Back
Home » திரைத் துளி
விஸ்வரூபம் 2 திரைப்படம் கமலுடையது… ஆனால் விதை எம்ஜிஆர் போட்டது!
Oneindia | 10th Aug, 2018 03:23 PM
 • பாகுபலி 2

  பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் என நடித்த எல்லோருக்குமே மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்ற கேள்வியோடு கிளைமாக்ஸை முடித்து அதற்கான விடையை இரண்டு வருடம் காக்க வைத்து 2017ல் கூறினார். இப்படம் தேசிய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.


 • சிங்கம் 2

  இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடித்து 2013 ஆம் ஆண்டு சிங்கம் திரைப்படம் வெளியானது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிங்கம் 2, சிங்கம் 3 என சிங்கத்தின் கர்ஜனை தொடர்ந்தது. சிங்கம் என்று கூகுள் செய்தாலே அசல் சிங்கத்திற்க்கு பதில் நடிகர் சூர்யாவை பரிந்துரை செய்யுமளவிற்கு கூகுள் தயாராகிக்கொண்டது. அதுதான் சிங்கம் சீரீஸ் திரைப்படங்களின் வெற்றி.


 • கலகலப்பு 2

  சுந்தர் சியின் நகைச்சுவைத் இயக்கத்திற்கு மற்றுமொரு ட்ரேட் மார்க்காக அமைந்த படம் கலகலப்பு . சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம், மனோபாலா என சிரித்து சிரித்து அல்சர் வரவைத்தார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகர்களில் சில மாற்றங்கள் செய்து சுந்தர் சி இயக்கினார். ஜீவா, சிவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, சதீஷ், யோகிபாபு, ரோபோ சங்கர் என இக்கூட்டணியும் வெற்றி பெற்றது.


 • அரண்மனை 2

  சுந்தர் சியின் இயக்கத்தில் பேயாட்டம் காட்டிய திரைப்படம் அரண்மனை. வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி என நட்சத்திரக் குவியலாக வெளிவந்து வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட அரண்மனை 2 திரைப்படமும் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா கூட்டணியில் வெற்றிப் படமானது. அரண்மனை முதல்பாகத்தை விட ரூ.7 கோடி அதிகமாக கலெக்‌ஷன் எடுத்தது.


 • முனி

  சமீபத்திய வருடங்களில் வந்த பேய் படங்களில் காஞ்சனா முக்கியமானது. முனி என்ற திரைப்படத்தை 2007ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். ரூ.2 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.15 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. அதன் அடுத்த பகுதியாக ரிலீஸ் செய்யப்பட்ட காஞ்சனா ரூ.7 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ.70 கோடி வசூல் செய்தது. சரத்குமார் திருநங்கையாக நடித்து மிரட்டியிருந்தார்.
சென்னை: இன்று விஸ்வரூபம் 2 ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் எப்போதிலிருந்து இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் வந்ததென இங்கே தெரிந்துகொள்வோம்.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் ஹாலிவுட்டில் வெகு நாட்களாக உள்ளது. அதை முதன் முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அமெரிக்க இயக்குனர் தாமஸ் டிக்ஸன்.

இவர் இயக்கத்தில் 1916ஆம் ஆண்டு வெளிவந்த " த ஃபால் ஆப் எ நேஷன் " என்ற திரைப்படம் உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட இரண்டாம் பாகத் திரைப்படம். த கிளான்ஸ்மேன் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட "த பர்த் ஆஃப் எ நேஷன்" என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக "த பால் ஆப் எ நேஷன்" திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு பல ஹாலிவுட் வெற்றிப்படங்கள் தொடர் படங்களாக வெளிவரத் தொடங்கின. சீக்வல் எனப்படும் இந்த முறையை தமிழுக்கு கொண்டு வர முயற்சித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர், லதா, மஞ்சுளா, நாகேஷ் மற்றும் பலர் நடித்து 1973 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் தயாரிக்க எம்ஜிஆர் முடிவு செய்தார். ஆனால், சில காரணங்களால் அது தடைபட்டுப்போனது.

அதன்பிறகு எம்ஜிஆர் எடுத்த முயற்சிக்கு ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம் மூலமாக கமல்ஹாசன் செயல் வடிவம் கொடுத்தார். 1973 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த கல்யாணராமன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 1985ல் ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம் வெளியானது.

அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளன. அதில் வெற்றிபெற்ற படங்களை விட தோல்வியடைந்த படங்களே அதிகம்.

இப்போது, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற சில திரைப்படங்களை பார்ப்போம்.

   
 
ஆரோக்கியம்