழுங்க செய்து விடும்.


 • #வாக்கிங்- ஜாகிங்

  உடற்பயிற்சி உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. பெரிய பெரிய உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிலாக சிறிய அளவில் தினமும் 20 நிமிடம் வரை வாக்கிங் அல்லது ஜாகிங் செய்தலே பெரிய பலனை தர கூடியது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக முறையற்ற உடற்பயிற்சிகள் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


 • #வைட்டமின் டி

  உடலுக்கு அதிகம் தேவைப்படும் வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் டி. பலவித நோய்கள் இந்த வைட்டமின் டி குறைபாட்டால் வருகின்றது. எப்போதுமே ஏ.சி ரூமிலே உட்கார்ந்து கொண்டு உடல் எடையை ஏற செய்வதை விட சிறிது நேரம் சூரியனின் வெளிச்சத்தில் இருங்கள். அப்படி முடியவில்லை என்றால் முட்டை,பால், பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அது உடலின் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும்.


 • #சுடு தண்ணீர் குளியல்

  நம்மில் பலருக்கு பிடிக்காத ஒன்று இந்த சுட தண்ணீர் குளியல்தான். ஆனால் நல்ல ஆரோக்கியமான உடலை பெறவும், நிம்மதியான தூக்கத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு சுடு தண்ணீர் குளியல் அற்புதமான தீர்வை தரும். சுடு தண்ணீர் குளியல் என்றால் கொதிக்க கொதிக்க இருக்கும் தண்ணீரை கொண்டு குளிப்பது அல்ல. மிதமான சூடில் உள்ள தண்ணீரில் குளிப்பதே உடலை சீரான உஷ்ணத்தில் வைக்கும் அருமையான வழி.


 • #தூங்குவதற்கு முன் கார்ப்ஸ்

  என்னடா இவங்க இரவு தூங்குவற்கு முன்பு கார்போஹைடிரேட் உணவுகளை சாப்பிட சொல்ராங்கலேன்னு நினைக்குறீங்களா..? சில ஆராய்ச்சிகள் தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு கார்போஹைடிரேட் உணவுகள் எடுத்து கொண்டு உறங்கினால் 27 % உடல் எடையை குறைக்க முடியும் என்றே சொல்கிறது. அதற்காக எண்ணெய் அதிகம் உள்ள உணவு பொருட்கள் சாப்பிட வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை போன்ற உணவு வகைகளை சாப்பிட்டால் உங்கள் எடை கச்சிதமாக இருக்கும்.
இப்போலாம் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடுறதே ஒரு பெரிய வேலைதான்னு வி.ஐ.பி-களுக்கு நன்றாக தெரிஞ்சதுதான். இதையும் மீறி ஏதாவது வேலை கிடைச்சிட்டாலும் அது நைட் ஷிஃப்ட் வேலையாதான் இருக்கு. இதுல ஆண் - பெண் அப்படினு வேறுபாடுகள் இருக்கறதில்ல. ஏன்னா,நம்ம குடும்ப சூழல், அத்தியாவசியமான பொருட்களோட விலை கூடுறது, நிறைவேறாத ஆசைகள்....இப்படி ஒரு பெரிய லிஸ்டே போட்டுட்டு போகலாம். பணம் சம்பாதிக்கனும்னு நம்ம உடல் ஆரோக்கியத்தை நாம்ம கொஞ்ச கூட கண்டுக்கறதே இல்ல. இதன் பலனாக நமக்கு கிடைப்பது சின்ன வயசிலேயே உடல் பருமன்,சர்க்கரை நோய், அதிக மன அழுத்தம் போன்ற கொடூர ஜந்துக்கள் கிட்ட மாட்டிகிட்டு நாம்ம முழிக்கிறோம். இதுல இருந்தெல்லாம் விடுதலையே இல்லையானு கேட்டா..!? ஆம்..இருக்குனு..' பதில்கள் வரும்.

குறிப்பிட்டு சொல்லணும்னா இந்த பிரச்சனைகள்ல இருந்து தப்பிக்கனும்னா முதல் கேள்வியாக இருப்பது "அபரிமிதமா ஏறிக்கிட்டே போகுற இந்த உடல் எடையை எப்படி குறைப்பது..? என்ற கேள்விதான்.

உங்களுக்கு உங்க கஷ்டத்துல இருந்துலாம் விடுதலை கிடைச்சிடுச்சினு சந்தோஷப்படுங்க. உங்கள போல இருக்கும் நைட் ஷிஃப்ட் மனிதர்களுக்கு உடல் எடையை குறைக்க 9 வழிகள் இருக்கு. தெரிஞ்சிக்க ஆவலா..? தொடர்ந்து படியுங்கள்.

   
 
ஆரோக்கியம்