Back
Home » லேட்டஸ்ட்
அண்டத்தில் மிதக்கும் மண்டையோடுகள்; பின்னணி என்ன?
Gizbot | 8th Nov, 2018 04:02 PM
 • 10. டெர்மினேட்டர் டிங்கர்பெல்:

  பறவை போன்ற அழகானதொரு வடிவத்தை காட்சிப்படுத்தும் இந்த விண்வெளி காட்சியாது டிங்கர் பெல் ட்ரிப்லெட் என்றும் அழைக்கப் டுகிறது. பூமியில் இருந்து சுமார் 650 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது, மூன்று விண்மீன்களின் மோதலின் விளைவாக உருவான ஒன்றாகும். பொதுவாகவே மூன்று விண்மீன்களின் இணைப்பு என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். மோதலுக்கு பின்தான் இதுவொரு அழகான இடமாக காட்சி அளிக்கிறது. ஆனால் மோதலின் போது மிகவும் ஆர்பரிப்பான இடமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.


 • 09. சொரன் நெபுலாவின் கண்:

  அழைக்கப்படும் பெயருக்கு ஏற்றவாறே இந்த விண்வெளி பொருளானது ஒரு தீவிரமான சுழற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளது. உண்மையில் இது இஎஸ்ஓ 456-67 என்று அறியப்படும் ஒரு நெபுலா கிரகம் ஆகும். வெவ்வேறு வாயுக்கள் மற்றும் ஒற்றுமைகளை கொண்டு உள்ளதால் இந்த கிரகமானது பல வகையான அலை நீளங்களை காட்சிப் படுத்துகின்றது. இறக்கும் ரெட் ஜெயிண்ட் நட்சத்திரத்தால் உமிழப்படும் இது (பூமியில் இருந்து) சுமார் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.


 • 08. ஹாலோவீன் சிறுகோள்:

  அதிகாரப்பூர்வமாக 2015 டிபி 145 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் ஆனது சுழலும் மண்டை ஓடு போன்றும் காட்சி அளிக்கிறது. சுவாரசியம் என்னவெனில், இந்த 650 மீட்டர் அகல சிறுகோள் ஆனது இன்னும் ஒரு சில வாரங்களில் பூமியை நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது


 • 07. மார்ஸ் கிரகத்தின் மர்ம முகம்!

  மார்ஸ் கிரகத்தின் மர்ம முகம்: 1976 ஆம் ஆண்டு நாசாவின் வைக்கிங் 1 தி ஆர்பிட்டர் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த முக வடிவமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது. சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களின் படி, இந்த மர்ம முகமானது செவ்வாய் கிரக நகரங்களின் இடிபாடுகளுள் ஒன்றாகும்.


 • 06. எக்ஸ்ரே மண்டையோடு:

  எரியும் மண்டை ஓடு போன்று காட்சியளிக்கும் இது எக்ஸ்-கதிர்களின் வழியே காணப்பட்ட பெர்சஸ் விண்மீன் திரட்டு ஆகும். உண்மையில் இது பெர்சியஸ் விண்மீன் கிளஸ்டரின் மையப் பகுதியிலிருந்து வெளி வரும் எக்ஸ் கதிர் வெளிப்பாடு ஆகும். மிகவும் திகிலூட்டும் கட்சியாக இருக்கிறது அல்லவா!


 • 05. கோஸ்ட் ஹெட் நெபுலா

  இந்த மாபெரும், பளபளப்பான கண்கள் கோஸ்ட் ஹெட் நெபுலாவின் மிக அற்புதமான கட்சியை உருவாக்குகின்றன. ஆனால் வேறுபட்ட செயல்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் ஒளிரும் பிரகாசமான நட்சத்திரம் (இடது) மற்றும் இரண்டு தூசி நிறைந்த, மூடிய நட்சத்திரங்கள் (வலது) ஒன்றுகூட இது உருவாகி உள்ளது.


 • 04. காத்திருக்கும் சாத்தான்:

  இளம் மற்றும் உயர்-வேக நட்சத்திரங்களின் அருகிலுள்ள விண்மீன் வாயு விளக்குகள் ஆனது, தாக்குதலுக்கு காத்திருக்கும் ஒரு சாத்தான் வடிவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நெபுலா ஆனது அதிகாரப்பூர்வமாக ஐஆர்ஏஎஸ் 05437 + 2502 என அறியப்படுகிறது. இது 1980 களில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


 • 03. ஸ்கல் நெபுலா:

  நெபுலா என்ஜிசி 246 என்பது ஸ்கல் நெபுலா என்றும் அழைக்கப்படுகிறது, அதன் ஒளிரும் இரண்டு கண்களும், இருமை நட்சத்திரங்களின் ஒரு ஜோடியாகும். மற்றொன்று நெபுலாவே ஆகும். இது பூமிக்கு மிகவும் அருகில் உள்ள விண்வெளி பொருளாகும். அதாவது சுமார் 1,600 ஒளி ஆண்டுகள் என்கிற தொலைவை மட்டுமே கொண்டு உள்ளது.


 • 02. கடவுளின் கை:

  நீல கை போன்று காட்சி அளிப்பது உண்மையில் ஒரு மையப் பல்சரின் வழியாக வெளியே வரும் எக்ஸ்-ரே உமிழும் வாயு ஆகும். இதன் காற்று சுற்றியுள்ள வாயுவை சூடேற்றி, எக்ஸ் கதிர்களை வெளியிடுவதற்கு காரணமாக அமைகிறது. இருப்பினும் இந்த கை வடிவவமானது மிகவும் தற்செயலான ஒன்றாகும், ஆகவே தான் இது கடவுளின் கை என்று அழைக்கப்படுகிறது.


 • 01. கோஸ்ட் நெபுலா:

  சில வெளிப்படையான காரணங்களுக்காக இது கோஸ்ட் நெபுலா என்று அழைக்கப்படுகிறது. அதில் ஒரு முக்கியமான காரணம் இதன் பிரதிபலிப்பு ஆகும். மற்றொன்று இதன் ஆவி போன்ற உருவமாகும். இருண்ட நெபுலாவான எஸ்எச்2-136 ஆனது ஒளி விடும் நட்சத்திர பின்னணியின் வாயிலாகவே பேய் நிழல்களை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாமிக்கும் சயின்ஸுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதை நம்பினால் நிரூபணம் ஆகும் என்கிறது சாமியார் கூட்டம், இதோ நிரூபித்து விட்டேன் இனி நம்புங்கள் என்கிறது சயின்ஸ் கூட்டம், அவ்வளவு தான். இருந்தாலும் "ஆதாரம்" அல்லது "அதிகாரப்பூர்வம்" என்று வந்து விட்டால் சயின்ஸ் கூட்டத்தை நம்புவது தான் புத்திசாலித்தனம்.

ஏனெனில் அவர்கள் தான், பல்வேறு ஆய்வு கூடங்களை நிறுவி, நாம் வாழும் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் கண்காணித்து மற்றும் ஆராயந்து வருகின்றனர். அப்படியாக நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பல விசித்திரமான கண்டுபிடிப்புகள் மற்றும் காட்சிகள் நமக்கு கிடைத்துள்ளன. அதில் சில கண்டுபிடிப்புகள் திகில் ஊட்டும் வண்ணம் உள்ளன. முதலில் திகிலூட்டினாலும், பின்னர் ஆர்வத்தை கிளப்புகின்றன என்பதே நிதர்சனம். அப்படியாக இங்கு பிரபஞ்சத்தின் டாப் 10 திகிலான இடங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. அவைகள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.

   
 
ஆரோக்கியம்