Back
Home » பயணம்
அழகிய தேன்கனலுக்கு ஒரு தேனிசை பயணம் செல்வோமா?
Native Planet | 3rd Nov, 2018 03:00 PM
 • இயற்கை எழில்

  தேன்கனல் அதன் அதர்ந்த பசுமையான காடுகளுக்காகவும் பெரிய வன விலங்குகளான புலிகள் மற்றும் யானைகளுக்காக அதிகம் அறியப்படும் இடம். இயற்கையை மீறி ஒரு கலைஞன் எங்கும் இல்லை என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது இந்த இடம். இதன் இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் மனிதனால் செய்யப்பட்ட சில அழகு கலைகளும் இதற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

  Subhashish Panigrah


 • தேன்கனல் சுற்றுலா


  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல புதையல்களை அளிக்கிறது; இங்கு அவ்வளவு ஈர்ப்புகள் உள்ளன. தேன்கனல் அதன் கலை மற்றும் சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தரும் இடமாகும். அதனால் தான் இந்த மாவட்டத்தை சுற்றி சமயஞ்சார்ந்த இடங்கள் பல காணப்படுகின்றன. இங்கு அழகிய ஹிந்து கோவில்கள்களும் பல உள்ளன. அதில் அதிக புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது பாலபத்ரா கோவில்.

  Subhashish Panigrahi -


 • பாலபத்ரா கோவில்

  பாலபத்ரா கடவுளுக்காக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும் இது. இதே போல் இங்குள்ள சாம்புகோபால் கோவிலும் ஹிந்து பகதர்களால் அடிக்கடி வரப்படும் புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது. ஸ்ரீ ராமருக்காக கட்டப்பட்ட ரகுநாத் கோவில் அதன் அழிகிய தோற்றத்துக்காக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

  Biswarup Ganguly


 • குனஜகண்ட கிருஷ்ணர் கோவில்

  இங்குள்ள பழமையான கோவிலான குனஜகண்ட கிருஷ்ணர் கோவில் இன்றும் கூட உலகத்தில் பல இடங்களில் இருந்து பக்தர்களை ஈர்க்கிறது. சிவன் பெருமான் குடிகொண்டிருக்கும் கபிலாஷ், மஹிமா தர்மாவின் சமய தலைமையகமாக விளங்கும் ஜோரண்டா, பல ஹிந்துக் கோவில்களை கொண்டுள்ள கோலோ என இன்னும் சில சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது தேன்கனல்.

  MKar


 • ராமர் கோவில்

  தேன்கனலிலிருந்து சிறிது தொலைவில் உள்ள சப்டசஜ்யா என்ற அழகிய இடத்தில் ஒரு ராமர் கோவில் உள்ளது. லடகடா என்ற இடம் தேன்கனல் சுற்றுலாவின் மற்றொரு புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு சித்தேஷ்வர் கடவுளை மக்கள் வழிபடுகின்றனர். அனந்த் என்ற ராஜ நாகத்திற்கு அடியில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம் சாரங்கா என்றா இடத்தில் உள்ளதால், இதுவும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. தண்டாதர் என்ற இடம் அதன் அழகிய சுற்றுச் சூழலுக்காக சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்கிறது.

  Biswarup Ganguly


 • எப்படி அடையலாம்

  தேன்கனல் நகரத்துக்கு விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். புவனேஷ்வரில் உள்ள விமான நிலையம் தான் இதற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். தேன்கனலுக்கு மிகவும் அருகில் இருக்கும் இரயில் நிலையம் கட்டக்கில் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் அல்லது தொலைதூர பயணங்களுக்கு டாக்சி சேவைகளையும் பயன்படுத்தலாம். அக்டோபர் முதல் டிசம்பர், மற்றும் பிப்ரவர் மற்றும் மார்ச் மாதங்களில் தேன்கனலுக்கு சுற்றுலா வருவதே சரியான நேரமாக இருக்கும்.

  Biswarup Ganguly
தலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு சிற்றூராக விளங்கும் தேன்கனலில் வளமையான தாவர வகைகளையும் விலங்கினங்களையும் காணலாம். இதன் அழகே இதனை சுற்றியுள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நதிகளில் அடங்கியுள்ளது. வாருங்கள் நாமும் சென்று காண்போம் தேன்கனலின் அழகை...

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்