Back
Home » Business
லட்சம் பேரை ஏமாற்றி ரூ.500 கோடி அபேஸ், காய்கறி வியாபாரி Nowhera Shaikh எப்படிச் செய்தார் தெரியுமா.?
Good Returns | 8th Nov, 2018 01:22 PM
 • படிப்பு

  காய்கறி வியாபாரத்துக்கு இடையில் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு பட்டப் படைப்பை முடித்தார். பிசினஸ் நிர்வாகத்தில் அவர் விரும்பியது போலவே ஒரு பட்டப் படிப்பு. நான் மட்டும் படித்தால் போதாது... என்னை போன்ற இஸ்லாமிய சிறுமிகளும் படிக்க வேண்டும் "எனவே படித்து முடித்த கையோடு பெண்களுக்காக ஒரு மதர்ஸா பள்ளி".


 • என்ன பிசினஸ்

  பட்டப் படிப்பு முடித்து விட்டும் கொஞ்ச நாள் காய்கறி வியாபரங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். படித்தாகி விட்டது இனியும் நம்மால் இந்த காய்கறி வியாபாரத்தை செய்து கொண்டிருக்க முடியாது. எதாவது செய்ய வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் சரியாக வேண்டும். என்ன செய்யலாம். நேர்மையாக ஹோட்டல், மளிகை, பலசரகு என்று பல்வேறு தொழில்களை செய்து பார்த்தார்.


 • ஓவர் ரிஸ்க்

  எதுவும் நம் Nowhera Shaikh-க்கு ஒத்து வரவில்லை. காரணம் கேட்டால் ரிஸ்க் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார். "இந்த ஹோட்டல் வியாபாரத்த நம்பி சாப்பாட்ட செஞ்சி வெச்சா சில நேரங்கள்ள ஆளே வர்றது இல்ல. ஆக சமைத்து வெச்சது எல்லாமே வீணா போய்றுது. அது நாள் வரை ஒத்த ஒத்த ரூபாயா சேத்து வெச்சித காலியாயிடுது. பல சரக்குக்கு மார்ஜின் ரொம்ப கம்மியா இருக்கு. மளிகை நாள் முழுக்க வேலை இருக்கு" என்று எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருந்தது.


 • ஷேர் மார்க்கெட்

  Nowhera Shaikh படித்தது பிபிஏ என்பதால் கொஞ்சம் பங்குச் சந்தைகளில் ஈடுபாடு இருந்தது, ஆனால் திறமை இல்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைக் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு அசாத்திய யோசனை வருகிறது.


 • கோடீஸ்வரர் ஆகலாம்

  முதலீட்டு நிறுவனத்தை நடத்தலாம். அட ஆமாங்க நம்ம Nowhera Shaikh ஒரு நல்ல நாள் பாத்து அல்லா அருளால் கடை நல்லா வர வேண்டும் என வேண்டி தன்னுடைய முதல் சின்ன நிறுவனத்தைத் தொடங்கினார். கொஞ்ச நாள் நேர்மையாக கடை ஓடியது. கொடுத்த காசுக்கு ஏதோ வருமானத்தை ஆண்டுக்கு வழங்கி வந்தார். ஊரில் பெரிய மதிப்பு இல்லை.


 • கறுப்புப் பணத் தொடர்பு

  கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற ஒரு கும்பல் நம் Nowhera Shaikh-ஐ அணுக, வெகு நேரம் பேசி Nowhera Shaikh மனதை மாற்றினார்கள். 20 பைசா கமிஷன். ஒரு ரூபாய் கறுப்புப் பணத்த வங்கிக் கணக்குகள் மூலமா வெள்ளைப் பணமா கொடுத்தா அதுக்கு 20 பைசா (20%) கமிஷன் என்று ஒரு டீல் உறுதியானது.


 • செம பிசினஸ்

  தொடக்கத்தில் தன்னுடைய சொந்த பணத்தை மட்டும் கறுப்பு வெள்ளை விளையாட்டில் விளையாடிய Nowhera Shaikh, நாளடைவில் தன்னை நம்பி வரும் நபர்களின் பணத்தையும் இதில் முதலீடு செய்யத் தொடங்கினார். கூரையைப் பிய்த்துக் கொண்டு கமிஷன் வரத் தொடங்கியது. வால்யூம் அதிகமாக அதிகமாக ஒரு ரூபாய்க்கு 20 பைசா என்று இருந்த கமிஷன் ஒரு கட்டத்தில் 40 பைசாவாக அதிகரித்த்தாம்.


