எல்ஜி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்,அதன்படி ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக சியோமி அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக எல்ஜி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 45-இன்ச் டிஸ்பிளே முதல் 77-இன்ச் டிஸ்பிளே வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று எல்ஜி நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.