Back
Home » பயணம்
தஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன அர்த்தம்?
Native Planet | 15th Oct, 2018 02:26 PM
 • யாளியில் பயணிக்கும் வீரர்கள்

  இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது இரு வீரர்கள். அவர்கள் அமர்ந்திருப்பதோ யானை அல்லது குதிரை போன்ற சாதாரணமான போர் விலங்குகள் அல்ல. அவை யாளி எனப்படும் விலங்குகள். இவை சக்தி வாய்ந்த விலங்குகள் என்றும் பழங்கால அரசர்கள் இதுபோன்ற விலங்குகளை போரில் ஈடுபடுத்தினர் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இப்படி, கற்சிலைகள் மற்றும் ஓவியங்களிலேயே இதுபோன்ற யாளியை காணமுடியும்.

  All photos Taken From

  PC: Richard Mortel


 • துறவியுடன் பெண்

  இவரைப் பார்க்கும்போது துறவியைப் போலவும் இருக்கிறது. அதே நேரத்தில் சீன பயணிகளும் அந்த காலத்தில் இப்படித்தான் இருந்தார்களாம். இது துறவி என்றால் அருகில் இத்தனை நெருக்கமாக இப்படி ஒரு பெண் இருக்கவாய்ப்பில்லை. எனவே சீன பயணியாகக் கூட இருக்கலாம்.

  எந்த அளவுக்கு சீன தேசத்துடன் நட்புறவு கொண்டிருந்தால், இவர்களின் சிலைகளை செதுக்கி வைத்திருப்பார்கள் பாருங்கள்.


 • அரங்கேற்றமோ?

  இந்த படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது. அவர் நடனமாடுகிறாரா? அவர் யார் இருவர் தலைகளின்மீது காலை வைத்துள்ளார். அருகே பாருங்கள் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

  பெண்கள் அமர்ந்து ரசிக்குமாறு, ஆண்கள் நடனமோ அல்லது சண்டைக் கலையோ செய்யும் நிகழ்வுகள் அந்த காலத்தில் நடந்தேறி இருக்கின்றன.


 • புத்தரா வேறு யாருமா?

  இங்கு அமர்ந்திருப்பவரை கவனியுங்கள். அவர் புத்தர் அமர்ந்திருப்பதைப் போலவே உக்கார்ந்த நிலையில் இருக்கிறார். மேலும் அவருக்கு பின் மரம் ஒன்று இருப்பதை கவனித்தீர்களா? இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர் புத்தராக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அதே வேளையில், வானத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி வந்ததைப்போலவும் தோன்றுகிறது.


 • வாசல் இருக்கா இல்லியா

  இந்த படத்தின் நடுவில் சரியாக வாயில் தோரணங்களைப் போல அமைக்கப்பட்டு, ஆனால் வாசல் இல்லாமல் சுவர் கட்டியதைப் போல இருக்கிறது கவனித்தீர்களா.. இது இயல்பா அல்லது தெரியாமல் நடந்த தவறா?


 • கடவுள் அவதாரமா


  இங்கு வலது புறம் கவனியுங்கள் சிலர் முழங்காலிட்டு வணங்குகிறார்கள், சிலர் பயபக்தியுடன் வணங்குகிறார்கள். கடவுள் அவர்கள் முன் தோன்றினாரா என்ன? அல்லது ஒருவேளை அவர்கள் அரசரை கடவுளாக கருதினார்களோ என்னவோ?


 • அந்த காலத்திலேயே விநாயகர்


  விநாயகர் தமிழகத்தின் கடவுள் இல்லை, இப்போது சில ஆண்டுகளாகத்தான் பூசை செய்கிறார்கள் என ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின்போதும் இப்படி சில விவாதங்கள் நடைபெறும். அடடே ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சிலை வைத்திருக்கிறார்கள். அதிலும் விநாயகரைச் சுற்றியுள்ளவர்கள் வழிபடுவதை காணுங்கள். தோப்புக்கரணம், கண்ணத்தில் இட்டுக்கொள்வது எல்லாம் அப்போதே இருக்கும்போல.


 • நிலையான தேர்


  சோழர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டமுடிவெடுத்து அதை தேர் வடிவில் கட்ட விரும்பியதாக கூறுவதுண்டு. அதுதான் இப்படி தேரைப் போல உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் அது தெளிவாக தெரிகிறது, படிக்கட்டுகளை பார்த்தீர்கள்தானே..


