Back
Home » ஆரோக்கியம்
சர்க்கரை நோய் இருந்தாலும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?
Boldsky | 12th Oct, 2018 04:38 PM
 • ஆரோக்கிய உணவு தேர்வுகள்

  சர்க்கரை நோய் ஆய்வகத்தில் நடத்திய ஆய்வின்படி கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கொழுப்பு அகற்றப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றை தேர்ந்தேடுப்பதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதன் மற்றொரு பகுதிஎ ஆரோக்கியமான உணவை அளவாக சாப்பிடுவது. ஏனெனில் சர்க்கரை நோயில் உடல் எடை என்பது முக்கியமான பங்கு வகிக்கிறது.


 • தவறாமல் சாப்பிட வேண்டும்

  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். உணவுகளுக்கு இடையில் போதுமான இடைவெளி விடவும் எப்பொழுது சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் திட்டமிட்டு சாப்பிடுங்கள். இதனால் உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். அதேநேரம் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. அது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.


 • சரியான உடற்பயிற்சி

  மருத்துவர்கள் பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏரோபிக் உடற்பயிற்சிகளான சைக்கிள் ஒட்டுதல், ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் இது அனைவர்களுக்கும் பொருந்தாது. உங்கள் மருத்துவர்களிடம் உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எதுவென்று ஆலோசித்து அதற்குபின் உடற்பயிற்சிகளை தொடங்குங்கள்.


 • குளுக்கோஸ் அளவு

  எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உங்கள் இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை சோதனை செய்கிறீர்கள் என்பது உங்களையும், உங்கள் மருத்துவரையும் பொறுத்தது. சர்க்கரையை குறைக்க உங்களின் திட்டம் என்னவோ அதனை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். உங்கள் குளுக்கோஸ் அளவை தொடர்ச்சியாக சோதிப்பது எதனால் அது அதிகரிக்கிறது அல்லது குறைகிறது என்பதை உங்களால் அறியமுடியும். இது தக்க சமயத்தில் உங்களை பாதுகாக்க இயலும்.

  MOST READ: இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனிமையைத்தான் விரும்புவார்களாம் தெரியுமா?


 • மருந்துகளை எடுத்து கொள்ளுங்கள்

  இது உங்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் சிலர் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை. அதேசமயம் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் மற்ற மருந்துகளை புறக்கணியுங்கள். மாத்திரையின் வீரியத்திலும் கவனம் வேண்டும்.


 • புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

  விஞ்ஞான தகவல்களும் சமீபத்திய ஆய்வுகளும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும்போது, நீரிழிவு நோய்க்கான புதிய அல்லது மாறும் சிகிச்சையின் எந்தவொரு சுகாதார அறிக்கையையும் கண்காணிக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக தயங்காமல் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.


 • மனஅழுத்தத்தை குறையுங்கள்

  சர்க்கரை நோய் மற்றும் மனஅழுத்தம் இந்த இரண்டும் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும் இரண்டு முக்கிய காரணங்களாகும். சமீபத்தில் செய்த ஆய்வில் மனஅழுத்தம் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்த விரும்பினால் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க முயற்சியுங்கள்.


 • காயங்களை தடுக்க வேண்டும்

  நீரிழிவு நோயில் இருக்கும் முக்கிய பிரச்சினை என்னவெனில் கால்களில் காயங்கள் ஏற்பட்டால் அதனை குணப்படுத்துவது மிகவும் கடினமானதாக மாறிவிடும். எனவே கால்கள் மற்றும் பாதங்களில் காயங்கள், கீறல்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை அடிக்கடி சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

  MOST READ: உலகெங்கிலும் காணப்படும் விசித்திரமான சிலைகள் - புகைப்படத் தொகுப்பு!
சர்க்கரை நோய் என்பது பெரியவர்கள் முதல் தற்போதுள்ள இளைஞர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தும் நோயாகும். ஏனெனில் தினந்தோறும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நிகழ்த்திய ஆய்வின்படி ஒருநாளைக்கு கிட்டதட்ட 4000 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த தலைமுறை வரை 40 வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த மக்கள் இப்பொழுது 20 வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட தொடங்கிவிட்டனர்.

அதற்கு காரணம் மாறிவிட்ட உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும்தான். சர்க்கரைநோயால் பாதிக்கப்படுவது என்பது மிகவும் மோசமான ஒரு நிலையாகும். ஏனெனில் இதனால் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படும். இருப்பினும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டாலும் உங்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும். அதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே போதும். அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

   
 
ஆரோக்கியம்