Back
Home » ஆரோக்கியம்
கண்களுக்கு கீழ் இப்படி சதை இருக்கா? காரணம் என்ன? என்ன செஞ்சா சரியாகும்னு தெரியுமா?
Boldsky | 24th Sep, 2018 12:29 PM
 • கருவளையம்

  வயதாக வயதாக கண்களுக்கு அடியில் குழி விடும். இதைத்தான் சிலர் என்ன கண்ணு லொடுக்கு விழுந்திடுச்சு என்று சொல்வதுண்டு. ஆம். நமக்கு வயதாவதைக் கண்டுபிடிப்பது முதலில் இந்த கணணுக்கு கீழ் விழும் குழியை வைத்துதான். வயதாக வயதாக கண்களுக்கு அடியில் நீர் தேங்கி, நன்கு உப்பிக் காணப்பட ஆரம்பிக்கும்.


 • காரணங்கள்

  இளம் வயதிலேயே வயதான தோற்றம் உண்டாவதற்கான மிக முக்கிய காரணமே ரத்த ஓட்டம் குறைவாக இருப்பது தான். ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் இறந்த செல்கள் வெளியேறாமல் உடலிலேயே தங்கி, விடும். அதனால் சருமம் தடிமனாகும். சருமச் சுருக்கங்கள் உருவாகும். அப்படி கண்களுக்குப் போதிய ரத்த ஓட்டங்கள் இல்லாததால் அங்கேயே தேவையற்ற நீர் தங்கி நீர்ப்பையை உருவாக்கி விடும். அதோடு மட்டுமல்லாது, ஆல்கஹால், சிகரெட், தூக்கமின்மை ஆகியவையும் மிக முக்கிய காரணமாக இருக்கும். இதை நீங்கள் உடனடியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், நிரந்தரமான வயதான தோற்றத்தை உண்டாக்கிவிடும்.


 • நேராக நிமிர்ந்து படுத்தல்

  நேராக நிமிர்ந்து முதுகுதத்தண்டு கீழ்ப்புறம் இருக்கும்படி, மல்லாந்து படுத்து உறங்குதல் நல்லது. அப்படி படுத்திருக்கும்போது, கண்களுக்கு அடியில் நீர் திரவங்கள் ஏதுமு் தங்காமல் தவிர்க்க முடியும். குப்புற அல்லது பக்கவாட்டில் படுத்தீர்கள் என்றால் கண்களின் அடியில் நீர் தேங்குகின்ற வாய்ப்புகள் ஏற்படும். அதனால் நேராகப் படுத்துத் தூங்குங்கள்.


  MOST READ: நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடுவது என்னென்ன நன்மை தரும்?


 • உப்பின் அளவு

  நாம் சாப்பிடும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக் கொண்டாலும் கூட, கண்களுக்கு அடியில் அது நீர்த் தேக்கத்தை உண்டாக்கும். உணவில் உப்பு அளவுக்கு அதிகமாகச் சேர்க்கின்றவர்களுக்குத் தான் கண்களுக்கு அடியினில் இந்த சதைப்பற்று அதிகமாகத் தொங்க ஆரம்பிக்கும். அதனால் நிச்சயம் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


 • கண்ணுக்கு எளிய பயிற்சி

  கண்களுக்காகவே பிரத்யேகமாக சில எளிய பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றைச் செய்தாலே போதும். மிக எளிதாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இது என்னவென்று இப்போது பார்போம்.

  கண்களை இறுக்கமாகச் சுருக்கி, சுருக்கிய நிலையிலேயே அகலாம விரிக்க வேண்டும். அதோடு கண்களை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் சுழற்றிவிட வேண்டும். அதேபோல் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுழற்ற வேண்டும். இப்படி தினமும் 3 நிமிடங்கள் வரை செய்து வந்தாலே போதும். கண்கள் முழுக்க சீராகவும் வேகமாகவும் ரத்த ஓட்டம் பாய ஆரம்பிக்கும். அது பழுதடைந்த மற்றும் இறந்த செல்களைச் சுத்தம் செய்யும். அதனால் கருவயைளயம், கண்ணுக்குக் கீழ் குழி போடுதல், கண்ணுக்குக் கீழே சதை தொங்குதல் போன்ற பிரச்சினைகள் தானாகக் குறைய ஆரம்பிக்கும்.

  MOST READ: பல் கூசுதா? ரத்தம் வருதா? இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்...


 • குளிர்ச்சி மிகுந்த உணவுகள்

  வெள்ளரி, உருளைக்கிழங்கு ஆகிய இரண்டையும் வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளுங்கள். அதை ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒவ்வொரு துண்டுகளை எடுத்து கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். உடல் சூடு, கண் வலி, கண்ணுக்குக் கீழ் இருக்கும் கருவளையங்கள் ஆகியவை அடியோடு காணாமல் போய்விடும். அதோடு கண்ணுக்குக் கீழே லேசாகத் தொங்கும் சதைகளும் கரையும்.


 • கொலாஜன் நிறைந்த உணவுகள்

  கொலாஜன் அதிக அளவில் உள்ள உணவுகளை உங்களுடைய இன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இளம் வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம் உண்டாவதற்கு மிக முக்கிய காரணமே இந்த கொலாஜன்களின் உற்பத்திக் குறைவால் தான். அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள். அதனால் கொலாஜன் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது, கண்களுக்கு அடியில் தேங்கியுள்ள கொழுப்பும் கரையும். வயதான தோற்றமும் மறையும்.

  MOST READ: ஏழரை, அஷ்டம, ஜென்ம சனியின் வக்கிரம் தாக்காமலிருக்க இந்த பரிகாரத்த மட்டும் செய்ங்க...
இளம் வயதிலேயே வயதாவது போன்ற முதிய தோற்றம் உங்களுக்கு உண்டாவது போல வருத்தம் ஏற்படுகிறதா? சலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உடல் குண்டானால் எளிதாக வயதான தோற்றம் வந்துவிடும் என்று.

ஆனால் நீங்கள் குண்டாக இருந்தாலும் சரி, ஒல்லியாக இருந்தாலும் சரி, வயதாவது உங்களுடைய கண்களின் அடிப்பகுதியைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும்.

   
 
ஆரோக்கியம்