Back
Home » ஆரோக்கியம்
பிரியங்கா சோப்ராவுக்கு ஆஸ்துமாவா? எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க
Boldsky | 20th Sep, 2018 11:30 AM
 • பிரியங்கா சோப்ரா டுவிட்

  "எனக்கு ஆஸ்துமா இருப்பது தெரியும், அது முழுவதுமாக என்னை கட்டுப்படுத்துவதற்கு முன் நான் அதை கட்டுப்படுத்த வேண்டும்". நான் இன்னும் நீண்ட நாட்களுக்கு இன்ஹேலர் மூலம் என் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம் எப்படி இருப்பினும் ஒரு போதும் என் இலக்குகளையும் கனவுகளையும் நான் கைவிட மாட்டேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.


 • புள்ளி விவரங்கள்

  ஆஸ்துமா ஒரு அழற்சி நோய். இந்த நோய் உலகளவில் 300 மில்லியன் மக்களை பாதித்து உள்ளது. இதில் 10% மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்தியாவில் மட்டும் கடந்த 10 வருடங்களில் குழந்தை பருவத்திலயே வரும் ஆஸ்துமா தாக்கம் அதிகரித்து வருகிறது.

  MOST READ: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிடணும்... நீங்க இவ்ளோ தான் சாப்பிடறீங்களா?


 • ஆஸ்துமா மற்றும் வகைகள்

  நம்முடைய சுவாசப் பாதையில் உள்ள மூச்சுக் குழாயில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி இது தான் ஆஸ்துமாவை உண்டு பண்ணுகிறது. இதனால் சுவாசப் பாதை அழற்சிக்குள்ளாகி மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது. அதில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி பெரிதாகி சுவாசப் பாதையை குறுகலாக்குவதால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாமல் திணறல் ஏற்படுகிறது.


 • வகைகள்

  குழந்தை பருவ ஆஸ்துமா நோய்
  பெரியவர்களுக்கு வரும் ஆஸ்துமா நோய்
  உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட ஆஸ்துமா நிலை
  இருமலால் தூண்டப்பட்ட ஆஸ்துமா பாதிப்பு
  தொழிலால் ஏற்படும் ஆஸ்துமா
  ஸ்டீராய்டு மருந்துகளால் ஏற்படும் ஆஸ்துமா
  இரவு நேர ஆஸ்துமா நிலை.


 • காரணங்கள்

  அழற்சிகள்
  நம் சுவாச பாதையில் ஆன்டி பாடிகளால் தூண்டப்படும் அழற்சிகள் மூச்சு விடுதலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா பொதுவாக வீட்டை சுத்தம் செய்யும் போது உள்ள தூசி, பூச்சிகள், பூஞ்சை, காற்றில் பறந்து வரும் தூசிகள் போன்றவற்றால் ஏற்படுகிறது.


 • புகைபிடித்தல்

  புகைப்பிடித்தல் நமது சுவாச உறுப்பான நுரையீரலையே பாதித்து இறப்பை கூட ஏற்படுத்தி விடுகிறது. எனவே புகைப்பிடிப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது.


 • உடல் பருமன்

  உடல் நிறை குறியீட்டு எண் 30 க்கு மேலோ அல்லது 38% க்கு மேலாக இருந்தால் அவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் பருமனும் ஆஸ்துமா வர ஒரு காரணமாக அமைகிறது.


 • கர்ப்பம்

  கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் புகைப்பிடித்தல் பழக்கத்தை மேற்கொண்டால் கருவில் வளரும் குழந்தைக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  MOST READ: எமன் ஏன் பாண்டவர்களை நரகத்திற்கும் துரியோதனனை சொர்க்கத்துக்கும் அனுப்பினார் தெரியுமா?


 • மரபணு

  ஆஸ்துமா பரம்பரை பரம்பரையாக வரும் விஷயம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கருத்துப்படி பெற்றோர்கள் ஆஸ்துமா பாதிப்பு பெற்று இருந்தால் குழந்தைகளும் ஆஸ்துமா பாதிப்பை அடையலாம் என்கின்றனர்.


 • சுற்றுப்புறக் காரணிகள்

  தீவிர காற்று மாசுபாடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோன், குளிர்ந்த வெப்பநிலை, நைட்ரஜன் ஆக்ஸைடு, அதிக ஈரப்பதம் போன்றவை ஆஸ்துமா பாதிப்பை தூண்டுகிறது.


 • அறிகுறிகள்

  மூச்சு இளப்பு
  மூச்சு விட சிரமம்
  இரவில் அதிக இருமல் ஏற்படுதல்
  மார்பில் வலி
  உடற்பயிற்சி செய்த பிறகு நாள் முழுவதும் சோர்வாக இருத்தல்
  தூங்க சிரமப்படுதல்
  சலதோஷம், மூக்கில் இருந்து சளி வடிதல், இருமல், மூக்குச் சளி, தலைவி, தும்மல் போன்றவை காணப்படும்.


