Back
Home » வேலைவாய்ப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி!
Career India | 2nd Nov, 2018 11:47 AM

இளநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 30ம் தேதியே கடைசி நாளாகும்.

நீட் 2019 தேர்வு அடுத்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு தேசிய தகுதித் தேர்வு ஆணையம் (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதற்கு நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

https://ntaneet.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம். இத்தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5ம் தேதி வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 1400

எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு : ரூ.750

நீட் நுழைவுத் தேர்விற்கு நவம்பர் 1 முதல் பதிவுகள் துவக்கம்!

   
 
ஆரோக்கியம்