Back
Home » ஆரோக்கியம்
வயிறு உப்புசத்தால நைட் தூங்க முடியலையா....? அப்ப இத சாப்பிடுங்க உடனடி ரிலீஃப் கிடைக்கும்...!
Boldsky | 21st Sep, 2018 05:53 PM
  • தயிர்

    தயிரை பொறுத்தவரை அதிகமான ப்ரோபயோடிக் உள்ளது. இந்த நல்ல பாக்டீரியா உடலின் செரிமான செயலை தூண்டி, உடலின் ஆரோக்கியத்தை காக்கிறது. நீங்கள் உப்புசமாக உணரும் போது, ஒரு கப் தயிர் லஸ்ஸி அல்லது ஏதாவது பழத்துடன் சேர்த்து இனிப்பு பானமாக குடித்தால் நிச்சயம் உப்புசம் சரியாவதை நீங்களே உணர்வீர்கள். ஏனென்றால், 7 அவுன்ஸ் தயிருடன் 146 கலோரிகள், 4 கிராம் கொழுப்பு சத்து, 68 மில்லிகிராம் சோடியம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 20 கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.


  • இஞ்சி

    பழமையான மருத்துவ குணாதிசயங்கள் கொண்ட இஞ்சி வயிற்று உப்புசம் சரிசெய்ய சிறந்த மருந்தாக உதவுகிறது. இஞ்சியில் செரிமானத்தை தூண்டும் ஜின்ஜிமெய்ன் எனும் நொதி உள்ளது. இது உடலை புரதச்சத்து குறைபாட்டின் போது காக்க உதவும். மேலும், குடலின் இயக்கத்திற்கு உதவும் இஞ்சி, உணவை குடலின் வழியாக எளிதில் சென்று செரித்து, வயிற்று உப்புசம் ஏற்படாமல் தடுத்துவிடும். ஒரு டீஸ்பூன் இஞ்சியில், 2 கலோரிகள், 0.01 கிராம் கொழுப்பு, 0.4 கிராம் கார்போஹைட்ரேட், 0.03 கிராம் சர்க்கரை மற்றும் 0.04 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.

    MOST READ: அடிக்கடி வயிறு வலிக்குதா? அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க
    வாய்ப்பிருக்கு...


  • பெருஞ்சீரகம்

    பெருஞ்சீரகம் வயிற்று உபாதைகளுக்கு மிகச்சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. மேலும், இது சிறந்த அழற்சி எதிர்ப்பு காரணியாகவும் செயல்படுவதால், குடலை சீராக செயலாற்ற செய்து வாயு தொல்லை போன்றவற்றை முற்றிலும் சரி செய்கிறது. ஒரு கப் டீயில் சிறிது பெருஞ்சீரகத்தை சேர்த்தோ, அல்லது பெருஞ்சீரக செடியின் இலைகளை சாலட்களில் சேர்த்தோ சாப்பிடும் போது, நீண்ட நேர புத்துணர்ச்சியை தரக்கூடும். ஒரு கப் பொடியாக நறுக்கிய பெருஞ்சீரக செடியில், 27 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு, 45 மில்லிகிராம் சோடியம், 6 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.


  • வாழைப்பழம்

    வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்றி உப்புச பிரச்சனைக்கு உதவக்கூடிய ஆற்றல் கொண்டது. அதிகப்படியான சோடியம் சாப்பிடும் போது, உடலில் நீர் அதிகமாக சேரக்கூடும். எனவே, அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற வேண்டுமென்றால், பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எனவே, உடலை உப்புசமான பிரச்சனையில் இருந்து காக்க வேண்டுமென்றால் சோடியம் நிறைந்த உணவுப்பொருட்களான வாழைப்பழம் போன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும். ஒரு வாழைப்பழத்தில், 105 கலோரிகள், 0.4 கிராம் கொழுப்பு, 1 மில்லிகிராம் சோடியம், 27 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதச்சத்து ஆகியவை உள்ளன.


