Back
Home » Business
ஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது?
Good Returns | 6th Oct, 2018 04:08 PM
 • பிசினஸ்

  மேல பாத்தோமே அது ஏதோ சினிமா டயலாக் இல்லங்க. எல்லாமே ரியல். டிக்கேட் காசு அப்புடியே கமிஷனா தர்றீங்களா எந்த ட்ரெயின்ல வேணாலும், எத்தனை டிக்கேட் வேணும்னாலும், எந்த கேட்டகிரியில வேணாலும் டிக்கேட் வாங்கித் தர்றோம். முக்கியமா தத்காலா டபுள் ஓகே. வாங்கித் தரேன்னு தான் அவங்க ஆளுங்க எல்லாருமே பேசுவாங்க. இப்படி ஒரு மனிஷன் தில்லி, மும்பை, ஜான்பூர்-ன்னு மூனு பிராஞ்ச் வெச்சி லட்சம் லட்சமா சம்பாதிச்சிக்கிட்டு இருந்தான். சாரி இருந்தார். அவர இப்ப தான் நம்ம சிபிஐ வலை விரிச்சிப் புடிச்சிருக்கு. ஒரு நேரத்துல 100 ட்ரெயின்ல, 1000 தத்கால் டிக்கேட் வர ஒரு நொடிக்கு புக் பண்ண முடியுமாம், அது தான் அவங்க சைட்டோட சாதனையாம்.


 • டிரெயினிங் இன் ஐஆர்சிடிசியில்

  அந்த புண்ணியவான் 2007 -ல் இருந்து 2011 வரை ஐஆர்சிடிசி-ல தான் வேலை பார்த்திருக்கார். அந்த ஐந்து வருஷத்துல மனிஷன் ஐஆர்சிடிசி-புக்கிங் சைட்டோட முழு ஜாதகத்தையும் முழுசா புரிஞ்சிக்கிட்டாரு. சைட் எப்புடி இயங்குது, சைட்ல இருக்குற ஓட்டைங்க என்ன, இந்த சைட்ட வருங்காலத்துல மாத்துனாலும் எந்த ஓட்டைகள எல்லாம் அடைக்கவே முடியாது. தற்காலிக ஓட்டைகள் எதுன்னு மனிஷன் பிரிச்சி மேய்ஞ்சிருக்காப்புல. ஐஆர்டிசியில வேலை பாத்தப்ப "டெய்லி இந்த மனிஷன் லேட்டாத் தான் போவாரு, ரொம்ப சின்ஸியரான ஆளு" என்று நல்ல பெயர் எடுத்தவர். இப்ப தான தெரியுத் நீ ஏன் தினமும் லேட்டா போயிருக்கேன்னு.


 • ஒரு சைட், ஒரே ஒரு சைட்

  2011-ன்னுல சமத்துப் புள்ளையாட்டம் வெளிய வந்த மனிஷன், கையோடு ஒரு க்ரைம் பார்ட்னர பாத்து "மாப்ள, என் கிட்ட ஒரு மாஸ் ஐடியா இருக்கு. எனக்கு இந்த மாதிரியான டெக்னிக்கல் உதவிங்க எல்லாம் நீ செஞ்சித் தந்தா, வர்ற கமிஷன்ல 50:50"-ன்னு டீல் போட்டிருக்காங்க. சைட்டும் சூப்பரா ரெடியாகிருச்சு. அந்த சாஃப்ட்வேரோட பெயர் "நியோ".