 • ஸ்பாட் பேமெண்ட்

  ஒரு நபர் 1 கோடி ரூபாய் கறுப்புப் பணத்துடன் (கள்ள நோட்டுக்களுடன் கூட) வந்தால் உடனடியாக 60 லட்சம் வெள்ளைப் பணத்தை கொடுத்துவிடுவார். இந்த உடனடி காசு என்பதால் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் நம்பகமான நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார் Nowhera Shaikh.


 • 36 % வட்டி தர்றேன்

  சரி இப்போது தன்னிடம் கறுப்புப் பணம் இருக்கிறது, இன்னும் கொடுக்கவும் நிறைய கஸ்டமர் இருக்கிறார்கள். ஆனால் இதை புழக்கத்தில் விட்டு ஒரு தொழில் போல சம்பாதிக்க அதே முதலீட்டு கம்பெனிகளை பயன்படுத்தினார். கிடைத்த கறுப்புப் பணத்தை அப்படியே தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு 36 - 42 சதவிகிதம் வட்டியாகக் கொடுத்தார். மீதப் பணத்தை ஹவாலா முறையில் சுழற்சிக்கு விட்டார். எல்லா பக்கமும் லாபம் கொட்டே கொட்டு எனக் கொட்டியது. எல்லாவற்றுக்கும் காரணம் ஹவாலா.


 • திட்ட பலி ஆடுகள்

  ஆந்திரம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தான் நம் Nowhera Shaikh-ன் டார்கெட். பொதுவாக இஸ்லாத்தில் வட்டிக்கு கடன் கொடுப்பது தவறு என ஒரு கொள்கை உண்டு. எனவே மற்ற இஸ்லாமிய சகோதரர்கள் கொடுக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்காமல் வருமானம் ஈட்டித் தருவதாகச் சொல்லி சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் தன் முதலீட்டுக் கம்பெனிகளுக்கு சீட்டு கட்ட வைத்து இருக்கிறார்.


 • தங்க வியாபாரம்

  இந்த முதலீட்டுக் தொழில் போக பொற் கொள்ளர்கள் இடமிருந்து நேரடியாக நகைகளை வாங்கி விற்றுத் தரும் தொழிலையும் கமிஷனுக்காக செய்திருக்கிறாராம். ஆனால் இது கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுக்கவே செய்யப்பட்டது என விசாரணை நடத்தி வரும் போலீசார் சந்தேகப் படுகிறார்களாம். 2008-ல் ஹீரா கோல்ட் என்கிற பெயரில் தொடங்கபட்ட அந்த கம்பெனி 2012-ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக பதிவு செய்து கொண்டார்களாம். இது தான் Nowhera Shaikh தொடங்கிய முதல் அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.


 • வர்த்தக சாம்ராஜ்ஜியம்

  Nowhera Shaikh-ன் தங்கை முபாரக் ஜகான் மற்றும் அவரின் தம்பி இஸ்மாயிலும் கை கோர்க்க ஹீரா என்கிற பெயரில் மேலும் 16 நிறுவனங்களைத் தொடங்கினார். உணவு, சில்லறை வணிகம், கட்டுமானம், டூர்ஸ் & டிராவல்ஸ், நகைக் கடை என்று பல்வெறு தளங்களில் வியாபாரம் தொடங்கி லாபத்தில் திளைத்தார். இந்த நிறுவனங்களுக்கு ஆந்திரம், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரத்தில் அலுவலகங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் பஹரைன், கத்தார், சவுதி, ஓமன், குவைத் போன்ற நாட்டு அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் Nowhera Shaikh-ன் ஹீரா குழும நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்களாம்.


 • வருமான வரி

  இந்த ஹீரா குழும நிறுவனங்களில் 14-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வருமான வரி தாக்கல் கூட செய்யவில்லையாம். மீதமிருக்கும் 3 நிறுவனங்களுக்கு கடந்த 2017 - 18-க்கு 55 கோடி ரூபாய் வரி செலுத்தி இருக்கிறார்களாம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்த 16 நிறுவனங்களோடு தொடர்பு உடையதாக இருக்கிறதாம்.


 • கிழிந்த திரை

  பல்வேறு தரப்பில் இருந்து Nowhera Shaikh பற்றி புகார் வந்தாலும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியவில்லையாம். கடந்த 2014-ல் ஹீரா குழும ஊழியர்களில் சிலர் ஹவாலா பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதை ஹைதராபாத் போலீஸ் கண்டு பிடித்து 84.7 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கை பற்றிய பிறகு தான் Nowhera Shaikh மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்களாம்.


