Back
Home » பயணம்
அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும்னு என்னைக்காச்சும் பாத்துருக்கோமா?
Native Planet | 3rd Nov, 2018 06:01 PM
 • எப்படி அடைவது

  நிசாமபாத் நகரத்தின் இதயப் பகுதி என்று அழைக்கப்படும் நடுப் பகுதியிலேயே இந்த இடம் அமைந்துள்ளது. செல்வதற்கு எளிமையாகவே உள்ளது. இது தலைநகர் ஹைதராபாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக 175 கிமீ பயணித்தால் இந்த இடத்தை அடைந்துவிடலாம். ரயில் வழி போக்குவரத்தும் இங்கு இருக்கிறது.

  Rizwanmahai


 • திறந்திருக்கும் நேரம்

  இந்த அருங்காட்சியகமானது ஞாயிற்றுக்கிழமை கூட திறந்திருக்கும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக இங்கு ஞாயிறு வேலை நாளாகவும், அதற்கு பதிலாக வெள்ளிக் கிழமை விடுப்பு நாளாகவும் கொண்டு செயல்படுகிறது.

  வெள்ளி தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு சென்று பார்வையிடலாம்.

  மாநில விடுமுறை தினங்களில் அருங்காட்சியக திறப்பை உறுதி செய்துவிட்டு செல்வது அறிவுறுத்தத்தக்கது.

  Sumanth Garakarajula


 • உணவகமும் விருந்தோம்பலும்

  இங்குள்ள மக்கள் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அன்போடும் பண்போடும் இருக்கிறார்கள். இவர்களின் உணவுப் பழக்கம் என்றாலும் சரி, அல்லது தமிழக, வட இந்திய உணவுகளும் சரி இங்கு அருகிலுள்ள சில உணவகங்களில் கிடைக்கின்றன. ஹரிதா இந்தூர் எனும் உணவகம் அதிகம் பேர் விரும்பி செல்லும் ஒரு இடமாகும்.

  Rizwanmahai


 • வாங்கவும் மகிழவும்

  பொதுவாக சுற்றுலா செல்லும் இடங்களில் தனித்தன்மை வாய்ந்ததாகவும், விருப்பத்தின் பேரிலும், அல்லது வித்தியாசமாக இருக்கும் பொருள்களை சுற்றுலாப் பிரியர்கள் வாங்கி வீட்டுக்கு செல்வது வழக்கம். அதுபோலவே இங்கும் கைவினைப் பொருள்கள், பழங்கால அழகு பொருள்களும் கிடைக்கின்றன

  Bhavani Mudam 55


 • பழங்கால கற்கருவிகள்

  தொல்லியல் பிரிவு, சிற்பப்பிரிவு மற்றும் செப்புப்பொருட்கள் பிரிவு என்பவையே அவை. ஒவ்வொரு பிரிவிலும் நிஜாமாபாத் பகுதியின் வரலாற்று பங்களிப்புகள் மட்டுமன்றி நவீன பங்களிப்புகளும் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் பிரிவில் கி.மு 5000 த்துக்கு முற்பட்ட கற்காலத்தில் மானுட இனம் பயன்படுத்திய கற்கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

  Sumanth Garakarajula


 • அருங்காட்சியகத்தில் என்ன காணலாம்

  பேலியோலித்திக், நியோலித்திக் யுகங்களை சேர்ந்த பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 1000ம் ஆண்டு வரையிலான மனித நாகரிகத்துக்குரிய சில மட்பாண்டங்களை இங்கு காணலாம். சாதவாஹன வம்சம், காகதீய வம்சம், குதுப் ஷாஹி வம்சம் மற்றும் இஷவாஹு வம்சம் போன்ற பல ராஜவம்சங்களின் ஆட்சியில் புழங்கிய புராதன கால நாணயங்களின் சேகரிப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் அவசியம் காண வேண்டிய அம்சமாகும்

  Randhirreddy
ஆர்க்கியாலஜிகல் அண்ட் ஹெரிடேஜ் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த தொல்லியல் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் நிஜாமாபாத் நகரத்தில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். வரலாற்று அரும்பொருட்கள் மட்டுமன்றி மானுட பரிணாம வளர்ச்சி குறித்த காட்சி விளக்க சித்தரிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. 2001ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மூன்று அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை குறித்தும், அதன் சிறப்புகள், காணவேண்டியவை மற்றும் எப்படி செல்வது குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

   
 
ஆரோக்கியம்