உடனிணைந்த உடல் சீர்குலைவுகளின் தொகுப்பானது பாடி போகஸ்டு தொடர் நடத்தை எனப்படுகிறது. இவை சுய-தோற்ற நடத்தைகளாகவும் அழைக்கப்படுகின்றன. இந்த கோளாறு தூண்டுதலால் ஏற்படுகிறதா அல்லது கட்டாயத்தால் ஏற்படுகிறதா என்பதை வகைப்படுத்தும் சில விவாதங்கள் இன்னும் உள்ளன. சில கோட்பாடுகளின் படி பாடி போகஸ்டு தொடர் நடத்தையானது, தூண்டுதல் கட்டுப்பாட்டுக் கோளாறுகள் ( impulse control disorders), பதட்டக் கோளாறுகள்(anxiety disorders) மற்றும் ஒரு வித நிர்ப்பந்தக் கோளாறு (obsessive compulsive disorder) ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இந்த நடத்தை கொண்ட நபர்களைக் கட்டுப்படுத்துவது கடினம். சம்பந்தப் பட்டவரை இது தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் வடு போன்ற சுய-உடல் காயங்களை ஏற்படுத்தும் நிலைக்குக்கூடத் தள்ளலாம். நிலைமை சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான உணர்ச்சி அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
MOST READ: அடிக்கடி சோயா சாப்பிடுவீங்களா? அப்போ நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்...
கூந்தலை இழுப்பதற்கும், தோலை உரிக்கவும் சிலர் மரபணு ரீதியாகப் பழக்கமடைந்திருக்கலாம். இரட்டைப் பிள்ளைகளில், முடியைப் பறித்தல் நடத்தை இயல்பாக இருப்பதை ஆராய்ச்சிகள் காட்டுகிறது. பாடி போகஸ்டு தொடர் நடத்தைக்கு வழிவகுக்கும் மற்ற காரணிகள்:
• மன அழுத்தம்
• மனோநிலை
• சுற்றுச்சூழல்
• வயதுக்கு வருதல்
பொதுவாக, இத்தகைய நடத்தைகள் பரவலாக மரபணு மற்றும் நரம்பியல் தோற்றத்துடன் தொடர்புடையவை. இதில் மரபியல், நடத்தைசார்ந்த மற்றும் உயிரியல் குறிகாட்டிகளை எடுத்துக் கொண்ட பிறகு மட்டுமே தேவைப்படுகிற தனிப்பட்ட சிகிச்சை அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது.
முடியைப் பிய்த்துக் கொள்ளல்
இது trichotillomania ( தலை முடியைப் பிய்த்துக் கொள்ள இயற்கை மீறிய ஆவல்) எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோளாறு உள்ளவர்கள், தங்கள் கண் இமை , உச்சந்தலை, புருவங்கள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் இருந்து முடியை வெளியேற்றுவதற்கு முனைகின்றனர் . இதில் பலர் , தங்கள் பிய்த்து எடுத்த முடியை விழுங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இப்பழக்கம் சமூகத்தில் தீவிரமான சங்கடத்தை அவர்களுக்கு ஏற்படுத்தலாம்.
இது தோலுரித்தல்(excoriation) எனக்குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோளாறு கொண்ட மக்கள் தோலை பலமுறை தேய்த்தல், கீறுதல், குத்துதல், தோண்டுதல், தொடுதல் போன்ற செயல்களைச் செய்கின்றனர். இதனால், தோலில் நிற மாற்றம் ஏற்படுகிறது மற்றும் கீறுவதால் திசுக்களின் சிதைவும் ஏற்படுகிறது. அதே போல் தோல் சிதைவும் ஏற்படலாம்.
MOST READ: பெண்கள் ஏன் சபரிமலைக்கு போகக்கூடாது? அனிதா குப்புசாமி சொல்லும் காரணங்கள்...
இது onychophagia என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோளாறு கொண்டவர்கள் நகங்களை தீவிரமாக அதன் நகத்துவாரம் வரை கடிக்கிறார்கள். அதில் வரும் நகத்துகள்களை மெல்லவும் செய்கிறார்கள். இதனால் நகங்களில் இரத்தப்போக்கு மற்றும் சில தொற்று நோய்களுக்கு கூட வழிவகுக்கலாம்.
