Back
Home » ஆரோக்கியம்
ஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா..? உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..!
Boldsky | 15th Oct, 2018 05:55 PM
 • குள்ளமா..? உயரமா..?

  மற்றவரை விட நாம் உயரத்தில் கொஞ்சம் குறைந்தாலும் கிண்டலுக்கும், கேலிக்கும் பஞ்சமிருக்காது. இது பலரின் மனதை வருத்தப்பட கூடிய ஒன்றாக கட்டாயம் இருக்கும். நாம் குள்ளமாக இருக்க சில காரணிகள் இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக, ஊட்டசத்து குறைபாடு, சீரற்ற உணவு முறை, உடற்பயிற்சி இன்மை போன்றவற்றை கூறலாம்.


 • ஆயுர்வேதம் எப்படி..?

  மற்ற மருத்துவ முறையை காட்டிலும் ஆயுர்வேத முறையே மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இந்தியர்களின் முதன்மையான மருத்துவ முறையாகவும் இது கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் உள்ள மூலிகைகள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதனை நாம் பயன்படுத்தி வந்தால் பல வகையான குறைபாட்டிற்கு தீர்வு கிடைக்கும்.


 • அஸ்வகந்தா

  "மூலிகைகளின் ராஜா" என்று அழைக்கப்படும் இந்த அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. செல்களை மீள் உற்பத்தி செய்வதில் அஸ்வகந்தா முதன்மையான இடத்தில் உள்ளது. தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் கூடிய விரைவில் உயரமாகி விடலாம்.


 • ஷத்தாவரி

  இது ஒரு அறிய வகை மூலிகையாகும். இவை பெரும்பாலும் இந்தியா, நேபால், இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே வளரும். ஹார்மோன்கள் சுரப்பதை சீராக்கி உயரத்தை இது அதிகரிக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் சி,பி, எ ஆகியவை முக்கிய ஊட்டச்சத்தை உடலுக்கு தந்து உயரத்தை கூட்டும். இதனை நீருடன் கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம்.

  MOST READ: நீங்கள் தூங்கும் நிலை, உங்களுக்கு என்னென்ன பலன்கள் தருகிறதுனு தெரியுமா..?


 • குக்குலு

  மிக சக்தி வாய்ந்த மூலிகைகளில் இந்த குக்குலுவும் ஒன்று. இதில் பல வகையான மருத்துவ தன்மை இருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட ஆயுளுடனும், அதிக காலம் இளமையாகவும் வாழ இந்த குக்குலு பெரிதும் உதவும். உடலில் புரதச்சத்தை அதிகரித்து உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், இது தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்கும்.


 • மருத மரம்

  உடலின் வளர்ச்சியை சீராக வைத்து கொள்ள இந்த மருத மர மூலிகை பயன்படும். உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்க இந்த மூலிகை பெரிதும் உதவும். மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட் இதில் அதிகம் இருப்பதால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


 • பாலா

  தசைகளின் வலிமையை அதிகரிக்க பயன்படும் இந்த மூலிகை மிகவும் மகத்துவம் பெற்றது. உடலின் ஆற்றலை கூட்ட பாலா மூலிகை உதவும். மேலும், இதனை உட்கொண்டால் உயரம் குறைவு பிரச்சினை குணமாகும். மெல்ல மெல்ல உயரத்தை இந்த மூலிகை அதிகரிக்கும்.


 • நெல்லி

  உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது. "ஒளவைக்கு தந்த நெல்லிக்கனி"யின் மகத்துவம் பற்றி நம் அனைவருக்கும் நன்கு தெரியும். நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தாலே உயரம் அதிகமாகி, உடல் எடை குறைந்து விடும்.

  MOST READ: விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடிய சில முக்கிய முன்னோர்களின் முறைகள்...!


 • சீந்தில்

  சீந்தில் இலைகள் இதய வடிவத்தில் இருக்கும். இதன் வாழும் தன்மையை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த தாவரம் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழ்கிறதாம். எனவே தான் இவை மகத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இதில் உள்ள மூலிகை தன்மை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்தி உறுப்புகளை வளர வைக்கும்.


 • முக்கிய குறிப்பு....

  மேற்சொன்ன மூலிகைகளை உங்களின் ஆயர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாகவும் இந்த மூலிகைகளை எடுத்து கொள்ள கூடாது.
  இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.
உடல் சார்ந்த பிரச்சினனைகள் ஏராளமானவை நமக்கு இருக்கின்றது. குண்டாக இருப்பது ஒரு சில மக்களின் பிரச்சினையாக கருதப்படுகிறது. அதே போன்று ஒல்லியாக இருப்பது வேறு சிலரின் பிரச்சினையாக உள்ளது. இந்த வகையில் குள்ளம், உயரம் போன்றவையும் அடங்கும். உயரமாக இருக்க பலர் ஏராளமான வழிகளை மேற்கொள்வார்கள். இதை குடித்தால் ஒரே மாதத்தில் உயரமாகி விடுவீர்கள் என்றெல்லாம் சொல்வார்கள்.

இதை மிக பெரிய வியாபாரமாக இன்றளவும் செய்து வருகின்றனர். இந்த பொய் வார்த்தைகள் முற்றிலும் நம்மை கவர்வதற்கே தவிர, வேற அந்த பலனும் தர போவதில்லை. உயரத்தை விரைவிலே அதிகரிக்க கூடிய ஆயுர்வேத மூலிகைகள் பல உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

   
 
ஆரோக்கியம்