 • சரியான விகிதம்


  இந்த படத்தை அப்படியே மேலிருந்து கீழாக சரியாக வெட்டினால், அடடே இடதும் வலதும் அப்படியே இருக்கிறதே. இடது புறத்தில் வலது கையை தூக்கியவரையும் வலது புறத்தில் இடது கையைத் தூக்கியவரையும் கவனியுங்கள் இருவரும் வேறு வேறு ஆட்கள்., நடந்ததை வைத்து அப்படியே செதுக்கியிருக்கிறார்களோ.. ஆமா மேல ஒருத்தர் தன் கைகளை ஏன் வாயில் வைத்திருக்கிறார்.. அவரு என்ன பண்றாரு பாத்தீங்களா?


 • மரத்தைச் சுற்றி மங்கையர்கள்


  இது ஒரு மரம். மரத்தின் மேல் ஒரு ஆண். கீழே மங்கையர்கள். எதைச் சொல்ல வருகிறார்கள். ஆமாம்.. இடமிருந்து முதல் பெண் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்?


 • மயில் மேல் அமர்ந்து

  இந்த படத்தில் மயில் மேல் அமர்ந்திருப்பவர் யாரோ.. அவருக்குப் பின்... சரி சரி அது வேண்டாம்..


 • பிரம்மனுக்கும் சிலை

  தமிழகத்தில் பெரும்பாலும் பிரம்மனுக்கு கோவில் இருக்காது கவனித்ததுண்டா.. அடடே சோழர்கள் கோபுரத்திலேயே பிரம்மனுக்கு சிலை வைத்திருக்கிறார்கள்.


 • படம்

  தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் ஒரு பக்க படம்


 • நேர்த்தி


  எவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு காணுங்கள்.


 • மாங்காய் திருடிய காட்சியா?


  சிறுபிள்ளைத் தனமாக தோன்றினாலும், மனதில் தோன்றுவது மேலிருப்பது ஆண் தானே.. அவரை சுற்றி வளைத்திருக்கிறார்களோ பெண்கள்?


 • சிங்க முகம்

  சிங்க முகம் நிச்சயமாக ஹரியை குறிப்பதாகதானே தொன்னம்பிக்கை.


 • யானை மீது முருகன்


  இந்த சிலையை பார்க்கும்போது பன்னிரெண்டு கரங்கள் இருப்பதால் முருகனாக இருக்கலாம். ஆனால் தன் அண்ணன் விநாயகரின் வாகனத்தை ஆட்டய போட்டுவிட்டு வந்துட்டாரோ சுட்டித் தம்பி..


 • தலைகள்

  படத்தில் எத்தனை தலைகள் பாருங்கள்..


 • சிவன் மேல் கால்

  சிவ லிங்கத்தின் மேல் காலைத் தூக்கி போடுகிறவர் யார்.. ஆனால் பாருங்கள் அவரை எல்லாரும் வணங்குகிறார்களே..


 • கட்டி அணைக்கிறார்

  இந்த படத்தில் ஒருவர் சிவனை கட்டி அணைக்கிறார் பாருங்கள். அவருக்கு விசிறி விட சில பெண்களும் இருக்கிறார்கள். ஒருவேளை இது ராஜேந்திர சோழராக இருக்குமோ?
இந்த பதிவில் தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் உருவங்களையும் அதைப் பற்றிய மர்மங்களையும் தகவல்களையும் காண்போம். தஞ்சை பெரிய கோவில் தமிழர்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டுக்கே பெருமை வாய்ந்தது. தஞ்சை பெரிய கோவிலின் உள் பகுதியில் சுற்றி வந்தால் நமக்கு நிறைய கலை வேலைப்பாடுகள் கண் குளிர காட்சியளிக்கும். அதையெல்லாம் காணும்போது சில பிரம்மிப்புகளும், பிரம்மாண்டமான கலை திறனும் நமக்குள் உருவாகும். சில சமயங்களில் சந்தேகங்களும் மர்மங்களும் உங்கள் கண்களில் தென்படலாம். அப்படி சில புகைப்படங்களும், அது என்னவாக இருக்கும் என்ற தகவல்களையும் இந்த பதிவில் காணப்போகிறோம். தமிழர்களின் புகழ் உலகை அடைய இதை பகிர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மேலும் தமிழ் நேட்டிவ் பிளானட்டின் சுற்றுலா தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு மேலுள்ள பெல் பட்டனை தட்டி, சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்