Back
Home » திரைத் துளி
வட சென்னை அன்பு யார் தெரியுமா?: இன்று மாலை ஆறு மணிவரை காத்திருங்க தெரிஞ்சுக்கலாம்
Oneindia | 11th Oct, 2018 04:57 PM

சென்னை: வட சென்னை திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வட சென்னை. அக்டோபர் 17ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் அடுத்த டீசர் இன்று மாலை வெளியாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.

"அன்பு இஸ் த ஆங்கர்" என்ற டீசர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என தனுஷ் ட்வீட் செய்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான "மாடில நிக்குற மான் குட்டி" பாடல் ப்ரொமோவில் அன்பு என்ற வட சென்னை இளைஞராக தனுஷ் மாறியிருப்பதைப் பார்த்தோம். இப்போது 'அன்பு' கதாபாத்திரத்திற்காகவே டீசர் வெளியாகும்போது அது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் வட சென்னை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த படம் என நேற்று செய்தியாளர்களை சந்தித்த தனுஷ் தெரிவித்தார். பொதுவாகவே நடிப்புக்கு அதிகம் மெனக்கடும் தனுஷ் இதில் மேலும் சிரத்தை எடுத்திருப்பது தெரிகிறது.

[ 'கூத்தன்'... தங்கத்துக்காக படம் பார்க்கலாமா...! விமர்சனம் ]

படம் ரிலீசாக ஆறு நாட்களே இருக்கும் நிலையில் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் டீசர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்