Back
Home » ஆரோக்கியம்
உங்கள் படுக்கை அறையில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமாம்...!
Boldsky | 10th Oct, 2018 05:01 PM
 • சுகமான நண்பன்..!

  காலை முதல் இரவு வரை வேலை செய்து களைத்த நம்மை அக்கரையோடு அரவணைத்து கொள்வதே நம் படுக்கை அறைதான். நமது கஷ்டங்களை எல்லாம் ஒரே நொடி பொழுதில் மறந்து நிம்மதியாக நாம் உறங்க இந்த படுக்கை அறைதான் உற்ற நண்பனாக இருக்கிறது. ஆனால், இதுவே ஆபத்தை விளைவிக்கிறது என்றால் நிச்சயம் மோசமான ஒன்றுதான்.


 • இங்கையும் புற்றுநோயா...!

  நாம் சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை, பார்க்கும் காட்சிகள் இப்படி அனைத்துமே நமக்கு புற்றுநோயை தருவதாக மாறி கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் படுக்கை அறையும் இப்போது சேர்ந்துள்ளது. படுக்கை அறையில் உள்ள பொருட்கள் தான் புற்றுநோயை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.


 • தலையணை உறையா..?

  இன்று நாம் பயன்படுத்தும் தலையணை உறையானது முழுக்க முழுக்க வேதி பொருட்கள் நிறைந்த பஞ்சினால் தயாரிக்கின்றனர்.எனவே, தலையணை வாங்கும் போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்த காட்டன் பஞ்சினால் தயாரித்ததா..?' என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


 • பிளாஸ்டிக் பொருட்கள்

  உங்கள் படுக்கை அறையில் நீங்கள் வைத்துள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் நீங்கள் எடுத்து விட வேண்டும். குறிப்பாக பிளாஸ்டிக் பொம்மைகள், கவர்கள், பரிசுகள். ஏனெனில், இவற்றில் formaldehyde என்ற மோசமான வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன. எனவே, இவை படுக்கை அறை வெப்பம் அடையும் போது இந்த பிளாஸ்டிகுகள் வேதி வினை புரிந்து நம் உடலில் ஒட்டி கொண்டு புற்றுநோயை தரும்.

  MOST READ: ஒரே வாரத்தில் தொப்பையை மறைய வைக்கணுமா..? அப்போ இந்த 7 நாள் டயட்டை கடைபிடியுங்கள்... • கலர் கலர் பெயிண்டா..?

  வீட்டிற்கு கலர் கலராக பெயிண்ட் அடிக்க விரும்பி, பல பக்க விளைவுகளை நீங்களே பெற்று கொள்ளாதீர்கள். அதிக வேதி தன்மை அற்ற பெயிண்ட்கள் உடலுக்கு விளைவை தராது. குறிப்பாக படுக்கை அறையில் மிகவும் மென்மையான நிறத்தையே அடிக்க வேண்டும். இல்லையெனில் சுவாச பிரச்சினை, புற்றுநோய் அறிகுறிகள் ஏற்படலாம்.


 • தோலினால் செய்யப்பட்ட பொருட்கள்

  லெதர் என்று சொல்லப்படும் தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், முதலில் இதனை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் இதில் தோலில் மிகவும் நச்சு தன்மை வாய்ந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஆதலால் புற்றுநோய் வர கூடும்.


 • ரூம் ஸ்பிரேயர்ஸ் வேண்டாமே..!

  கமகமவென வாசனை வர வேண்டும் என்பதற்காக கண்ட ரூம் ஸ்பிரேயர்ஸ்களை பயன்படுத்தினால் அதன் பின்விளைவு எத்தகைய மோசமானது என உணருங்கள் நண்பர்களே. புற்றுநோய் உண்டாக்க கூடிய தன்னை இந்த ரூம் ஸ்பிரேயர்ஸ்களிலும் உள்ளதாம். எனவே, இதனை தவிர்த்து விடுங்கள்.


 • ஸ்மார்ட் போன் ஆப்பு..!

  இன்று நம்மில் பலரும் குழந்தையை போல நம் கைப்பேசியை பக்கத்தில் வைத்து கொண்டே தூங்குவோம். ஆனால், இதில் தான் நமக்கு எமன் இருக்கின்றான் என்பது நாம் அறிந்திராத உண்மை...! புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இவற்றில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

  MOST READ: தங்கள் சுய தாம்பத்திய காட்சிகளை படம் பிடித்து பார்ன் நிறுவனத்திற்கு விற்றுவரும் வினோத ஜோடி!


 • படுக்கை உறையுமா..?

  நாம் படுத்து உறங்கும் படுக்கையில் கூட ஆபத்து உள்ளதாம். குறிப்பாக படுக்கை உறையில் உள்ளது. இதனை நச்சு தன்மை மிக்க அமிலங்களை கலந்து தயாரிப்பதால் ஹார்மோன் குறைபாடு, புற்றநோய், மூளை பாதிப்பு போன்றவை ஏற்படும். எனவே, படுக்கை உறையை வாங்கும் போது சுத்தமான காட்டன் பஞ்சினால் செய்யப்பட்டதா..?' என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.


 • தரையின் விரிப்புகள்

  படுக்கை அறையில் உள்ள தரையின் விரிப்புகளை தவிர்த்து விடுங்கள். இவை மிருகங்களின் தோலின் மூலம் தயாரிக்கப்படுவதால் உடலுக்கு ஒவ்வாமையை தந்து விடும். மேலும், சில நச்சு தன்மை உள்ள பொருட்களினால் தரையின் விரிப்புகள் தயாரிக்கப்படுவதால் ஆஸ்துமா, புற்றநோய் போன்றவை ஏற்படலாம்.

  மேற்சொன்ன பொருட்களை தவிர்த்து இனிமையான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே..! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
நமது உடலானது மிகவும் மென்மையான ஒன்றாகும். இதனை நாம் எந்த அளவுக்கு பத்திரமாக பார்த்து கொள்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் அதிக ஆயுளுடன் வாழலாம். நாம் செய்கின்ற, பயன்படுத்துகின்ற ஒவ்வொரு செயலும் பொருட்களும் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. நமக்கு உடலில் ஏற்படுகின்ற ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாம் தான் முதல் காரணமாக இருக்கின்றோம்.

அந்த வகையில், நாம் படுக்கை அறையில் பயன்படுத்த கூடிய பல வித பொருட்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்துமாம். என்னது..! படுக்கை அறையில் கூடவா புற்றுநோய் நம்மை துரத்தும்..? என்ற அதிர்ச்சியான கேள்விக்கு விடையே இந்த பதிவு. எப்படி படுக்கை அறையில் உள்ள பொருட்கள் நமக்கு புற்றுநோயை தருகிறதுனு இனி அறிந்து கொள்வோம் நண்பர்களே.

   
 
ஆரோக்கியம்