Back
Home » Business
ரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன?
Good Returns | 10th Oct, 2018 10:20 AM
 • தராசு பத்திரிக்கை

  நக்கீரன் கோபால் அவர்கள் கடைசியாகத் தராசு பத்திரிக்கையில் வேலை பார்க்கும் போது ஆசிரியருடனான சில கருத்து வேறுபாடுகளால் வீட்டிற்குச் செல்கிறார். இவர் தராசு பத்திரிக்கையில் இருந்து விலகும் போது அதன் ஒரு பதிப்பு 3 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.


 • அப்பாவின் கோபம்

  வேலை விட்டு வீட்டிற்குச் சென்ற கோப்பால் அப்பாவிடம் திட்டு வாங்கி விட்டு அம்மா சுட்டுக் கொடுத்த இட்டிலியைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவரது அப்பா உதைக்கிறார்.

  பயந்து எழும் என்னைப் பார்த்து நீ இல்லை என்றால் அந்தப் பத்திரிக்கையே ஓடாதென்று சொன்னார்கள். அங்க எல்லாம் வரிசியா நின்னு வாங்கிட்டு இருக்கிறார்கள். எதற்கு அந்த வேலைவிட்டு வந்த என்று கேட்கிறார். நான் உங்களிடம் என்னால் தான் இந்தப் பத்திரிக்கையை நடக்குதுனு எப்ப சொன்னேன் என்று வாக்குவாதம் நீள்கிறது.


 • தாயின் பாசம்

  இடை மறித்த கோபாலின் தாய் முதலில் எழு முகத்தைக் கழுவிட்டு வா, அந்தப் பையை எடு, நீ இங்க இருக்காத, சென்னைக்கே போ என 120 ரூபாயினைக் கொடுத்து அனுப்புகிறார். அனுப்பும் போது ஒரு நாள் இல்லை என்றால் இரு நாள் இவன் சொந்தமாக ஒரு பத்திரிக்கை ஆரம்பிப்பான் பாருங்கள் என்று தன் கணவரிடம் கூறுகிறார்.


 • பத்திரிக்கை தொடக்கம்

  அம்மா கொடுத்த பணத்தினை எடுத்துக்கொண்டு சென்னை வரும் கோப்பால் சென்னை மண்டபம் சாலையில் தான் தங்கியிருந்த அறைக்கே திரும்ப வருகிறார். அங்கு அவரது நண்பர் அண்ணே நாம் ஒரு பத்திரிக்கையினைத் துவங்குவோம் என்று கூறுகிறார். உடனே அம்மா கூறியதை நினைவுக்கு வர, பிற நண்பர்களும் இதையே வழி முறையைப் பத்திரிக்கை தொடங்குவதற்குத் தேவையான பேப்பர் விற்பனையாளர் ஒருவரை அணுகிறார்.


 • கடன் உதவிகள்

  நமது எம்ஜிஆர் முதல் தந்தி முதல் அனைத்து முக்கியப் பத்திரிக்கைகளுக்கும் பேப்பர் அளித்து வந்த ஆழ்வார் என்பவரைச் சந்தித்துப் பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் என்று இருப்பதாகக் கூறுகிறார் கோப்பால். உடனே யோசிச்சயா? யோசிச்சிட்டேன் அண்ணாச்சி நீங்கள் சொன்னால் ஆரம்பித்துவிடலாம் என்று கூற, 4 வாரத்திற்கான பேப்பரை கடனாகத் தருகிறேன். அடிச்சிடுவயா என்று கேட்கிறார்.

  4 வாரங்களுக்கான பேப்பரை கடனாகத் தருவது என்பது 4 லட்சம் ரூபாய் முதலீடு. தராசு நிறுவனத்தில் இருந்து தனக்கு வர வேண்டிய 4000 ரூபாய் சம்பள பாக்கி, வீட்டில் இருந்து அம்மா கொடுத்து அனுப்பிய 120 ரூபாய் மற்றும் 4 வார பேப்பர் கடன், மற்றும் அவரது பையன் ஹறி என்பவர் அட்டைப்படப் பேப்பர் கடன் அளிக்கச் சம்மதிக்கிறார்.

  இவை கிடைத்த உடன் அச்சகம் தேடி செல்கிறார் கோப்பால். அச்சகம் வைத்துள்ள பலராம் ஐயரைச் சந்திக்கிறார். அவர் 4 வாரங்களுக்கு இலவசமாக இதழ் அச்சிட கடன் அளிக்கிறார்.

  டைப் செய்யும் அலுவலகத்தில் ராஜேந்திரன் என்பவர் 8 வாரங்களுக்கு இலவசமாக டைப் செட் செய்து தருவதாகக் கூறுகிறார். பின்னர்ப் பைண்டிங் செய்யக் குமார் என்பவர் 16 வாரங்கள் கடன் அளிக்கிறார்.

  பத்திரிக்கை தொடங்க தேவையான அனைத்தும் கிடைத்த பிறகு பெயர் தேவை. அதற்காகத் திமுகவில் இருந்து கா சுப்பு என்பவரிடம் இருந்து நக்கீரன் பெயரினை இலவசமாக நீதிமன்றம் சென்று வாங்கினார்.

  பின்னர் அவர் தங்கி இருந்த அறை அருகே இந்திய காபி கடையில் போன் இரவல் வாங்கிக் கொண்டு அதற்கு ஒவ்வொரு அழைப்பினைம் பெற 10 பைசா கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.


 • நக்கீரன்

  இப்படி 1988-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நக்கீரன் இதழின் ஒரு பதிப்பு ஒரு வருடத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் காப்பிகள் வரை விற்க ஆரம்பித்தது. பின்னர் ஹாரிங்டன் சாலையில் சொந்த அலுவலகம் என நக்கீரன் பெரிய அளவில் வளர்ந்தது மட்டும் இல்லாமல் இன்று வாரத்திற்கு இரண்டு பதிப்புகள் என ஒவ்வொரு பதிப்பாயும் 2 லட்சம் நபர்கள் வாங்கிப் படிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் முறையிலும் , ஆன்லைன் முறையில் நக்கீரன் புத்தகம் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


 • தற்போதைய நிலை

  நக்கீரன் புத்தகம் தற்போது 20 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. நக்கீரன் மட்டும் இல்லாமல் பாலஜோதிடம், சினிக்கூத்து, ஓம், இனிய உதயம் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் விற்று வருகின்றனர்.
தமிழ் ஊடகங்களில் புலனாய்வு பத்திரிக்கைக்குப் பெர் போன இதழ் என்றால் அது நக்கீரன் தான். ஜெயலலிதா, கருணாநிதி, வீரப்பன், நித்தியானந்தா எனக் கோபால் அவர்களின் நக்கீரன் பத்திரிக்கையில் வராத புலனாய்வு செய்திகளே கிடையாது.

தமிழகத்தில் இருந்து இந்திய பிரதமர் பேட்டி எடுத்த முதல் தமிழ் பத்திரிக்கையும் நக்கீரன் தான் ஆகும். இவ்வளவு பெருமை கொண்ட நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டு மிகப் பெரிய பரபரப்பிற்கு வெளியாகியுள்ளார். எனவே இந்த நக்கீரன் இதழ் எப்படித் தொடங்கப்பட்டது என்பதை இங்குச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்