Back
Home » வீடு-தோட்டம்
மணமணக்கும் ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி உங்க வீட்லயும் செய்யணுமா? இதோ ரெசிபி
Boldsky | 6th Sep, 2018 04:00 PM
 • பொடி வகைகள்

  Image Courtesy

  அய்யங்கார் வீடுகளில் பெரும்பாலும் நம்மைப் போல ரெடிமேட் சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிப் பொடி, பருப்பு பூண்டு பொடி ஆகியவற்றை கடைகளில் வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்த மாட்டார்.

  தங்களுடைய சொந்த கைப்பக்குவத்தில் தாங்களே மசாலாப் பொருள்களை தரமாகவும், பக்குவமாகவும் தேர்ந்தெடுத்து, அதை குறிப்பிட்ட பக்குவத்தில் வறுத்து, பொடியாகத் திரித்து ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்துவார்கள்.


 • பக்குவம் முக்கியம்

  Image Courtesy

  சமையல் என்றால் பக்குவமாக ஒரு சேர செய்தல் என்று தானே பொருள். அதனால் சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம். அதேபோல் சமையலில் ஆர்வம் இருந்தால் தான் சுவை கூடும். நாம் சமைப்பதை வீட்டிலோ அல்லது நண்பகளோ நான்கு பேர் வயிறாற சாப்பிடப் போகிறார்கள் என்பதை உணர்ந்தாலே சமைக்கும் போது அந்த பக்குவம் கூடி விடும்.


 • வீட்டு மசாலா

  Image Courtesy

  வீ்ட்டிலேயே சுத்தமாக, தரமாக மசாலா தயார் செய்து சமைப்பதால் தான் அய்யங்கார் வீட்டு சமையலுக்கு தனி ருசி கூடுகிறது. அவர்களுடைய அரைச்சு விட்ட சாம்பார் நாம என்ன தான் அரைச்சு விட்டாலும் சரி வராது. ஏனெனில் நாம் பயன்படுத்தும் மசாலாப் பொருள்களின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அவர்கள் போடுகிற அதே எல்லா பொருள்களும் தான் நாமும் போடுகிறோம். ஆனால் அந்த ருசி வருவதேயில்லை என்று புலம்புவது வேஸ்ட். மசாலாப் பொருள்கள் முக்கியமல்ல. அதன் விகிதம் தான் அதில் மிக முக்கியம் என்பதை மனதுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.


 • சாம்பார் பொடி

  Image Courtesy

  அய்யங்கார் வீட்டு சாம்பார் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் இந்த லோகத்தில் யார் இருக்கா? என்ன சொல்லும்போதே எச்சில் ஊறுகிறதா? சரி விடுங்க. இனி நம்ம வீட்லயும் அய்யங்கார் வீட்டு சாம்பார் மாதிரியே வைச்சிட்டா போச்சு. எப்படின்னு கேட்கறீங்க. அவங்களுாட சாம்பார் பொடி சீக்ரெட் இப்பதான் நமக்கு கிடைச்சிடுச்சே. அதேமாதிரி செஞ்சு அசத்தி விட வேண்டியது தான். சரி சரி வாங்க. அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி எப்படி திரிக்கிறதுன்னு பார்க்கலாம்.


 • அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி

  Image Courtesy

  தேவையான பொருள்கள்

  தனியா - அரை கிலோ
  குண்டு மிளகாய் - கால் கிலோ
  துவரம்பருபு்பு - 200 கிராம்
  கடலைப்பருப்பு - 100 கிராம்
  மிளகு - 50 கிராம்
  வெந்தயம் - 20 கிராம்
  விரளி மஞ்சள் - 50 கிராம்


 • பதப்படுத்தும் முறை

  Image Courtesy

  மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். அதுவே மழைக்காலமோ பனி காலமாகவோ இருந்தால் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே உலர்த்தி, தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.


 • பொடி திரித்தல்

  Image Courtesy

  சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள். பொடி அரைக்கும்முன் மில்லில் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. இந்த சாம்பார் பொடி அரைப்பதற்கு முன்னால் அந்த மெஷினில் வேறு ஏதேனும் சுாம்பு கலந்து பொடி அரைக்கப்படாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.


 • சேமிக்கும் முறை

  Image Courtesy

  அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைககாதீர்கள். அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி. இனி நம்ம வீட்டு சாம்பார் பொடி. நாமும் அதே மாதிரி ஊர் மணக்க சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி நம்ம வீட்லயும் எப்படி செய்யறது

அய்யங்கார் வீடு என்றாலே நெய்யும் நல்லெண்ணெயும் மணக்க மணக்க இருக்கிற சாப்பாடு தான் நம்முடைய நினைவுக்கு வரும்.

பெருமாள் கோவிலுக்குப் போகிற பலருக்கும் பெருமாள் இருக்குமிடம் நோக்கி கால் நகருகிறதோ இல்லையோ புளியோதரை, பொங்கல் வைத்திருக்கும் இடம் நோக்கி, மூக்கு வாசனைப் பிடித்து விட்டால் கால்கள் அந்த பக்கமாக தானாக நடக்க ஆரம்பித்து விடும்.

   
 
ஆரோக்கியம்