 • ஒன் மேன் ஷோ

  நியோவ வெச்சு தொழில் பாக்க ஆரம்பிச்சி க்ரைம் பிரதர்ஸ் அடுத்த சில மாசத்துலேயே தில்லி, மும்பை, ஜான்பூர்ல பெரிய ட்ரைன் டிக்கேட் தாதாக்கள் ஆயிட்டாங்க. தில்லி, மும்பை ஸ்டேஷன்கள்ள வெகுஜனங்க unreserve டிக்கேட்டுக்கு நிக்கிறாங்கன்னா, இங்க ஏசி-க்ளாஸ் கஷ்டம்ர் எல்லாம் டிக்கேட்ட விட ரெண்டு மடங்கு தர்றேன், மூனு மடங்கு தர்றேன்னு பணத்த வாரி இறைக்க வரிசையில நின்னாங்க. மேல சொன்ன மூனு எடத்துல மட்டும் தான் இவங்க நேரடியா இறங்கி தொழில் பாத்தாங்க. மத்த இடத்துக்கு எல்லாம் வேற பிளான். அது ஒரு நல்ல கார்ப்பரேட் பிளான்.


 • SAAS:

  நம்ம க்ரைம் பிரதம்ர்ஸுக்கு வர்ற சில லட்சங்கள் மாசத்துக்கு பத்தல. ஆக அவங்க கண்டுபிடிச்ச சாஃப்ட்வேர மத்த டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுங்களுக்கு விக்க ஆரம்பிச்சாங்க. "டியர் ஏஜெண்ட்ஸ். நியோ சைட் ஒரு நொடிக்கு 1000 தத்கால் வர புக் பண்ணலாம். இத பாரு ரெக்கார்ட்"-ன்னு எல்லார் கிட்டயும் ஆதாரத்தோட காட்டுனது தான் லேட். "தம்பி உங்களுக்கு எவ்வளவு கமிஷன் வேணும்"-னு ஏஜெண்டுங்களே இறங்கி வந்தாங்க. SAAS - Software as a service, முறையில் இந்த அரசு அனுமதி பெறாத திருட்டு சைட்ட இந்தியாவுல இருக்குற பல ஏஜெண்டுங்களும் வாங்க ஆரம்பிச்சாங்க. லட்சங்கள் கோடிகளாயின. வீடுகள் வில்லாக்கள் ஆயின.


 • லட்சாதிபதி டூ கோடீஸ்வரர்

  இந்த சாஃப்ட்வேருக்கு பண்ண செலவுங்க போக நம்ம க்ரம் பிதர்ஸுக்கு நிகர லாபம் 89.42 லட்சம் பணம், 61.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகைகள், ஏகப்பட்ட வீடுங்க, பெரிய வில்லாக்கள் ரெண்டு, 14 ஹை எண்ட் லேப்டாப்புகள், மத்த டெக்னிக்கல் சமாச்சாரங்கள், இந்தியாவுல14க்கும் மேற்பட்ட பெரு நகரங்கள்ள பெரிய சைபர் க்ரைம் நெட்வொர்க், பிட்காயின், ஹவாலா பணம். ஒரு டிக்கேட் புக் பண்ற சாஃப்வேர் டெவலெப்பர்களுக்கு இவ்வளவு சொத்தான்னு வாய் பிளக்க வேண்டாம்.


 • எப்புடி மாட்னாங்க

  நம்ம க்ரைம் பார்ட்னர்ஸ் பண்ண ஒரே தப்பு அவங்களோட பணத்த பிட் காயினா மாத்துறப்பவும், ஹவாலா பணமா மாத்துறப்பவும் அவங்களோட அடையாளங்களை ஆன்லைன்ல மறைக்க மறந்துட்டாங்க. "ஏண்டா ரயில்வே சைட்டயே முகமுடி போட்டு காலி பண்ணீங்க, உக்க ஜிமெயில் அக்கவுன்ட்ல இருந்தாடா பிட் காயின்ல இன்வெஸ்ட் பண்ணுவீங்க," என்று ஹேக்கர்கள் சமூகம் தலையில் அடித்துக் கொண்டது தனி கதை.


