Back
Home » லேட்டஸ்ட்
பூமியை அழிக்கப்போவது அது அல்ல இது தான்.!
Gizbot | 12th Oct, 2018 07:01 AM

எதிர்காலம் மகத்தானதாக அல்லது பயங்கரமானதாக இருக்கலாம் என்பதை 21ம் நூற்றாண்டின் மனிதர்களாகிய நமக்கு அது ஒன்று அல்லது மற்றொன்றின் வாயிலாக பலமாக உணர்த்திக்கொண்டுள்ளது. அதில் இந்த நூற்றாண்டின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என கூறுகிறார் பிரிட்டிஷ் காஸ்மோலஜிஸ்ட் மார்டின் ரீஸ். " மனிதர்கள் பூமியின் எதிர்காலத்தை தீர்மானிப்பது முதன்முறையாக இந்த நூற்றாண்டில் தான் நிகழ்கிறது"

கடந்த சில நாட்களாக, பத்திரிக்கைகள் ரீஸ்-ன் புதிய புத்தகமான "எதிர்காலத்தின் மீது மனிதகுலத்திற்கான வாய்ப்புகள் "(On the Future: Prospects for Humanity) பற்றி தான் பேசி வருகின்றன. அதில் கூறப்பட்டுள்ள மாறான கண்கவர் கூற்றுப்படி ஏதேனும் தவறு நிகழ்ந்து, ஜெனிவாவில் உள்ள லார்ஜ் ஹார்டன் காலிடர் போன்று துகள் முடுக்கிகள் துணைஅணு துகள்களுடன் அதிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதினால், பூமி ஒரு அடர்த்தியான கோளம் அல்லது கருந்துளையாக மாறிவிடும்.

குறிப்பாக ரீஸ்-ன் சமீபத்திய கலந்துரையாடலில் கூறியதற்கு எதிர்மாறாக அவரின் புத்தகம் அமைந்துள்ளது. அதாவது இது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. சிறு கருந்துழைகளை உருவாக்கும் யோசனை சில காலங்களாக நிலவி வருகிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்கிறார்.

"சோதனைகள் செய்துவருவதற்கு முன்பே மக்கள் இந்த கேள்வியை மிகவும் சரியாக நினைத்தார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன" என்கிறார் ரீஸ். இயற்கை இதுபோன்ற சோதனைகளை ஏற்கனவே தீவிரமாக செய்துள்ளது என்பதை தான் இந்த மறுஉறுதிபடுத்தல் குறிக்கிறது.

துகள் முடுக்கிகள் மூலம் உருவாக்கப்பட்டவைகளை காட்டிலும் , அதிக ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர்கள் அல்லது துகள்கள் தொடர்ந்து விண்வெளியில் மோதிக்கொண்டாலும், இதுவரையிலும் எந்த பேராளிவையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ரீஸ்.

"இது போன்றவற்றில் கவனம் செலுத்துவது பைத்தியகாரத்தனம் இல்லை. ஆனால் இதுப்பற்றி தீவிரமாக கவலைபடவும் அவசியமில்லை" என கூறும் ரீஸ் அதற்கு நேர்மாறாக, " இயற்கையின் வழிகாட்டுதல் இல்லாமல் நீங்கள் ஏதாவது செய்தால், சற்று கவனமாக இருக்கவேண்டும்" என்றும் கூறுகிறார்.

இது போன்ற சம்பவங்களில் தொழில்நுட்பங்கள் தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

இயற்கைக்கே விடைதெரியவில்லை எனில்!

மரபணு மாற்றம் மூலம் எடுத்துக்காட்டாக, இயற்கையிலேயே இல்லாத புதிய பொருட்களை கூட உருவாக்கமுடியும் என்கிறார் ரீஸ்.

சிலநேரங்களில் நீங்கள் ஏதேனும் ஒரு வைரஸால் பாதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பது தெளிவாக தெரியாது. இயற்கை மாற்றங்களால் உருவாகாத வைரஸ் வடிவத்தை உங்களால் உருவாக்க முடிந்தால் ,அதை குணப்படுத்தலாம் என்கிறார் அவர்.

தொழில்நுட்பங்கள் மூலம் ஒருவரின் செயல்பாடுகள் எளிதாக மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். உலகின் ஏதாவது ஒரு மூலையில் உள்ள சில மனிதர்கள், உலகம் முழுவதும் ஏற்படும் மிகப்பெரிய தாக்கங்களுக்கு காரணமாக இருக்கலாம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'சைபர் அட்டாக்'.

மருத்துவம் மற்றும் விண்வெளி பயணம் போன்றவற்றில் தொழில்நுட்பம் ஏராளமான உன்னதமான விசயங்களை செய்துள்ளது. மேலும் அவை மிகச்சிறப்பாக செல்லும் ஆனால் இவற்றில் தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்கிறார் ரீஸ்.

   
 
ஆரோக்கியம்