Back
Home » ஆரோக்கியம்
தென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..!
Boldsky | 25th Sep, 2018 05:31 PM
 • பிரசித்தி பெற்ற தென்னம்பிள்ளை...!

  இப்போதெல்லாம் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், 50 முதல் 70 வருடத்திற்கு முன்பு வரை வீட்டிற்கு பல மரங்கள் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். குறிப்பாக ஒவ்வொருவரின் வீட்டிலும் தென்னை மரம் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். இதனை தனது பிள்ளைகளை போன்று வளர்த்து வந்தனர். தென்னம்பிள்ளை அற்புத குழந்தையாகவே நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது.


 • நலம் தரும் தென்னை..!

  தென்னைமரத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. தென்னையில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எண்ணற்ற நன்மைகளை கொண்டதாம். தேங்காய், தென்னை பூ, தென்னை மரம், தென்னங்குருத்து என எல்லா பகுதிகளும் நலம் தருகின்றன.


 • தேங்காயின் ஊட்டசத்துக்கள்

  தேங்காயில் பல வித சத்துக்கள் மறைந்துள்ளன. நாம் சமையலில் இதனை சேர்த்து கொண்டால் உடல் வலிமை கூடும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள்...
  நார்சத்து
  வைட்டமின் சி
  தாதுக்கள்
  செலினியம்
  இரும்புசத்து
  சோடியம்
  மெக்னீசியம் வைட்டமின் ஈ
  வைட்டமின் பி, பி1, பி3, பி6


 • இனிமையான தென்னங்குருத்து...

  நம்மில் பலர் தென்னக்குறதை பற்றி பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். தென்னைமரத்தின் அடி தண்டை வெட்டி உள்ளே பார்த்தால், வெண்மையான ஒரு பகுதி இருக்கும். இதுவே தென்னங்குருத்தாகும். இதனை மதுரை, பொள்ளாச்சி, கேரளா போன்ற ஊர்களில் மிகுதியாக விற்பார்கள். இதில் பல மருத்தவ குணங்கள் இருக்கிறதாம்.

  MOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள் இதுவே..!


 • வயிற்று வலியை போக்க

  வயிற்று வலியால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து ஒரு சிறந்த வரப்பிரசாதம். இதனை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி விரைவிலே குணமாகும். மேலும், வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களையும் இது குணப்படுத்தி விடும் தன்மையை கொண்டது.


 • சிறுநீரக கல்

  இன்று பெரும்பாலானோர் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாதால் அதிக அளவில் உள்ளது. இந்த கற்களை நீக்க தென்னக்குருத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.


 • உடல் உஷ்ணம்

  இன்றைய காலகட்டத்தில் உடல் உஷ்ணம் பலருக்கு அதிகமாக இருக்கிறது. இது உடல் நிலையை சீராக வைத்திருக்காது. எனவே பல்வேறு நோய்களுக்கு இதனால் ஆளாக நேரிடும். உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க தென்னங்குருத்தை சாப்பிட்டு வரலாம்.


 • மாதவிடாய் வலிகள்

  மாதவிடாய் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தென்னங்குருத்து மற்றும் தென்னம்பூ நன்கு உதவுகிறது. தென்னம்பூவை தயிருடன் கலந்து நன்றாக அரைத்து குடித்து வந்தால் மாதவிடாய் வலிகள், தொற்றுகள் குணமாகும். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலும் விரைவில் சரியாகும்.

  MOST READ: 2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற, இத ட்ரை பண்ணுங்க!


 • மஞ்ச காமாலை

  இந்த தென்னங்குருத்தை மஞ்ச காமாலை உள்ளவர்களும் சாப்பிட்டு வரலாம். இதனால், மஞ்ச காமாலையின் தாக்கம் அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள இயலும். மேலும், சிறுநீர் வராமல் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து நல்ல மருந்தாக அமையும்.

  PC: YouTube


 • சுவை மிக்க தென்னங்குருத்து

  இந்த தென்னங்குருத்தானது ஒவ்வொரு ஊரின் தன்மைக்கேற்ப மாறுபடுமாம். மற்ற ஊர்களின் குருத்துகள் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற நான்கு வகை சுவையில் இருக்குமாம். ஆனால், பொள்ளாச்சியில் விற்கப்படும் குருதின் சுவை மிகுந்த இனிமையாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.


 • வெளிநாட்டினருக்கு பிடித்தமானதாம்..!

  நம் நாட்டில் உள்ள பல மருத்துவ தன்மை கொண்ட மரங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். ஆனால், இது போன்ற சிறப்புமிக்க ஒன்றை வெளிநாட்டினர்கள் கண்டுபிடித்து அவர்களின் நாடுகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த தென்னங்குருத்தும் அப்படித்தான். கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பில் 15,000 முதல் 20,000 வரை இதன் விற்பனை வெளிநாடுகளில் உள்ளதாம்.

  இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
பல வகையான மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட சில மருத்துவ தன்மைகள் இருக்கும். அந்த வகையில் தென்னைமரமும் சிறப்பு மிக்கதுதான். தென்னை மரம் பல நன்மைகளை மனிதனுக்கு தருகிறது. இவற்றின் மருத்துவ பயன்கள் நம்மில் பலருக்கு தெரியாமலே உள்ளது.

PC: YouTube

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பாகங்களும் அதிக நன்மைகளை தர கூடியது. தென்னம்பூ முதல் தென்னங்குருத்து வரை அனைத்துமே எண்ணற்ற நன்மைகளை நமக்கு தர கூடியது. இந்த பதிவில் தென்னங்குருத்தின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்து நலம் பெறலாம் நண்பர்களே.

   
 
ஆரோக்கியம்