Back
Home » ஆரோக்கியம்
வயதாவதை தள்ளி போடும் சித்தர்கள் பயன்படுத்திய அரிய வகை ஆயுர்வேத மூலிகைகள்...!
Boldsky | 11th Oct, 2018 02:51 PM
 • ஏன் வயதாகிறது..?

  நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நமது ஆரோக்கியத்தை பேசுகிறது. அதாவது, ஒருவரின் உடல் ஆரோக்கியமானது ஒருவர் எடுத்து கொள்ளும் உணவை பொறுத்தும், செய்யும் செயலை பொறுத்தே அமையும். அந்த வகையில் உடலில் உள்ள செல்கள் சிதைவடைய தொடங்கினால், விரைவிலே நமக்கு முதுமை வந்து விடும் என்பதே அறிவியல் கூற்று.


 • மூலிகைகளின் பங்கு என்ன..?

  வயதாவதை தள்ளி போட ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். பழங்காலத்தில் சித்தர்கள் மூலிகைகளின் மகத்துவத்தை பற்றி பல கல்வெட்டுகளிலும், ஓலை சுவடிகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். இது மிகவும் அற்புதமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் கூறும் செயல்முறைகளை கடைபிடித்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.


 • சீந்தில்

  இது ஒரு வகையான தொற்றி பரவ கூடிய தாவரமாகும். இதன் இலைகள் இதய வடிவத்தில் இருக்கும். இதன் வாழும் தன்மையை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த தாவரம் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழ்கிறதாம். அதனால் தான் இவை மகத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இதில் உள்ள மூலிகை தன்மை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்தி இளமையாக வைக்க உதவும்.


 • பிராமி

  இது ஒரு அரிய வகை மூலிகையாகும். குறிப்பாக இந்த மூலிகை மூளையின் ஆற்றலை அதிகரிக்க பயன்படும். நமது ஞாபக திறனை அதிகரித்தாலே நம்மால் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்க முடியும். மேலும், இந்த மூலிகை செல்களை புத்துணர்வூட்டி அதிக ஆற்றலுடன் செயல்பட வைக்குமாம்.

  MOST READ: ஒரே வாரத்தில் தொப்பையை மறைய வைக்கணுமா..? அப்போ இந்த 7 நாள் டயட்டை கடைபிடியுங்கள்...


 • குக்குலு

  மிக சக்தி வாய்ந்த மூலிகைகளில் இந்த குக்குலுவும் ஒன்று. இதில் பல வகையான மருத்துவ தன்மை இருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட ஆயுளுடனும், அதிக காலம் இளமையாகவும் வாழ இந்த குக்குலு பெரிதும் உதவும். முழு உடலின் செயல்பாட்டையும் சீராக வைத்து கொள்ள இந்த மூலிகை உதவும்.


 • ஜின்செங்

  Phytochemicals அதிகம் நிறைந்துள்ள இந்த ஜின்செங் நமது உடலின் செல்களை சிதைவடையாமல் பார்த்து கொள்ளும். மேலும், இதனை எடுத்து கொண்டால் சருமத்தின் பொலிவும் உடலின் ஆரோக்கியமும் இரட்டிப்பாகும். எந்த வித மாசுபாட்டிலும் இந்த மூலிகை உங்களை காத்து கொள்ளும்.


 • வல்லாரை

  அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ் கொண்ட இந்த வல்லாரை பல்வேறு வகையில் நமது உடலின் நலத்தை அதிகரிக்கும். இவை மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு சருமத்தையும் மென்மையாக வைத்து கொள்கிறது. அத்துடன் வயதாவதையும் இந்த வல்லாரை தள்ளி போடுகிறதாம்.


 • நெல்லி

  முட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்"ஒளவைக்கு தந்த நெல்லிக்கனி"யின் மகத்துவம் பற்றி நம் அனைவருக்கும் நன்கு தெரியும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நோய் கிருமிகளை எதிர்த்து போராட கூடிய ஆற்றல் பெற்றதாம்.

  MOST READ: முட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்


 • அஸ்வகந்தா

  "மூலிகைகளின் ராஜா" என்று அழைக்கப்படும் இந்த அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. செல்களை மீள் உற்பத்தி செய்வதில் அஸ்வகந்தா முதன்மையான இடத்தில் உள்ளது. எனவே, இது வயதாவை தடுக்குமாம். மேலும், இது உடல் வலிமையையும் அதிகரிக்க பயன்படும்.


 • இஞ்சி

  "நோய்களின் எதிரி" என்று கூறப்படும் இந்த இஞ்சியை நாம் உணவில் அதிகம் சேர்த்து கொண்டாலே பல வகையான நோய்க்ளைல் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மை வயதாகமல் நீண்ட காலம் நம்மை இளமையாக வைத்து கொள்ளும்.


 • கிரீன் டீ

  ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதிக ஆரோக்கியம் பெறலாம். ஏனெனில் இதில் அதிகமான நலன்கள் உள்ளதாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம்.
  மேற்சொன்ன மூலிகைகளை உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொண்ட பின் எடுத்து கொள்ளலாம். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
நம் எல்லோருக்கும் பல வித ஆசைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு சில ஆசைகள் நிறைவேறும் வகையில் இருக்கும். ஒரு சில ஆசைகள் நீண்ட நாட்கள் சென்று நிறைவேறும். அந்த வகையில் சில முதன்மையான ஆசைகளும் நம்மில் பலருக்கு இருக்கும். குறிப்பாக நீண்ட நாட்கள் இப்படியே 20 வயசு உள்ளவரை போல இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பே. இது பலருக்கு நிராசையாகவே இருக்கிறது.

ஆனால், ஒரு சில 40 வயதுடைவார்கள், இன்றும் கூட 20 முதல் 25 வயதுள்ளவர் போல தெரிவார்கள். இதை போல நீங்களும் இருக்க, அந்த காலத்தில் சித்தர்கள் அதிக கால இளமையை பெற ஒரு சில முக்கிய மூலிகைகளை பயன்படுத்தினர். அவை என்னென்ன என்பதை இனி இந்த பதிவில் அறிந்து கொண்டு, நாமும் பயன் பெறுவோம்.

   
 
ஆரோக்கியம்