 • அரசியல் கட்சி

  இதெல்லாம் ஒரு பக்கம் போக AIMEP - All India Mahila Empowerment Party என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சி தொடங்கினார். மே 2018 கர்நாடக சட்ட சபைத் தேர்தலில் 224 சீட்டுகளுக்கும் நின்று தோற்றார். தேர்தலில் நின்ற வேட்பாளர்களில் ஏழு பேர் Nowhera Shaikh மீது முதலீட்டாளர்களை ஏமாற்றுகிறார் என புகார் அளித்தார்கள். இதன் பின் தான் முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வருமானப் பணத்தைக் கொடுக்க முடியாமல் போனது. காரணம் ஹவாலா காரர்கள் மற்றும் கறுப்புப் பண முதலைகள் Nowhera Shaikh போலிஸ் பிடியில் இருப்பது தெரிந்து, அவரோடு ஒட்டு உறவு இல்லாமல் இருந்தது தான். ஆக முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க காசு இல்லை. பிரச்னை பெரிதாகத் தொடங்கியது


 • கைது

  ஒரு வழியாக Nowhera Shaikh செய்யும் தவறுகள் மீது ஒரு தெளிவான பார்வை கிடைத்தது. முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லி பணம் வாங்குவது, ஹவாலா பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டது, வருமான வரி தாக்கல் செய்யாதது, பணச் சலவை செய்தது, சரியான உரிமங்கள் மற்றும் அனுமதிகள் இல்லாமல் தங்க வியாபாரத்தில் ஈடுபட்டது, நகைக் கடை தங்கம் வாங்கிய கணக்குகளில் திள்ளு முள்ளு என்று பல்வேறு குற்றச்சாட்டுகளோடு மே 2018-ல் Nowhera Shaikh மீது காவல் நிலையத்துக்கு வந்த புகார் போன்றவைகளின் அடிப்படையில் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு கைது செய்திருக்கிறது.


 • ஏமாந்த மக்கள்

  "என் பொண்ணோட கல்யாணத்துக்கு நகை வாங்க தாங்க அதிக வட்டிக்கு ஆச பட்டு ஹீரா கம்பெனில காசு போட்டேன்... நான் பண்ணது தாப்பு தான். புத்திக்கு தெரியுது, ஆனா இந்த பணம் இல்லாம என் பொண்ணோட கல்யாணம் நடக்காதுங்க ஐயா... எப்புடியாது என் அசல் பணத்த மட்டுமாவது மீட்டுக் கொடுத்திருங்க ஐயா என ஒரு முதலீட்டாளர் காவலர்களை கெஞ்சிக் கொண்டு இருந்த போதே மயங்கி விழுந்திருக்கிறார்" ரசூல் எனும் முதலீட்டாளர். இவரைத் தொடர்ந்து பல்வேறு முதலீட்டாளர்கள் Nowhera Shaikh மீது ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரப் பகுதிகளில் வந்து கொண்டே இருக்கிறதாம்.


 • காவலர்கள்

  "ரசூலைப் போன்று சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களுக்கு மேல் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இப்போதைய கணக்குப் படி 500 கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் பணம் மட்டும் பாக்கி தர வேண்டி இருக்கிறது. ஆனால் பணத்தை எங்கு வைத்திருக்கிறார்கள், யாரிடம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை விசாரித்து வருகிறோம் அதோடு Nowhera Shaikh -ன் வாக்குமூலங்கள் முரணாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவரை தீர விசாரித்தால் தான் உறுதியாக என்ன நடந்தது என விளக்க முடியும்" என காவல் துறை தெரிவித்திருக்கிறது..

  காய்கறி வியாபாரம் பார்த்தவர் இன்று சுய தொழில் செய்கிறார் என்று பார்த்தால், அவரைப் போன்ற நிலையில் இருக்கும் 1 லட்சம் அப்பாவிகளை ஏமாற்றி இருக்கிறார். எத்தனை ரசூல்களின் வலிகள் இன்னும் கண்ணீராகவும், குடும்பத்தின் வலியாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை.
Nowhera Shaikh, ஒரு ஏழைத் தாயின் மகள்... அன்றாடப் பிழைப்புக்கு திருப்பதியில் காய்கறிகளை வியாபாரம் செய்தவர். அன்று Nowhera Shaikh-கிடம் காய்கறி வாங்கியவர்களுக்கு, அவள் நாளை 17 நிறுவனங்களுக்கு முதலாளி ஆவார், டேர்ன் ஓவர் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் போகும், 2 லட்சம் பேருக்கு மேல் இவருடைய கையெழுத்தில் தான் காசு போகும் என்று.

   
 
ஆரோக்கியம்