Back
Home » ஆரோக்கியம்
மட்சா டீ குடிச்சிருக்கீங்களா? ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...
Boldsky | 17th Oct, 2018 12:10 PM
 • மட்சா டீ என்றால் என்ன?

  மட்சா டீ ஆனது காமிலியா சைன்சஸ் என்று தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை அப்படியே க்ரீன் டீ வடிவில் ஜப்பான் மற்றும் சீனா மக்கள் 500 வருடத்திற்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தாவரத்தின் இலைகளை நல்ல பொடியாக்கி தேயிலையாக பயன்படுத்துவதால் மற்ற தேநீரை காட்டிலும் இதன் சுவையும் நறுமணமும் நல்ல ஸ்ட்ராங் ஆக இருக்கும்.


 • எப்படி பயிரிடப்படுகிறது?

  விவசாயிகள் இந்த மட்சா தாவரத்தை அதற்கேற்ற சூழலில் வளர்க்கின்றனர். அறுவடை செய்வதற்கு முன்பு 20-30 நாட்களுக்கு சூரிய ஒளி படாமல் மூடி பாதுகாத்து இந்த தாவரத்தை வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கும் போது அமினோ அமிலங்கள் மற்றும் குளோரோபைல் உற்பத்தி செய்யப்பட்டு தாவரம் பார்ப்பதற்கு அடர்ந்த பச்சை நிறத்தில் மாறி விடும். மேலும் இதன் இலைகள் ரெம்ப மென்மையாக, இனிப்பு சுவையுடன், பார்பதற்கு பளீச்சென்று இருக்கும். இந்த மட்சா இலைகளை அறுவடை செய்த உடன் இதை நீராவியில் வைத்து அவித்து இலைகளை உலர்த்தி ஓவனில் வைத்து 20 நிமிடங்கள் சூடுபடுத்துவார்கள். பிறகு விவசாயிகள் இதிலுள்ள தண்டு, கிளைகளை மட்டும் நீக்கி விட்டு இலைகளை அரைத்து பொடியாக்கி விடுவார்கள்.


 • வயதாவதை தடுக்கிறது

  மட்சா டீயில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கேட்சின் போன்ற நிறைய பொருட்கள் உள்ளன. இந்த இயற்கையான பொருட்கள் நமது செல்கள் சீக்கிரம் வயதாவதை தடுக்கிறது. இதற்கு லேசான சுடுநீரில் மட்சா டீ பவுடரை கலந்து குடித்தாலே போதும் எல்லா ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட் களும் நம்மளுக்கு கிடைக்கும். மற்ற க்ரீன் டீயை காட்டிலும் இதிலுள்ள கேட்சினின் அளவு 1 37 மடங்கு அதிகமாகும்.


 • இதயத்தின் அரண்

  மட்சா டீயை குடித்து வந்தால் இதய நோய்களை விரட்டி விடலாம். இது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு போன்றவற்றை குறைக்கிறது. மேலும் எல்டிஎல் கொலஸ்ட்ராலின் ஆக்ஸினேற்றத்தை தடுக்கிறது. இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மட்சா டீ இதயத்திற்கு ஒரு சிறந்த அரணாக செயல்படுகிறது.


 • கல்லீரலை பாதுகாத்தல்

  நமது கல்லீரல் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நீங்கள் மட்சா டீ குடித்து வந்தால் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் நோய் போன்றவற்றை தடுக்கிறது. ஆல்கஹால் அற்ற கல்லீரல் கொழுப்பு நோயை தடுத்து அதற்கு காரணமான கல்லீரல் என்சைமை குறைக்கிறது. எனவே உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மேட்சா டீயை பருகி வரலாம்.


 • புற்றுநோயை தடுக்கிறது

  மட்சா டீயில் எபிகேலோகேட்டசின்-3-கேலட் என்ற பொருள் உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கேட்சின், பாலிபினோல் புற்று நோயை தடுக்கும் சக்தியாக செயல்படுகிறது. புரோஸ்டேட், நுரையீரல், சரும மற்றும் கல்லீரல் புற்று நோய் வராமல் காக்கிறது.


 • மூளையின் செயல்திறன்

  மட்சா டீ மூளையின் செயல் திறனை அதிகரித்து கவனம், நினைவாற்றல் மற்றும் சீக்கிரம் உணர்தல் திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது. காஃபைன் கொண்டு மூளையின் செயல் திறனை ஆராய்ந்த ஆய்வானது இந்த தகவல்களை கூறுகிறது. காஃபைன் எடுத்துக் கொள்பவர்களுக்கும், எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதே மாதிரி மற்றொரு ஆய்வான க்ரீன் டீ யால் ஏற்படும் புலனாய்வு திறன் :இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு 2 கிராம் மேட்சா டீ பவுடரை 2 மாதங்களுக்கு தினமும் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தனர். பிறகு அவர்களின் மூளையின் செயல்திறனை ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டார்கள்.


 • உடல் எடை குறைதல்

  மட்சா டீ உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடையை சீக்கிரமாக குறைக்கிறது. மட்சா டீயை எடுத்துக் கொண்டு நீங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட்டாலே போதும் 17% உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.


 • பற்களின் ஆரோக்கியம்

  மட்சா டீ உங்கள் பற்களுக்கும் சிறந்த ஆரோக்கியத்தை தருகிறது. ஒரு கப் மட்சா டீ போதும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க. இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களில் தங்கி இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து பற்களின் ஈறுகள் சுத்தமாகவும் பற்சொத்தை ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.


 • மட்சா டீ

  தயாரிக்கும் முறை

  1-2 டீ ஸ்பூன் மட்சா பவுடரை எடுத்து ஒரு சிறிய சல்லடையில் வைத்து சலித்து கொள்ளுங்கள்.

  அதனுடன் 2 கப் சூடான தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்

  சுவையான மேட்சா டீ ரெடி. பருகி பயன்களை அள்ளுங்கள்.
இப்பொழுது எல்லாம் மற்ற க்ரீன் டீயை காட்டிலும் ரொம்ப புகழ் பெற்று வருவது இந்த மட்சா டீ தான். மட்சா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ், குழம்பு மற்றும் தேநீர் போன்றவை எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பரவி வருகிறது.

நீங்கள் எந்த காபி ஷாப்பிற்கு சென்றாலும் ஆரோக்கியமான தேநீர் அருந்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த மட்சா டீ சிறந்ததாக இருக்கும்.

   
 
ஆரோக்கியம்