Back
Home » ஆரோக்கியம்
ஆரோக்கியம் முதல் புற்றுநோய் தடுப்பு வரை உதவும் புளி
Boldsky | 9th Oct, 2018 05:05 PM
 • இதய ஆரோக்கியம்

  புளி இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது. ஆய்வுகளின் படி புளி தமனிகளில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நார்ச்சத்துக்கள்தான். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் உள்ள அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி இதய நோய்களின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தடுக்கிறது.


 • சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது

  ஆல்பா அமிலேஸ் என்பது புளியில் இருக்கும் ஒரு பொருள் ஆகும். இது உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதை தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை உயர்ந்த அளவு சர்க்கரை கூட நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது. கணையம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தமுடியாமல் இருக்கும்போது அது சர்க்கரை நோய் மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் காரணமாகிறது.


 • நோய்த்தடுப்பு

  புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதனை சிறப்பான ஒன்றாக மாற்றுகிறது. இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது. மேலும் இதில் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரிய பண்புகள் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதுடன் நோயரெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.


 • உடல் சூட்டை தணிக்கிறது

  நீங்கள் வெப்பமான பகுதியில் வாழ்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடலில் நீரின் அளவு குறையும்போது அது பல விளைவுகளை ஏற்படுத்தும். புளி கரைசலில் சிறிது சீரகத்தூள் கலந்து குடிப்பது உடல் சூட்டை உடனடியாக குறைக்கக்கூடும்.

  MOST READ: "நான் அலுவலகத்தில் இருக்கும் பொழுதே என் பனிக்குடம் உடைந்து விட்டது" - போராட்ட பிரசவம்!


 • எடை இழப்பு

  எடை அதிகரிப்பு என்பது இப்போது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை ஆகும். ஆனால் புளி அதன் மருத்துவ குணங்களை கொண்டு அதிக எடையை குறைக்கக்கூடியது. நமது உடலில் உள்ள ஒரு என்சைம் கொழுப்பு மற்றும் ஹைட்ரோக்சிசிரிட் அமிலத்தை அதிகரிக்கிறது. புளி இதனை தடுக்கக்கூடியது. மேலும் செரோட்டினின் உற்பத்தியை அதிகரித்து பசியை கட்டுப்படுத்துகிறது.


 • தசை மற்றும் நரம்புகளின் வலிமை

  புளியில் உள்ள பி காம்ப்ளக்ஸ் ஆனது தயாமின் வடிவத்தில் உள்ளது இது நரம்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான உடல் மற்றும் உடலின் சீரான செயல்பாடுகளுக்கு காரணமாக அமைகிறது.


 • செரிமானம்

  புளியில் டார்ட்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது இது செரிமான மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளில் கூட தனி மருத்துவகுணங்கள் உள்ளது.


 • அல்சரை குணப்படுத்துகிறது

  ஆரோக்கியமான செரிமான மண்டலம் மட்டுமே முழு திறனுடன் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச இயலும். தொடர்ந்து உணவில் புளி சேர்த்துக்கொள்ளும்போது அல்சரை தடுக்கும். புளியம் பழத்தின் விதைகள் அல்சரை ஏற்படுத்துவதை தடுக்கக்கூடிய குணங்கள் உள்ளது.

  MOST READ: பெண்கள் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? அனிதா குப்புசாமி சொல்லும் காரணங்கள்...


 • புற்றுநோயை தடுக்கும்

  புற்றுநோய் ஏற்பட காரணம் புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதுதான். ஆன்டிஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ள புளியானது உடலில் ஆன்டிஆக்சிடண்ட்களை அதிகரித்து உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கிறது.


 • வயதாவதை தடுக்கிறது

  புளி வயதாவதை தடுக்க கூடியது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் புளி முக்கியப்பங்கு வகிக்கிறது. சூரிய வெப்பத்தால் முகம் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை புளி சரிசெய்யக்கூடியது மேலும் சரும மேற்பரப்பில் ஏற்பட்ட விரிசல்களையும் சரிசெய்ய பயன்படுகிறது. இதில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சில் முகப்பருக்கள் மற்றும் வலியை கட்டுப்படுத்த கூடியது.
அறுசுவைகளில் ஒன்றான புளிப்பு சுவை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். சாம்பார், ரசம் என அனைத்தும் புளி சேர்க்கவில்லை என்றால் ருசிக்காது. அதற்கு காரணம் அதன் தனித்துவமான சுவைதான். தென்னிந்திய உணவுகளில் புளிக்கென தனி இடம் உள்ளது. பலரும் உணவில் கலக்காமல் கூட இதனை சாப்பிடுகிறார்கள்.

புளி சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கியாயத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் இது தொண்டை புண், இருமல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவும். குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு புளி அவசியமான ஒன்றாகும். இந்த பதிவில் இதுவரை நீங்கள் அறியாத புளி வழங்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்