Back
Home » ஆரோக்கியம்
உணவில் சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?
Boldsky | 21st Sep, 2018 12:47 PM
 • இமாலய உப்பு (அ) இந்துப்பு

  இந்த இமாலய உப்பு எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இது பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் இருக்கும். இந்த உப்பு நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது, சீரண சக்தியை அதிகரிக்கிறது மேலும் சைனஸ் பிரச்சினையை போக்குகிறது.


 • உருவான விதம்

  பல வருடங்களுக்கு முன் பூமியின் தட்டுகள் நகர்ந்து வானம் அளவு உள்ள உயர்ந்த இமயமலையில் நகர்வு ஏற்பட்டு சூரிய வெப்பத்தின் கீழ் கடல் நீர் ஆவியாகி பின் உப்புப் படிகங்களாக மாறியது. இந்த இளஞ்சிவப்பு உப்பைத் தான் இமாலய உப்பு என்கின்றனர். இது ஏராளமான நன்மைகளை நமக்கு தருகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  MOST READ: இப்படி வந்தா சாதாரணமா விடாதீங்க... உயிருக்கே ஆபத்து... உடனே என்ன செய்யணும் தெரியுமா?


 • சீரண சக்தி

  மற்ற உப்பை காட்டிலும் இந்த பிங்க் நிற உப்பை உணவில் சேர்த்து சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை கொடுக்கிறது. இது சீரணிக்கும் வேகத்தை குறைத்து வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. எனவே உங்கள் பசியை அடக்க இந்த உப்பை உணவில் சேர்த்தால் போதும் அதே நேரத்தில் உணவு செரிமானத்திறுகும் உதவுகிறது.


 • நச்சுக்களை வெளியேற்றுதல்

  இமாலய உப்பு நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இது தண்ணீரில் கரைந்து அயோனிக் கரைசலாக மாறி நமது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றுகிறது.


 • இரத்த அழுத்தம்

  இது உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த உப்பை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது மற்ற உப்பு களை போன்று இல்லாமல் உங்கள் உடலில் சோடியத்தின் அளவை எக்காரணத்தைக் கொண்டும் கூட்டாது.


 • ஆற்றல்

  நீங்கள் சோர்வாக இருந்தால் இந்த உப்பை எடுத்து கொள்ளலாம். காரணம் இதிலுள்ள எலக்ட்ரோ லைட்டுகள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.


 • சைனஸ் பிரச்சினை

  இமாலய உப்பு சுவாச பாதையில் அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது. இதன் மூலம் சுவாச பாதையை சுத்தமாக்கி சலதோஷத்தை போக்குகிறது.


 • நல்ல தூக்கம்

  உங்களுக்கு சரியாக தூக்கம் வராமல் அவஸ்தை பட்டால் இந்த இமாலய உப்பை எடுத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய பெளலில் கொஞ்சம் இமாலய உப்பு மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை நாக்கில் வைத்து கரையும் வரை காத்திருங்கள். இந்த உப்பில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உங்கள் தசைகளை ரிலாக்ஸ் ஆக்கி நல்ல தூக்கத்தை தரும்.


 • அமிலத்தன்மை பாதிப்பு

  வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, எரிச்சலை குறைக்க ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த இமாலய உப்பை கலந்து குடித்தாலே போதும். வயிற்றின் pH அளவு நடுநிலையாகி நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.

  MOST READ: பொடுகு பிரச்னை இருக்கா? சர்க்கரையை இப்படி தலையில தேய்ங்க... போயே போயிடும்...


 • இரத்த குழாய்கள்

  இந்த உப்பை தொடர்ந்து உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உங்கள் இரத்த குழாய்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரத்த சிரைகளில் ஏற்படும் வெரிகோஸ் வீன் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.
உணவுகளில் உள்ள அறுசுவைகளில் உப்பின் சுவையும் மிக முக்கியமானது. உணவில் நாம் சேர்க்கும் உப்பு தான் உணவிற்கே சுவையூட்டுகிறது. அப்படி சேர்க்கப்படும் உப்பு வெறும் சுவையை மட்டும் தருவதோடு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது என்பது உண்மை.

எனவே தான் இந்த ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக கிடைக்க சிறிதளவு இமாலய உப்பை சேர்த்தாலே போதும். ஏனெனில் மற்ற உப்புகளை விட இமாலய உப்பு நமது உடலுக்கு மிகவும் நல்லதும் அவசியமானதும் கூட. இமாலய உப்பு என்றதும் பயந்து விடாதீர்கள். நாம் நாட்டு மருத்துவத்தில் சொல்கிறோமோ இந்துப்பு என்று அதுதான் இந்த இமாலய உப்பு.

   
 
ஆரோக்கியம்