Back
Home » பயணம்
உலக அழிவு ஆரம்பமா? 8 அடி வரை உயரும் கடல்! இந்தியாவில் பாதிக்கப்படும் அழகிய இடங்கள் ?
Native Planet | 12th Oct, 2018 03:24 PM
 • அந்தமான் தீவுகள்


  கடல் நீர் மட்டம் உயர்ந்தால் முதலில் பாதிக்கப்படுவது அந்தமான் நிகோபர் தீவுகள்தான் என்று தெரியவந்துள்ளது. இது தீவுகள் என்றாலும், சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கடலில் மூழ்கிவிட்டன. அதே நேரத்தில் இந்தியாவுடன் இருக்கும் இந்த தீவுகள் கடல் நீர் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் என்பது தெரிகிறது.


 • விசாகப்பட்டினம்

  வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அடிப்படையில் ஒரு தொழில் நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மியமான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாகவும் மாறியிருக்கிறது.

  இதில் சோகம் என்னவென்றால் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பு போன்ற காரணங்களால் விசாகப்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்குள் சென்றுவிடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

  Candeo gauisus


 • பூரி

  கிழக்குப்புற இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் உள்ள நகரமான பூரி, வங்காள விரிகுடாவில் பெருமை பொங்க வீற்றிருக்கிறது. இது அழகிய கடற்கரையும் ஆன்மீகத் தலங்களையும் கொண்டுள்ளது. இந்த பகுதியும் கடல் மட்ட உயர்வால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

  Lovedimpy


 • கொணார்க்

  வசீகரிக்கும் வங்காள விரிகுடாவின் கரையில் வீற்றிருக்கும் இந்த கொணார்க் நகரத்தில் அக்கால இந்தியாவின் மஹோன்னத சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சில கம்பீரமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. பூரியைப் போலவே இந்த கடற்கரை நகரமும் எளிதில் பாதிக்கப்படும் அளவிலேயே இருக்கிறது.

  Hadi Karimi


 • யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான சுந்தரவன காடுகள்


  இந்தியாவிற்கும் பங்களாதேஷீக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்பு நிலப்பகுதிதான் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதன் பெரும்பாலான பகுதிகள் பங்களாதேஷ் நாட்டிற்குள் இருந்தாலும், இந்திய எல்லையில் வரும் மூன்றில் ஒரு பங்கு பகுதி சுற்றுலாப் பயணிகள் எளிதில் சென்று வரவும், மிகவும் ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இவையும் கடல் நீர் மட்ட உயர்வால் அழிந்துவிடும் என்ற அச்சம் உள்ளது.

  wiki


 • போர்பந்தர்

  போர்பந்தர், பறவைகள் சரணாலயம், மியானி கடற்கரை, பர்டா மலையின் வனவிலங்குகள் சரணாலயம், கீர்த்தி மந்திர், போர்பந்தர் கடற்கரை என கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்களைக் கொண்டது ஆகும். இங்கு நிறைய சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகிறார்கள்.

  குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இதுவும் கடல் நீர் மட்டம் உயர்வால் பாதிக்கப்படும் என்பதுதான்.

  Ashokjmaru


 • கொச்சி


  அரபிக்கடல் ஓரம் வீற்றிருக்கும் இந்த கம்பீரமான நகரம் ஒரு காலத்தில் இந்தியாவில் முக்கியமான துறைமுக நகரமாக திகழ்ந்திருக்கிறது. இப்போது இது கேரளத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக இருக்கிறது. மேலும் இது கேரளத்தின் தொழில்நுட்ப நகரமாகவும் விளங்குகிறது.

  wiki


 • கண்ணூர்


  மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் பொதிந்துள்ள இப்பிரதேசமானது நிரம்பி வழியும் இயற்கை எழிலையும், தனித்தன்மையான - பாரம்பரிய கலாச்சார இயல்பையும் கொண்டு விளங்குகிறது. பண்டைய காலத்தில் மலபார் பிரதேசத்தின் வணிகக்கேந்திரமாக இந்த கண்ணூர் மாவட்டம் திகழ்ந்துள்ளது. இந்த கடற்கரை நகரமும் கடல் மட்ட உயர்வு காரணமாக நீரில் மூழ்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

  Manoj Karingamadathil


 • கோவளம்

  கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த 'கோவளம்' ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து விரிந்திருக்கும் அரபிக்கடலை ஒட்டி இந்த ஸ்தலம் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 16கி.மீ தூரத்தில் உள்ள, எழில் நிறைந்த இந்த சுற்றுலாத்தலத்துக்கு மிக சுலபமாக சென்றடையலாம்.

  Shishirdasika


 • கடலூர்


  தமிழ் நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. நகரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்கரை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது கடலூரில் அமைந்துள்ளது. இந்த கடலூர் நகரம் முழுவதும் பாதிக்கப்படவில்லை என்றாலும், இது எளிதில் பாதிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.

  Karthik


 • சென்னை

  தமிழகத்தின் தலைநகரான சென்னையும் ஆபத்தின் விளிம்பில்தான் உள்ளது. அதிகப்படியான மக்கள் தொகை. கடற்கரையை மிகவும் நெருங்கிய நகரம் மேலும் அடர்த்தி அதிகமான நகரம் என்பதால் இதுவும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுமாதிரி மும்பை நகரமும் இதனால் பாதிக்கப்பட கூடி ய வாய்ப்பு அதிகம் ஆகும்.

  Aleksandr Zykov


 • அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை

  இந்த மாதம் துவக்கத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளங்களின் வருடாந்த விமர்சனம் நிகழ்ச்சியில், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி சார்பில் இந்த அதிர்ச்சி அளிக்கும்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2100 ஆம் ஆண்டில் நிச்சயம் பேர் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட கடல் மட்ட உயர்வின் அளவை வைத்து, கணக்கிட்டுப் பார்த்தபோது, உலக மக்களின் எதிர்கால நிலை பேர் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இதன்படி உலகநாடுகள் அனைத்துக்கும் பேராபத்து வருவதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது. பசுமை இல்லவாயுக்கள் உயர்வு, புவி வெப்பநிலை உயர்வு ஆகியவைதான் இந்த கடல்நீர் மட்ட உயர்வுக்கு காரணம். நாமும் அதை தடுக்க எந்தெந்த வழிமுறைகளெல்லாம் இருக்கின்றனவோ அதை செய்யமுன்வர வேண்டும். சுற்றுலாத் தளங்களைப் பாதுகாக்கவேண்டும். நம் கடற்கரைகள் நம் நாட்டின் வளங்களல்லவா?
பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்ப உயர்வு காரணமாக பனி மலைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. இது நாளுக்கு நாள் அச்சத்தை அளித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் பாதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் பயப்படத் தேவையில்லை. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. மேலும் இதனால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய இந்திய பகுதிகள் எவை, அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பன பற்றி இந்த பதிவில் காண்போம்.

   
 
ஆரோக்கியம்