Back
Home » ஆரோக்கியம்
புற்றுநோய், சிறுநீரக கல், உடல் எடை- போன்ற அனைத்திற்கும் தீர்வு தரும் செலெரி ஜுஸ்..!
Boldsky | 11th Oct, 2018 06:21 PM
 • செலரியின் மகத்துவம்...!

  மற்ற வகை காய்கறியை போலவே இந்த செலரியிலும் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளது. இந்த ஊட்டசத்துக்கள் தான் நம் உடல் நலத்தை பாதுகாப்பாக வைத்து கொள்கிறது.
  வைட்டமின் எ
  வைட்டமின் சி
  கால்சியம்
  பாஸ்பரஸ்
  மெக்னீசியம்
  பொட்டாசியம்
  சோடியம்
  ஃபோலேட்


 • கொலஸ்டரோலை குறைக்க...

  உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணி இந்த கொலெஸ்ட்ரோல் தான். செலரியை உள்ள 3-n-butylphthalide என்ற மூல பொருள் கெட்ட கொலஸ்டரோலை கரைக்க கூடிய தன்மை கொண்டது. மேலும், இந்த செலரி ஜுஸை குடித்தால் 7 புள்ளி வரை நம்மால் கொலஸ்ட்ராலை குறைக்க முடியுமாம்.


 • ரத்த அழுத்தம்...

  ரத்த அழுத்த பிரச்சினை கொண்டோர் இனி ரத்த அழுத்தத்தால் பாதிப்பு ஏற்படமோ என பயப்பட வேண்டியதில்லை. மாறாக இந்த செலரி ஜுஸை தினமும் குடித்து வந்தாலே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். மேலும், ஹார்மோன்களை சீராக சுரக்க வைத்து கொள்ள இந்த செலரி பயன்படும்.


 • புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி..!

  புற்றுநோய செல்களை தடுக்கும் ஆற்றல் செளரிக்கு உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கிறது. குறிப்பாக இதில் உள்ள 8 வகையான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் வரவிடாமல் நம் உடலை காக்கும். மேலும், புற்றநோய் உள்ளவர்கள் இந்த செலரி ஜுஸை குடித்து வந்தால், புற்றநோயின் வீரியம் குறையும்.

  MOST READ: வயதாவதை தள்ளி போடும் சித்தர்கள் பயன்படுத்திய அரிய வகை ஆயுர்வேத மூலிகைகள்...!


 • முடி கொட்டுதலை தடுக்க...

  இன்றைய காலகட்டத்தில் முடி கொட்டும் பிரச்சினை பதில் 7 பேருக்கு இருக்கிறது. இதனை தடுக்க பல வகையான வேதி பொருட்களை நாம் பயன்படுத்தி சோர்ந்து விட்டோம். இனி உங்கள் கவலையை போக்க, செலரி ஜுஸ் போதும். இதில் அதிக அளவில் நீர்ச்சத்தும், வைட்டமின் எ உள்ளதால் முடி உதிர்வதை தடுக்கும். மேலும், முடியின் வேரை அதிக உறுதிப்படுத்தும்.


 • தேவையானவை :-

  செலரி ஜுஸை தயாரிக்க இந்த பொருட்கள் தேவை...
  செலரி - ஒரு தண்டு
  வெள்ளரிக்காய் - ஒன்று
  எலுமிச்சை காய் - பாதி
  கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு


 • தயாரிக்கும் முறை :

  செலரி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொண்டு, பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து கொள்ளவும். பின் இந்த ஜுஸை தினமும் குடித்து வந்தால் இந்த பதிவில் கூறியபடி பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.


 • கச்சிதமான எடைக்கு...

  உடல் எடை கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்த எண்ணத்தை நிறைவேற்ற செலரி ஜுஸ் பெரிதும் பயன்படுகிறது. இது பித்தப்பையில் செயல்பாட்டை சீராக வைத்து, கொழுப்புக்களை கரைய வைக்கிறது. எனவே, தினமும் இந்த ஜுஸை குடித்து வாருங்கள்.

  MOST READ: தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!


 • முக அழகிற்கு...

  முகத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள செலரி பெரிதும் உதவும். இதில் வைட்டமின் எ, பி, சி, கே நிறைந்துள்ளதால் முக அழகை இரட்டுப்பாக்குவதில் இவை முதன்மையான இடத்தில உள்ளது. மேலும், சருமத்தில் உள்ள செல்களையும் புத்துணர்வுடன் இது வைக்கும்.


 • சிறுநீரக பிரச்சினைக்கு

  கிட்னியில் கற்கள் உருவாகி உங்களை பாடாய்படுத்துகிறதா..? இந்த வேதனையை போக்க செலரி இருக்கிறது. கிட்னியில் சேர்ந்துள்ள நச்சுக்களை செலரி நீக்கிவிடும். எனவே, இதனால் கிட்னியில் கற்கள் உருவாவதையும் எளிதில் தடுத்து விடலாம்.


 • தூக்கமின்மையை போக்க...

  நிம்மதியான தூக்கம் தான் ஒரு மனிதனுக்கு பணத்தை விட மிக முக்கியமானது. தூக்கம் இல்லாமல் அவதிப்படுவோருக்கு செலரி ஜுஸ் உதவும். இதில் உள்ள மெக்னீசியம் நரம்புகளை சீரான இயக்கத்துடன் வைத்து இதமான தூக்கத்தை தருகிறதாம்.


 • அஜீரண கோளாறுகளை குணப்படுத்த...

  உங்களுக்கு அஜீரண கோளாறுகள் இருந்தால் இனி அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. செரிமான மண்டலத்தை நல்ல முறையில் செயல்பட வைக்க இந்த செலரி போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குடலில் ஏற்பட்டுள்ள அதிக அமிலத்தன்மையை இந்த செலரி சமமான அளவில் வைத்து கொள்கிறது.
  இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

  MOST READ: விந்து எந்த நிறத்தில் வெளியேறினால் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்... தெரிஞ்சிக்கோங்க..
நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு வகையான உணவு பொருட்களிலும் பல்வேறு நலன்கள் உள்ளன. உட்கொள்ளும் உணவின் தன்மையை முதலில் நன்கு அறிந்து கொண்டு உண்ண வேண்டும். இல்லையேல் உடல் நலத்தை இவை கெடுத்து விடும். அந்த வகையில் உடலில் உள்ள எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்த கூடிய ஆற்றல் ஒரு தாவரத்திற்கு இருக்கிறது என்றால், அது எத்தகைய மாயாஜாலம் கொண்டதாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.

செலரியானது, புற்றுநோய் முதல் உடல் எடை வரை, ஒட்டு மொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. இதனின் முழுமையான பயனையும், இதனை வைத்து எவ்வாறு ஜுஸ் செய்து சாப்பிட வேண்டும் என்பதையும் இனி தெரிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்