Back
Home » ஆரோக்கியம்
பிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்! என்னனு உங்களுக்கு தெரியுமா?
Boldsky | 20th Jul, 2018 06:51 PM
 • வார ரீதியான உணவு அட்டவணை

  அதிக வேலைப்பளுவால் கிடைத்ததை உண்டு, எப்பொழுதாவது உறங்கி என வாழாமல், வாரம் ஒரு நாள் மட்டுமாவது அடுத்து வரப்போகும் 7 நாட்களும் நீங்கள் என்ன உண்ண வேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும், எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி யோசித்து, உங்களுக்கு பிடித்தமான உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் கொண்ட வார உணவு அட்டவணையை தயாரித்து அதை பின்பற்றவும்.

  இதே போல், ஒவ்வொரு வாரமும் அட்டவணை தயாரித்து பின்பற்றி வருதல் நல்ல பலனை தரும். இந்த உணவு அட்டவணையில் அதிக காய்கள், பழங்கள், கீரைகள் இடம்பெறும் வண்ணம் பார்த்துக் கொள்ளவும். மேலும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது. நொறுக்குத்தீனி நேரத்தில், காய்கறி அல்லது கீரை கொண்டு தயாரித்த சூப், சாலட், பால், முளைகட்டிய பயறுகள், பழச்சாறு போன்றவற்றை உட்கொள்ளவும். காபி, டீ, இனிப்புகள், கொழுப்பு கொண்ட உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.


 • தண்ணீர் தண்ணீர்

  உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடுவதற்கு 1/2 மணிநேரம் முன் நன்கு தண்ணீர் பருகுவது நல்லது. இது வயிறை நிரப்பிவிடுவதால், உங்களால் குறைவான அளவே உட்கொள்ள இயலும். மேலும் உங்களுடன் எப்பொழுதும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நல்ல தண்ணீர் பாட்டிலை தண்ணீருடன் வைத்திருக்கவும்.

  எவ்வளவு உடல் எடையை குறைக்க வேண்டுமோ, அந்த அளவு நன்கு தண்ணீர் பருகுவது நல்லது. 10 லிட்டர் தண்ணீரை ஒரே நாளில் பருகினால் அது பிரச்சனையே ஆதலால், ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீரை கட்டாயம் பருகி வரவும்.


 • பழங்கள்

  உங்களுடன் எப்பொழுதும் இருக்க வேண்டிய அடுத்த விஷயம் பழங்கள்; அதிலும் திராட்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்களை கண்டிப்பாக வைத்திருத்தல் அவசியம். இவை உங்களுக்கு பிடிக்காத பழமாக இருந்தாலும் அவற்றை கண்டிப்பாக உட்கொள்ளல் நல்லது. இவை நல்ல பலனை அளிக்கும்; மேலும் நார்ச்சத்து நிறைந்த பழங்களையும், சிட்ரஸ் வகை பழங்களையும் அதிகம் உட்கொள்வது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும்.


 • உடற்பயிற்சி

  உடற்பயிற்சி என்று கூறியவுடனேயே ஜிம்மில் சேர்நது ஒர்க் அவுட் செய்வது என்று நினைக்க வேண்டாம். சரியான உணவு முறையை பின்பற்றுவது எத்துணை முக்கியமோ, அதே போல் போதுமான அளவு, உடலுக்கு தேவையான அளவு உடற்பயிற்சி செய்தல் அவசியம். உடற்பயிற்சி என்பது சிறிய பயிற்சிகளாக, நடைபயிற்சியாக, ஜாக்கிங்காக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இதற்கு என நேரத்தை ஒதுக்கி ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்து வருதல் நல்லது.


 • சாப்பிடும் முறை:

  சாப்பிடும் போது சரியான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளவும். அதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவது, செல்போன் பயன்படுத்திக் கொண்டே உண்பது, நடந்து கொண்டு அவசர அவசரமாக உண்பது போன்றவற்றை எல்லாம் நிறுத்தி, எதை உண்டாலும் பொறுமையாக இரசித்து, நன்கு மென்று உட்கொள்ளல் அவசியம்.

  ஏனெனில் நாம் உணவு உட்கொள்ளும் நிலையாலும் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆகையால், சரியான முறையில், முழுகவனத்துடன் உணவினை உட்கொள்ளல் வேண்டும். கவனத்துடன் சாப்பிடுவதால், 40 சதவிகித உடல் எடையை குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


 • பட்னி கிடக்க வேண்டாம்!

  உணவை எடுத்து செல்ல மறந்தோ அல்லது உணவினை வைத்திருந்தும் வேலைப்பளுவால் சாப்பிட மறந்து அல்லது நேரம் கழித்து உண்பது போன்ற செயல்களை எல்லாம் நிறுத்தி, நேரத்திற்கு உண்டு, இடைவேளை நேரங்களில், ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை உட்கொண்டு, அதிக தண்ணீர் பருகி வருதல் வேண்டும்.

  இவற்றில் எதையும் மறத்தல் கூடாது. இந்த விஷயத்தை கண்டிப்பாக நினைவில் கொண்டு நடத்தல் நல்லது; ஏனெனில் உணவு உண்ணாமல் விட்டுவிட்டால் அதாவது உணவினை உண்ணாமல் தவிர்த்தால் அதுவே உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாகிவிடும். உண்டு சேர்த்த எடையை கூட குறைத்து விடலாம்; உண்ணாமல் விட்டதால் கூடிய எடையை குறைப்பது என்பது அசாதாரண காரியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி செயல்படுங்கள் தோழர் - தோழிகளே!
உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல. எடையை கூட்டுவது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ, கூட்டிய எடையை குறைப்பது என்பது அசாதாரண சாதனையாக உள்ளது. பொதுவக அறியப்பட்ட 'அணுவை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்' என்ற கூற்று உண்மையாய் இருப்பது போல, உடல் எடையை கூட்டுவதும் குறைவதும் எளிது என்று இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்கித் தவிக்கும் நபர்கள் நம்மில் அதிகம். அதிலும் எந்நேரமும் "வேலை வேலை" என்று அலையும் ஒர்க்கஹாலிக் அதாவது ரொம்ப பிஸியான மக்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது பெரிய சவாலாக நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட பிஸியான மக்களுக்கு உதவும் வகையில், மிகவும் எளிமையான வழிகளால், வேலையை பாதிக்காத வகையில் உடல் எடையினை குறைப்பது எப்படி என்ற தகவல்கள் கொண்ட இந்த பதிப்பை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். இதனை படித்து பயனடையவும்.!

   
 
ஆரோக்கியம்