Back
Home » ஆரோக்கியம்
நீங்கள் பயன்படுத்தும் இந்த பல்புகள்தான் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது தெரியுமா?
Boldsky | 10th Oct, 2018 11:14 AM
 • தூக்க கோளாறுகள்

  இரவு நேரத்தில் ப்ளோரசன்ட் பல்புக்கு கீழே இரவு நேரத்தில் தூங்கும்போதோ, வேலை செய்வதோ மேலோட்டினின் ஹார்மோன் சுரப்பை குறைக்கிறது. இந்த மேலோட்டினின் தான் உங்கள் தூக்கத்திற்கு தேவையான ஒன்றாகும். இந்த பல்ப் குளிரான சூழ்நிலையை சூடாக மாற்றக்கூடும்.


 • சரும வெடிப்புகள்

  இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் தொடர்ந்து சருமத்தில் படும்போது அதனால் சருமத்தில் வெடிப்புகள் தோன்ற வாய்ப்புள்ளது. இது பாலிமார்பஸ் சரும வெடிப்பு எனப்படுகிறது. கிட்டதட்ட 10 சதவீத மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. சூரிய ஒளியை விட இந்த கதிர்வீச்சுகளால் சருமத்தில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படும்.


 • கண் பாதிப்பு

  அல்ட்ரா வயலட் கதிர்வீச்சின் தொடர்ச்சியான கசிவு கண்ணின் நிலையை மோசமாக்கலாம். இது நீங்கள் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ச்சியான கதிர்வீச்சுகள் உங்கள் கண்களை பாதித்து விழித்திரையையும் பாதிக்கும்.


 • மின்காந்த விளைவு

  சில ப்ளோரசன்ட் பல்புகள் அதிகளவு மின்காந்த அலைகளை வெளிவிடக்கூடும். இந்த மின்காந்த அலைகள் 30 முதல் 60 Khz வரை இருக்கும்போது அது உயிரியல் மூலக்கூறுகளில் பல கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற கருவிகளிடம் இருந்து சிறிது தூரம் விலகி இருப்பதுதான் நல்லது.

  MOST READ: தங்கள் சுய தாம்பத்திய காட்சிகளை படம் பிடித்து பார்ன் நிறுவனத்திற்கு விற்றுவரும் வினோத ஜோடி!


 • மெர்குரி விளைவு

  ப்ளோரசன்ட் பல்புகள் மெர்குரி என்னும் நச்சுப்பொருளை கொண்டுள்ளது இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கருவிலுள்ள குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு இதனால் பல பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை இந்த பல்புகள் உடைந்தால் அதை குழந்தைகளோ அல்லது கர்ப்பிணி பெண்களோ தொடாமல் பார்த்துக்கொள்ளவும்.


 • மற்ற விளைவுகள்

  இதனால் மனஅழுத்தம், எண்டோகிரைன் குறைவு, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவது, பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, மேலும் இது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இந்த பல்பிற்கு மிக அருகிலோ அல்லது நீண்ட நேரம் இருப்பதையோ தவிர்க்கவும்.


 • எப்படி அப்புறப்படுத்துவது?

  உடைந்த அல்லது புகைந்த ப்ளோரசன்ட் பல்புகளை அப்புறப்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்ப் உடைந்தவுடன் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்துவிட்டு யா நிமிடம் அறையை விட்டு வெளியேறிவிடவும். பல்பை கையில் எடுக்கும்போது கையுறை அணிந்துகொண்டு பல்புகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போடவும். அவற்றை நன்கு கட்டி குப்பையில் போடுங்கள், சாதாரணமாக போடுவது மனிதர்கள் மட்டுமின்றி சுற்றுசூழல் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  MOST READ: மனைவி ஏமாற்றியதை அறிந்தும் 35 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன் - My Story #314
ப்ளோரசன்ட் பல்புகள் இன்று உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். வீடுகள் முதல் அலுவலகங்கள் வரை அனைத்துமே ப்ளோரசன்ட் பல்புகளை பயன்படுத்த தொடங்கிவிட்டது. ப்ளோரசன்ட் பல்புகள் குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சத்தை தரக்கூடியவை.

இந்த பல்பு விலை மிகவும் குறைவானது, அதேசமயம் இதில் பல பக்கவிளைவுகளும் உள்ளது. மற்ற பல்புகளை விட இதில் அதிகளவு கதிர்வீச்சுகள் உள்ளது. இந்த கதிர்வீச்சுகள் பல உடலில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ப்ளோரசன்ட் பல்புகள்ளால் ஏற்படும் பாதிப்புகள் என்னெவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

   
 
ஆரோக்கியம்