 • கண்டறிதல்

  மருத்துவ வரலாறு

  உங்கள் ஆஸ்துமா பாதிப்பைக் கண்டறிய முதலில் மருத்துவர்கள் உங்கள் குடும்ப வரலாற்றை பற்றி கேட்பர். எனவே நீங்கள் கூறும் அறிகுறிகளைக் கொண்டு அவர்கள் உங்களுக்கு சரியான சிகிச்சையைத் தருவார்கள்.


 • உடல் பரிசோதனை

  இந்த உடல் பரிசோதனை என்பது மார்பு, சருமம் மற்றும் மேல் சுவாசப் பாதையை பார்ப்பது. இதை மருத்துவர்கள் ஸ்டெதஷ் கோப் கொண்டு சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தத்தை வைத்து ஆஸ்துமாவை கண்டறிவர். மருத்துவர் மூக்கு ஒழுகுதல், மூச்சுப் பாதை பிரச்சினைகள் மற்றும் சருமத்தில் ஏற்படும் படை, எக்ஸிமா போன்றவற்றை கொண்டும் ஆஸ்துமாவை கண்டறிவர்.


 • ஆஸ்துமா பரிசோதனைகள்

  நுரையீரல் செயல்பாட்டு சோதனை போன்றவை ஆஸ்துமாவை கண்டறியும் சோதனையாகும். இதை ஸ்பைரோமெட்ரி கருவியைக் கொண்டு செய்கின்றனர். இந்த சோதனையில் எவ்வளவு காற்று உள்ளே செல்கிறது அதே நேரத்தில் எவ்வளவு சீக்கிரம் மூச்சு வெளியே விடப்படுகிறது என்பதை கணக்கிடுகின்றனர்.


 • இதர பரிசோதனைகள்

  அழற்சி பரிசோதனைகள் செய்வதன் மூலமும் கண்டறியலாம். ஆஸ்துமாவை மோசமடையச் செய்யக் கூடிய பொருட்களை அடையாளம் காண அலர்ஜி சோதனைகள் நடத்தப்படுகின்றன.. ஆஸ்துமாவைப் போல் அதே மாதிரி அறிகுறிகள் கொண்ட நோய்களான வன :ரிஃப்ளக்ஸ் நோய், சைனஸ், நெஞ்செரிச்சல், சுவாச பாதை இடையூறுகள், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் தொற்று, இதயம் செயலிழப்பு போன்றவை ஆகும்.


 • சிகிச்சைகள்

  ஆஸ்துமாவை நீங்கள் குணப்படுத்த முடியாது. ஆனால் அதை நாம் கட்டுப்பாட்டில் வைத்து வாழ முடியும்.


 • இன்ஹேலர்

  இன்குலர் போன்ற குழாய் வடிவ கருவி தொடர்ச்சியான மருந்தை நுரையீரலில் செலுத்த உதவுகிறது. இந்த கருவி உமிழ்நீரில் கலந்துள்ள மருந்தை நீராவியாக நுரையீரலுக்குள் செலுத்துகின்றன. ஒரு சிறிய வடிவ கைக்கு அடக்கமான கருவி ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நுரையீரல் செயல்பாட்டை நன்றாக செயல்படுத்த உதவுகிறது. எவ்வளவு அளவு காற்றை உள்ளே இழுக்க வேண்டும் வெளியே விட வேண்டும் என்பதை இந்த கருவி உங்களுக்கு காட்டுகிறது. இதன் மூலம் நீங்கள் இந்த ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுதலை பெறலாம்.

  MOST READ: சமைச்சதும் தாளிச்சு கொட்றாங்களே அது எப்படி வந்துச்சுங்கிற ரகசியம் தெரியுமா?


 • மருந்துகள்

  ஆஸ்துமாவிற்கான மருந்து இரண்டு வகைப்படும். 1: உடனடியாக நிவாரணம் அளிப்பது 2. நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாட்டில் வைக்க என்று இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் பவுடர் வடிவில் உள்ள மருந்தை இன்குலர் வழியாக உள்ளே செலுத்தலாம்.


 • செக்-அப்

  உங்கள் ஆஸ்துமாவை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும் அல்லது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் 2-6 வாரங்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கேற்ப மருந்துகளை அளிப்பார்கள்.
பிரபல இந்தி நடிகையான ப்ரியங்கா சோப்ரா தனக்கு ஏற்பட்ட ஆஸ்துமா நோயிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை அவரே பகிர்கிறார். வாங்க பார்க்கலாம்.

பாலிவுட் குயின் மற்றும் பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா சோப்ரா. இது மட்டுமல்லாமல் யுனிசெஃப் அம்பாசிடராகவும் திகழ்ந்தவர். இப்படிப்பட்ட இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட நபரும் கூட. தன் கனவுகளை அடைய இடையூறாக இருந்த இந்த ஆஸ்துமா நோயை சமாளித்து எப்படி கனவுச் சிகரத்தை அடைந்தார் என்று தன்னுடைய அனுபவத்தை இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்துள்ளார்.

   
 
ஆரோக்கியம்