Back
Home » ஆரோக்கியம்
சீக்கிரம் நீங்கள் அப்பாவாகணுமா...? அப்போ தினமும் 2 கப் காஃபி குடிங்க போதும்...
Boldsky | 11th Oct, 2018 06:20 PM
 • ஆண்களுக்கான அவதி..!

  இன்றைய உலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை பெரிதும் பாதிக்க கூடியதாக இருக்கிறது. உண்ணும் உணவு முதல் உறங்கும் முறை வரை எல்லாமே நம்மை பாதிக்க கூடும். அந்த வகையில் ஆண்களின் பிரச்சினையாக கருதப்படுவது விறைப்பு தன்மை, விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை போன்றவையே. இதனால் தான் ஆண்கள் அப்பாவாக ஆக முடிவதில்லை.


 • விந்தணு குறைபாடு...

  குழந்தை பேறு என்பது மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வு. ஆனால், இன்று பல ஆண்களாலும் பெண்களாலும் குழந்தை பேறுவை, பெற முடிவதில்லை. இதற்கு பல்வேறு காரணிகளை மருத்துவர்கள் முன் வைக்கின்றனர். மற்ற பிரச்சினைகளை காட்டிலும் விந்தணு பிரச்சினையே மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


 • காபியும் விந்தணுவும்..!

  ஆண்களை விரைவில் அப்பாவாக மாற்றும் அற்புத மாயாஜாலம் இந்த காபிக்கு உள்ளது என அண்மையில் செய்த ஆராய்ச்சியில் கண்டறிந்தனர். குறிப்பாக தினமும் 2 கப் காபி குடிக்கும் ஆண்கள் பல்வேறு நலன்களை பெறுவதாக ஆய்வுக்கள் சொல்கிறது. ஆண்களின் விந்தணுவை அதிக ஆற்றலுடன் இது வைத்து கொள்கிறதாம்.


 • 500 தம்பதியின் பரிசோதனை..!

  ஆண்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அமெரிக்காவின் ஆராய்ச்சி மையம் 500 தம்பதிகளை வைத்து கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் கிடைத்த விடை மிகவும் முக்கியமானதாக மருத்துவ வரலாற்றில் கருதப்படுகிறது. இதில் பங்கேற்ற ஆண்கள் தினமும் 2 கப் காபியை குடித்து வந்தனர்.

  MOST READ: வயதாவதை தள்ளி போடும் சித்தர்கள் பயன்படுத்திய அரிய வகை ஆயுர்வேத மூலிகைகள்...!


 • ஆய்வின் முடிவு என்ன.?

  ஆண்களின் ஆண்மை தன்மைக்கு காபி சிறந்த வரப்பிரசாதமாக விளங்கியது. தினமும் காபி 2 கப் குடித்து வந்த ஆண்களின் விந்தணு, ஒரே வாரத்தில் அதிக ஆற்றலுடன் செயல்படுவதாக ஆய்வின் முடிவு சொல்லப்பட்டது. மேலும், பெண்கள் யாரெல்லாம் கலவி கொண்ட முன்னும் பின்னும் மது அருந்துகிறார்களோ அவர்கள் தாயாகும் பாக்கியத்தை சற்றே இழந்து விடுகிறார்கள்.


 • எப்படி இது சாத்தியம்..?

  விந்தணுவின் ஆற்றலை இரு மடங்காக மாற்றியதில் இந்த காபியில் உள்ள காஃபைன்(Caffeine) என்ற மூல பொருளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் 2 கப் காபி குடித்ததால் தாம்பத்தியம் வைத்து கொள்ளும் போது விந்துவின் முழு ஆற்றலை இழக்க விடாமல் செய்கிறது.


 • விந்துவின் நீந்து தன்மை..!

  காஃபைன் விந்தணுவின் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் அதிகம் பார்த்து கொள்கிறது. குறிப்பாக விந்துவின் நீந்து தன்மை அதிகரிக்க செய்து, கற் முட்டைக்குள் விந்துவை செலுத்துகிறது. பல பேர் குழந்தை இன்மையால் அவதிப்படுவதில் விந்தணுவின் நீந்து தன்மை மிக முக்கியமாகும்.


 • புதுமையும் பழமையும்..!

  முந்தைய ஆராய்ச்சிகள் காபி குடித்தால் விந்தணு குறைபாடுகள் ஏற்படும் என கூறியது. ஆனால், தற்போது கண்டறியப்பட்ட இந்த ஆய்வில் காபி குடிப்பதால் ஆண்கள் விரைவிலே அப்பாவாக முடியும் என்ற நல்ல செய்தியை சொல்லியுள்ளது. எனவே, தினமும் 2 கப் காபி குடித்து விரைவிலே அப்பாவாக ஆகுங்கள் நண்பர்களே.

  MOST READ: சேலை சைஸ் கேட்டு பல்பு வாங்கிய தளபதி விஜய்!


 • அளவு முக்கியம்...!

  காபி குடித்தால் விந்தணுவின் ஆற்றல் அதிகரித்து, விரைவில் அப்பாவாக ஆகிவிடலாம் என்ற செய்தியை கேட்டவுடன் குடம் குடமாக காபியை குடித்து விடாதீர்கள். 2 கப் காபியின் அளவு மாறினால் வேறு வித விளைவுகள் வர கூடும். ஆதலால், குடிக்கும் காபியின் அளவு மிக முக்கியமாகும்.

  இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானதாக கருதப்படுவது குழந்தை இன்மையே. கணவன் மனைவி இருவருக்குள்ளும் பலவித மன கசப்புகள் வர இதுவே முக்கியமாக உள்ளதாம். இதனால் நாளுக்கு நாள் விவாகரத்து வாங்குவோரின் எண்ணிக்கையும் கூடி கொண்டே போகிறது. கணவன் மனைவி இருவருக்குள்ளும் புரிதல் இல்லையென்றால் கட்டாயம் இது போன்ற சச்சரவுகள் வரத்தான் செய்யும்.

பெண்களுக்கு ஒரு வித உடல் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால், ஆண்களுக்கு வேறு சில வகையான குறைபாடுகள் இருக்கிறது. இதற்கு தீர்வாக வெறும் 2 கப் காஃபி இருக்கிறது என்றால், எவ்வளவு ஆச்சரியமான விஷயமாக உள்ளது. எப்படி வெறும் 2 கப் காபி ஆண்களை சீக்கிறமாகவே அப்பாவாக ஆக்குகிறது என்பதை முழுமையாக இந்த பதிவில் அறிவோம்.

   
 
ஆரோக்கியம்