Back
Home » ஆரோக்கியம்
புகைத்து புகைத்து பொசுங்கி போன உங்கள் நுரையீரலை சுத்தம் செய்யும் காய்-கனிகள்...!
Boldsky | 26th Sep, 2018 06:10 PM
 • முக்கியத்துவம் வாய்ந்த நுரையீரல்...!

  நம் உடல் உறுப்புகளில் இந்த நுரையீரல் மிக முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. இவற்றை நாம் பழுது படுத்தினால் பிறகு நாம் தான் வருத்தப்பட வேண்டும். நமது மூச்சுகாற்றை சுத்திகரித்து தரும் முக்கிய வேலையை செய்வதே இந்த நுரையீரல் தான்.


 • எலுமிச்சை

  நுரையீரலை பாதுகாக்க இந்த சின்ன பழமான எலுமிச்சை உதவும். தினமும் காலையில் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாக இருக்கும். முக்கிய குறிப்பாக, இதனை காலை உணவிற்கு முன்பாக குடிக்க வேண்டும்.


 • கேரட்

  அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கேரட். உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க கேரட் நன்கு உதவுகிறது. 300 ml கேரட் ஜூஸை காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் குடித்து வந்தால் நுரையீரலை சுத்தம் செய்து விடலாம்.


 • இஞ்சி

  சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு எப்படி இந்த இஞ்சி உதவுகிறதோ, அதே போன்று நுரையீரலை சுத்தம் செய்யும் முக்கிய வேலையையும் இது நன்கு செய்கிறது. சுவாச குழாய்களில் உள்ள நச்சு தன்மையையும், கிருமிகளையும் இது முற்றிலுமாக நீக்கி விடும். இதற்கு இஞ்சி டீயை குடித்து வந்தாலே போதுமானது.


 • ஓரிகனோ

  இதில் இயற்கையாகவே உள்ள histamine என்கிற மூல பொருட்கள் சுவாச குழாய்களை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. உணவில் இதனை சேர்த்து கொண்டால், நுரையீரல் பிரச்சினையின்றி இயங்கும். மேலும், மூச்சின் வேகத்தையும் சீராக்கும்.

  MOST READ: உடல் எடையை குறைக்க தடையாக இருப்பது இந்த டாப் 13 உணவுகள் தான்..!


 • அண்ணாச்சி பழம்

  நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை கொள்ளுவதில் இந்த அண்ணாச்சி பழம் பெரும் பங்கு வகிக்கிறது. இவற்றில் எண்ணற்ற அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதாம். இரவு தூங்குவதற்கு முன் அண்ணாச்சி பழ சாற்றை 400ml குடித்து விட்டு தூங்கினால் நுரையீரல் சுத்தமாகி விடும்.


 • புதினா

  மூலிகைகளில் சிறந்த ஒன்றாக இந்த புதினாவை மருத்துவர்கள் கூறுகின்றனர். decongestant தன்மை இதில் அதிகம் உள்ளதாம். அதாவது, நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை புதினாவில் நிறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படுவோர் தினமும் 3 முதல் 5 புதினா இலைகளை சாப்பிட்டு வந்தாலே இந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம்.


 • பூண்டு

  பூண்டில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள்உள்ளது. இது ஆன்டி-பாக்டீரியல் அதிகம் தன்மை கொண்டது. குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே நுரையீரலில் சேரும் அழுக்குகளை முற்றிலுமாக சுத்தம் செய்யவிடுமாம்.

  MOST READ: ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!


 • சப்போட்டா

  பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள பழங்களில் இந்த சப்போட்டாவும் ஒன்று. இவை உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். குறிப்பாக நுரையீரல் மற்றும் இதயத்தின் பாதுகாப்பை மேம்படுத்துமாம். சபோட்டா ஜூஸை குடித்து வந்தால் நுரையீரல் அழுக்குகள் விரைவிலே சுத்தமாகி விடுமாம்.


 • மஞ்சள்

  ஏராளமான மருத்துவ தன்மை கொண்டது இந்த மஞ்சள். இது உடல் சம்பந்தமான பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் திறன் பெற்றது. இதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் நுரையீரலில் சேர கூடிய அழுக்குகளை சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது.


 • பொட்டாசியம் நிறைந்த பழங்கள்

  அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்த பழங்களான ஆரஞ்ச், வாழை பழம், தக்காளி, அத்தி பழம் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்து கொண்டால் விரைவிலே நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் முற்றுபுள்ளி பெற்று விடும்.
  இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
உலக மக்கள் தொகையில் பல விதமான நோய்களால் பலர் அவதிப்படுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. குறிப்பாக புற்றுநோய், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள்... இப்படி நோய்கள் வரிசை கட்டி நிற்கிறது. நோய்களின் வருகையும் அவற்றின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளன. குறிப்பாக இந்த வரிசையில் புகை பழக்கம் முதன்மையான இடத்தில் இருந்து கொண்டு மக்களை வாட்டி எடுக்கிறது.

இதனால் மிகவும் மென்மையான நுரையீரல் பொசுங்கி, உயிரை பறித்து விடுகிறது. இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க ஒரு அருமையான தீர்வு உள்ளது. புகைத்தாலும் உங்கள் நுரையீரல் பாதிக்காமல் இருக்க இந்த பதிவில் கூறும் காய் கனிகளை சாப்பிட்டு வந்தாலே போதும்.

   
 
ஆரோக்கியம்