சிப்சாகர் நகரில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அஹோம் சாம்ராஜய காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த நினைவுச் சின்னங்கள் சிப்சாகர் நகரின் பெருமிதமாக விளங்குகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக இருந்த சிப்சாகர், இப்பொழுது எண்ணெய் வளம் தேயிலை வளம் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல தலங்கள் இங்கு உள்ளன.
Gitartha Bordoloi
சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக, அஹோம் சாம்ராஜ்யத்தினர், அசாமை ஆட்சி புரிந்திருக்கின்றனர். பிறகு, 1817-ஆம் ஆண்டு பர்மா நாட்டவர்களால் அஹோம் சாம்ரஜ்யம் வீழ்ந்தது. அதன் பிறகு, சிப்சாகர் பிரிட்டிஷ் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், நிர்வாக சீரமைப்பிற்காக, சிப்சாகர் மூன்று துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
Steve Evans
சிப்சாகர் நகரம், வெகுகாலமாக அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்ததால், அஹோம் தொடர்பான நினைவுச் சின்னங்களை இங்கு அதிகமாக காண முடிகிறது. மிக பிரம்மாண்டமான சிப்சாகர் நீர்தேக்கத் தொட்டி சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் இடமாகும். சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்தத் நீர்தேக்கத் தொட்டி, நகரின் உயரத்தைவிட அதிகமாக இருக்கிறது. மேலும், சிவ டால், விஷ்ணு டால் மற்றும் தேவி டால் என்ற மூன்று முக்கிய கோவில்கள் இங்கு உள்ளன.
Homen Biswas
சிப்சாகரை சுற்றிப் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தளதாள் கர், கரேங் கர் மற்றும் கர்காவோன் அரண்மனை போன்றவை சிப்சாகர் நகரின் புகழ்பெற்ற அரண்மனைகளாகும். 7 மாடிகளைக் கொண்ட அரண்மனையின் கீழ்தளத்தை தளாதள் கர் என்பர். இங்கு இரண்டு ரகசிய சுரங்கப்பாதைகள் உள்ளன. அதற்கு மேலே உள்ள மாடிகளை கரேங் கர் என்பர்.
Supratim Deka
சிப்சாகர் நகரில், ரங் கர் எனும் பெரிய அரங்கம் உள்ளது. இதன் மேற்கூரை, தலைகீழாக இருக்கும் படகினைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிப்சாகர் செல்லும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது.
Homen Biswas
சிப்சாகர் செல்ல சாலை வசதி சிறப்பாக உள்ளதால், பேருந்து அல்லது கார் மூலம் எளிதில் செல்ல முடியும். சிப்சாகரில் இருந்து 16 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சிமால்குரி ரயில் நிலையம். சிப்சாகரில் விமான நிலையம் இல்லை. ஆனால், 55 கிமீ தொலைவில் இருக்கும் ஜோர்ஹாட்டில் விமான நிலையம் உள்ளது.
சிப்சாகரின் வானிலை
சிப்சாகர் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்திலும் செல்லலாம். மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் இடம் சிப்சாகர். இங்கு வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியசும் இருக்கும்.
Aniruddha Buragohain
இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்த வீரர்களை புதைப்பதற்காக இந்த கல்லறை கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு உட்பட்ட வடமேற்கு இந்தியா பர்மா யுத்தத்திற்கான களமாக பயன்பட்டது. பர்மா எல்லைக்கு அருகில் டிக்பாய் இருந்ததால் தற்காலிக ராணுவ மருத்துவமனை கட்டப்பட்டது. காமன்வெல்த் யுத்த கல்லறை நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் டிக்பாய் கல்லறையில் 200கல்லறைகளுக்கும் மேல் இருக்கிறது. ஆரம்பத்தில் 70 கல்லறைகள் இருந்தது. பின்னர் பனிடோலா, டின்சுகியா, மார்கரிடா, ஜோர்ஹாட், லெடோ ஆகிய கல்லறைகளும் இங்கே நிர்வாக வசதிக்காக சேர்க்கப்பட்டன.
Parthapratim Neog
தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல்லையை அருணாச்சலப்பிரதேசத்தின் பாக்குயி வனவிலங்கு சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. கீழ்ப்புற இமயமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா, பல்வேறு தாவரம் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
anas shaikh
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம் சிப்சாகர். சிப்சாகர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம். கிட்டதட்ட100 ஆண்டுகளுக்கு சிப்சாகர் நகரம், அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியிருக்கிறது. இங்கு 129 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு செயற்கையான நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இதற்கு சிப்சாகர் தொட்டி என்று பெயர். இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி தான் சிப்சாகர் நகரம் அமையப்பெற்றுள்ளது.