 • க்ரைம் பிரதர்ஸ்

  அஜய் கார்க் தான் ஐஆர்சிடிசியில் வேலை பாத்த 'நியோ' சாஃப்ட்வேரோட மாஸ்டர் மைண்ட். அவரோட க்ரைம் பார்ட்னர் தான் அனில் குப்தா. இப்ப ரெண்டு பேரும் சிபிஐ கஸ்டடீல இருக்காங்க. இவங்க செஞ்சதுக்கும், இப்ப லாலு பிரசாத் சிக்கி இருக்குற ஊழல் வழக்குக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லி ஒரு புரளியும் ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா நம்ம க்ரைம் பிரதர்ஸ விசாரிச்ச சிபிஐ அதிகாரிங்க "இதுவரை இந்த டிக்கேட் புக்கிங் கேஸுக்கும் லாலு பிரசாத் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. தயவு செஞ்சி வதந்திங்கள பரப்ப வேணாம்"-ன்னு தெளிவா சொல்லி இருக்காங்க.


 • ஐஆர்சிடிசி

  அஜய் கார்க் மற்றும் அவரின் பார்ட்னர் அனில் குப்தா சிக்கிய பிறகு ஒரு தனி சைபர் க்ரைம் படையை தயார் செய்து இருக்கிறார்கள். சைட்டில் எந்த எந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி இப்படி வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி டிக்கேட்டுகளை புக் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கச் சொல்லி இருக்கிறது ஐஆர்சிடிசி.இனிமே இது மாதிரி நடக்காதுங்க, நீங்க தைரியமா இருங்கன்னு கண்ணிர் விடாத குறையாக கதறி இருக்கிறது ஐஆர்சிடிசி.


 • சிபிஐ

  தில்லி, மும்பை மற்றும் ஜான்பூர் போன்ற இடங்களைத் தவிர இன்னும் 14 இடங்களில் நம் க்ரைம் பிரதர்ஸ் பரப்பி இருக்கும் டிக்கேட் புக்கிங் கடைகளை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறார்களாம். இனும் எத்தனை பேரிடம் இந்த நியோ சாஃப்ட்வேர் இருக்கிறது, அவர்கள் எங்கு எல்லாம் இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனப்தை கண்டுபிடிக்கத் திணறிக் கொண்டிருக்கிறார்கள் சிபிஐயினர்.


 • எனக்கு ஒரு டவுட்டு

  அரசாங்கம், என்னடான்னா ஆதார் கார்ட் இணச்சாத்தான் உன்னைய ஆறு டிக்கேட்டுக்கு மேல புக் பண்ண விடுவே-ன்னு சொல்லுது. இவன் என்னடான்னா ஒரு நொடிக்கு 1000 டிக்கேட் புக் பண்ணி காச அள்ளிக்கிட்டிருக்கான். ஒருவேளை ஐஆர்சிடிசி சைட்டுக்கும், ஆதாருக்கும் ஏதாவது நேரடி தொடர்பு இருக்கான்னு தெரியல. தயசு செஞ்சி ஆதாருக்கும் இதுக்கு ஒரு ஆக்ஸிஸ் இருக்குன்னு சொல்லிறாதீங்கடா.
நீங்க எந்த ரயில். எத்தனை தத்கால் டிக்கேட்...... துரந்தோ எக்ஸ்பிரஸ் 5 டிக்கெட் ஸ்லீப்பர் க்ளாஸ்...... இந்தாங்க கன்ஃபார்ம் டிக்கேட், டிக்கேட் விலை 1600*5=8,000, கமிஷன் 8,000 மொத்தம் 16,000 ரூவா கொடுங்க சார். என்னங்க டிக்கெட் விலைய அப்புடியே கமிஷன் கேக்குறாங்க. தம்பி இங்க வந்தா எல்லாமே கன்ஃபார்ம் டிக்கேட் தான். வேணும்னா நீயே ட்ரை பண்ணிப் பாரு. உனக்கு நிச்சயமா டிக்கேட் கிடைக்காது. ஆனா எங்களுக்கு கன்ஃபார்ம் டிக்கெட்டா தான் புக்கிங்கே ஆகும். வேணும்னா வாங்கு இல்லன்னா கெளம்பு. நெக்ஸ்ட்.

   
 
ஆரோக்கியம்