  • எலுமிச்சை

    எப்பொழுதும் பழமையே சிறந்தது. அதேப்போல் தான், பழமை வைத்தியமான எலுமிச்சை சாறு எப்போதும் வயிற்று உப்புசத்திற்கு முதலில் பரிந்துரைக்கப்படும் பொருளாகும். செரிமானத்தை தூண்டி, உப்புசத்தை சரிசெய்யும் பணியை, எலுமிச்சையில் கோல்மேன் எனும் பொருள் சிறப்பாக ஆற்றி வருகிறது. தினசரி எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, உடலின் வறட்சி தன்மையை அது போக்கி உற்சாகத்தை தரக்கூடியது. 1 அவுன்ஸ் எலுமிச்சை சாற்றில், 7 கலோரிகள், 0.1 கிராம் கொழுப்பு, 1 மில்லி கிராம் சோடியம், 2 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் சர்க்கரை, 0.1 கிராம் நார்ச்சத்து, 0.1 கிராம் புரதச்சத்து ஆகியவை உள்ளன.


  • பரங்கிக்காய்

    பரங்கிக்காயை நீர் காய் என்றும் அழைப்பர். இந்த காயில் 90 சதவிகித நீர் உள்ளது. இதனை சாப்பிட்டால் 1 டம்ளர் தண்ணீர் குடித்ததற்கு சமம். எனவே, உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து உப்புசத்தை குறைத்துவிடும். மேலும், இதை உணவில் சேர்த்து கொள்வதால் சிறுநீர் வழியாக அனைத்து தேவையற்ற நீர் மற்றும் உப்பு சத்து வெளியேறி, உடலை புத்துணர்வுடன் இருக்க செய்யும். மற்ற நீர் காய்களை விட இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றிவிடும். ஒரு கப் பரங்கி காயில், 54 கலோரிகள், 0.3 கிராம் கொழுப்பு, 25 மில்லிகிராம் சோடியம், 13 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம் உள்ளது.

    MOST READ: உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!


  • அவகேடோ

    ஒரு வேளை நீங்கள் கார்பன் குறைந்த உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உடையவராக இருந்தால், உங்களது வயிற்று உப்புசத்திற்கு அவகேடோ சிறந்த பலனளிக்கும். ஏனென்றால், இதில் குறைந்த அளவிலான பொட்டாசியமும், வெறும் 6 கிராம் அளவிலான கார்பனும் உள்ளது. இது வாழைப்பழத்தில் கால்பாதி சாப்பிட்டால் கிடைக்கும் அளவாகும். 1/3 பங்கு அவகேடோ பழத்தில், 106 கலோரிகள், 10 கிராம் கொழுப்பு, 5 மில்லிகிராம் சோடியம், 6 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் சர்க்கரை, 4 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம் உள்ளது.


  • பூசணி

    மற்றொரு பொட்டாசியம் நிறைந்த உணவுகளில் பூசணியும் ஒன்று. இது உடலுக்கு தேவையான நார்ச்சத்தை வழங்கி, குடலின் இயக்கத்தை துரிதப்படுத்தி செரிமானத்தை சீராக்குகிறது. எனவே, இதனை சாப்பிடுவதால் வயிற்று உப்புசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரை கப் பூசணியில், 50 கலோரிகள், 0 கொழுப்பு, 10 மில்லிகிராம் சோடியம், 11 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் சர்க்கரை, 4 கிராம் நார்ச்சத்து, 2 கிராம் புரதம் உள்ளது.


  • வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காயில் உள்ள அதிகப்படியான நீர் உடலை எப்பொழுதும் நீர்ச்சத்து நிறைந்த படி பார்த்துக் கொள்ளும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற அதிகப்படியான நீரை உடலை விட்டு வெளியேற்றவும் இது தூண்டும். வெள்ளரிக்காயில் உள்ள சல்பர், சிலிகான் போன்றவை மலச்சிக்கலை போக்கக்கூடியவை. அரை கப் நறுக்கிய வெள்ளரிக்காயில், 8 கலோரிகள், 0.06 கொழுப்பு, 1 மில்லி கிராம் சோடியம், 2 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் சர்க்கரை, 0.3 கிராம் நார்ச்சத்து, 0.3 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.


  • அஸ்பாரகஸ்

    இதில் உள்ள அமினோ அமிலம் உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், அஸ்பாரகஸில் உள்ள ப்ரீபயோடிக் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும் குணமுடையது. ஒரு கப் பச்சை அஸ்பாரகஸில், 27 கலோரிகள், 0.3 கிராம் கொழுப்பு, 0 மில்லி கிராம் சோடியம், 5 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, 3 கிராம் புரதம் உள்ளது.


  • கிவி

    இந்த சத்து நிறைந்த சிறிய பழத்தில், என்சைம், ஆக்டினிடின் போன்ற சத்துக்கள் உள்ளதால், செரிமானத்தை துரிதப்படுத்திக்கூடியது. வெறும் 2 கிவி பழத்தை சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்களுடன் போராடி வயிற்று உப்புசத்தை நீக்கும். 2 கிவி பழத்தில், 90 கலோரிகள், 1 கிராம் கொழுப்பு, 0 மில்லி கிராம் சோடியம், 22 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் சர்க்கரை, 4 கிராம் நார்ச்சத்து, 2 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.


  • பப்பாளி

    பப்பாளியில் உள்ள பப்பைன் எனும் என்சைம் உடலில் தேங்கியிருக்கும் உணவுகளை நீக்கி, அழற்சி ஏற்படுவதையும் தடுக்கிறது. செரிமானத்தையும், பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் சுழற்சியையும் சீராக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு கப் பப்பாளி பழத்தில், 62 கலோரிகள், 0.4 கிராம் கொழுப்பு, 12 மில்லிகிராம் சோடியம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 11 கிராம் சர்க்கரை, 3 கிராம் நார்ச்சத்து, 0.7 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.




வயிறு நிறைய சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிற்று உப்பசம் என்பது அடிக்கடி தொல்லை கொடுக்கக்கூடிய பிரச்னையாகவே உள்ளது. வயிற்று உப்புசத்தால் சாப்பிட்டது செரிக்காமலும், வேறு எதுவும் சாப்பிட முடியாமல் நீங்கள் அவதிப்படுவது, பலருக்கும் நேரும் உபாதை தான். தண்ணீர் அல்லது காற்று இந்த இரண்டும் வயிற்றில் நிரம்பியது போல் இரண்டு வகையான வயிற்று உப்பசம் உள்ளது.

காற்று உப்புசம் ஏற்பட்டால், சாப்பிட்ட பிறகு பேண்ட் அல்லது சர்ட் பட்டன் கழற்றி விடவேண்டும் என்று தோன்றும். அத்தகைய பிரச்சனை, பீன்ஸ், பால், காலிஃப்ளவர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடும் போது ஏற்படக்கூடும். ஆனால், ஒவ்வொருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுவது மாறக்கூடும் எனவும் ஆய்வுகளில் தெரிய வருகிறது.

அதேப்போல், தண்ணீர் உப்புசம் என்பது, தம்மை ஒரு பருமனான ஆளை போல் உணரச் செய்யும். பொதுவாக இது, உடல் வறட்சி அல்லது உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்வது மற்றும் போதுமான பொட்டாசியம் மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது இந்த பிரச்சனை ஏற்படக்கூடும்.

எனவே, வயிற்று உப்புசத்தில் இருந்து தப்பிக்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள 12 உணவுப் பொருட்களை சேர்த்து கொண்டால், உடனடி நிவாரணம் தருவதை நீங்களே உணரலாம்.

   
 
ஆரோக்கியம்