இந்தக் கோளாறு கொண்டிருக்கும் பலர் தங்கள் கன்னத்தையும், உதடுகளையும் கடிக்கும் அல்லது மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். கன்னம் கடிக்கும் பழக்கமானது அங்கு வலி, புண்கள், சிவந்து போதல் மற்றும் கண்ணீரை ஏற்படுத்தும். நாட்பட்ட இந்தப் பழக்கம் "morsicatio buccarum" என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோளாறு கொண்ட நபர்கள் தொடர்ந்து தனது கன்னத்தில் உள்பக்கம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.
தீவிரமான நகம் பிய்க்கும் பழக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நகச்சிதைவை ஏற்படுத்தலாம். இது வளைவுகள் மற்றும் பள்ளங்களையும் ஏற்படுத்தலாம். நகத்தின் அடியில் இரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம் - இது வழக்கமாக ஊதா-கருப்பு புள்ளியாகத் தெரியும்.
MOST READ: உங்க முகமும் இப்படி சுருங்கி கருத்துப்போயிருக்கா? எலுமிச்சை பழத்தை இப்படி தேய்ங்க...
தோலை உரித்தல் மற்றும் சதையைச் சாப்பிடுவது ஒரு வகை ஒடுக்கப்பட்ட கட்டாய மற்றும் தொடர்புடைய கோளாறுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த நடத்தை கொண்டவர்கள், தங்கள் உடலில் இருந்து தோலை உரிக்கிறார்கள் மற்றும் அந்த தோலின் ஒரு பகுதியை சாப்பிடுகிறார்கள்.
அறிகுறிகளை அறிவதுதான் ஒரு மருத்துவர் இந்தப் பிரச்னைக்குத் தேவையான தீர்வை வழங்க சிறந்த வழி. இந்த கோளாறுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முன்பு மக்கள் பொதுவாக பதட்டமாக அல்லது ஆவலுடன் இருக்கிறார்கள்.
தோலைப் பிய்த்தல் அல்லது முடியை பிடுங்குவது போன்ற செயல்பாட்டைச் செய்வது, அவன் அல்லது அவளுக்குள் தோன்றிய பதட்டத்திலிருந்து விடுவிக்கும். இந்த நேரங்களில் கட்டுப்பாட்டுத் திறனை இழப்பதால் மக்கள் பொதுவாக கவலைப்படுகிறார்கள்.பொதுவாக அவர்களும் கூட இந்த செயல்பாட்டை நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.
MOST READ: நவாராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது? மகிசாசுரன் பராசக்தியால் எதற்காக கொல்லப்பட்டான்?
• சருமத்தை பிய்த்தல்
• சுய சேதம் அல்லது சுய தீங்கிற்கு வழிவகுக்கும்படி உடல் பாகத்தைக் கையாளுதல்
• கோளாறுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் நிகழ்வை நிறுத்த அல்லது குறைக்க மீண்டும் மீண்டும் முயற்சித்தல்
• கோளாறுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் காரணமாக குறைந்த செயல்பாடு
• நோயாளி மிகவும் கவலையான நிலையில் இருத்தல்.
• அறிவாற்றல் சிகிச்சை
• மருந்துகளின் பயன்பாடு
வழக்கமாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்ட serotonin reuptake inhibitor antidepressants மற்றும் N- N-acetylcysteine ஆகும்.
பாடி போகஸ்டு தொடர் நடத்தை தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்க அறிவாற்றல் சார்ந்த நடத்தை சிகிச்சையைப் பயன்படுத்தப்படலாம்.அத்தகைய சிகிச்சை பழக்கம் தலைகீழ் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சையின் கீழ், நோயாளிகளுக்கு பின்வரும் வழிகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்:
• நடத்தை சீர்குலைவு நடவடிக்கையைத் தூண்டும் நிகழ்வுகள் அல்லது சூழல்களின் அடையாளம்.
• கோளாறுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுகையில் ஒருவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல் .
• தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்வதிலிருந்து தங்களைத் தடுக்க முயல்வது . இது முதன்மையாக தீங்கு விளைவிக்கும் செயலை மாற்றுகிறது. கைகளை இருகப்பற்றுதல் அல்லது கைகளின் மேல் அமருதல் போன்ற உத்திகளையும் பயன்படுத்தலாம்.
தோலை உரித்தல், நகம் கடித்தல், முடியை இழுத்தல் என செய்ததையே திரும்பத் திரும்ப யாராவது செய்கிறார்களா? அதற்குப் பெயர்தான் பாடி போகஸ்டு தொடர் நடத்தை.
இந்த நடத்தையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, உங்களுக்கு அது விளைவிக்கும் சுயத் தீங்குகளை அறிய, அதன் நோயறிதல் மற்றும் சிகிச்சையளிக்கும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்,