Back
Home » செய்தி
என்ன நடவடிக்கை எடுக்கலாம்?.. எச். ராஜா கேள்வி
Oneindia | 12th Oct, 2018 02:59 PM

சென்னை: எண்ணெய் விளம்பரத்தில் ராமர் மற்றும் சீதையை பயன்படுத்தியிருப்பதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எச். ராஜா போட்டுள்ள டிவீட்:

சன்லேண்ட் எண்ணெய் விளம்பரத்தில் இந்திரனையும் நாரதரையும் வைத்து நக்கல் செய்து விளம்பரம் செய்தனர். தற்போது எம்பெருமான் ராமனையும் சீதா பிராட்டியாரையும் விளம்பரத்திற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று எச் ராஜா தனது டிவீட்டில் கூறியுள்ளார்.

[முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு]

வழக்கம் போல இந்த டிவீட்டுக்கும் ஆதரவு, எதிர்ப்பு டிவீட்டுகள் குவிந்து வருகின்றன. இதுபோல கடவுள் படங்களை விமர்சித்தும், இழிவுபடுத்தியும் விளம்பரங்கள் வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

   
 
ஆரோக்கியம்