Back
Home » லேட்டஸ்ட்
இதெல்லாம் செய்தால் அடுத்த 100 நாட்களில் உங்கள் ஸ்மார்ட்போன் காலி!
Gizbot | 9th Nov, 2018 08:03 AM
 • 09. பாத்ரூமும், ஸ்மார்ட்போனும்!

  ஒரு ஸ்மார்ட்போன் உங்கள் கைகளில் இருந்து எளிதில் நழுவலாம் என்பதை உணருங்கள். அதுவும் நழுவி விடும் இடமானது தண்ணீரால் நிறைந்தது என்றால் விபரீதம் இரட்டிப்பாகும், ஆக முடிந்த வரை பாத் ரூமையும் ஸ்மார்ட் போனையும் பிரித்தே வையுங்கள். ஒருவேளை பாத்ரூமில் சார்ஜ் போடும் வசதி இருந்தால் அது இன்னும் ஆபத்தானது, மின் அதிர்ச்சி தொடங்கி மரணம் வரை நிகழலாம். சுகாதாரம் என்கிற கோணத்தில் பார்த்தால், குளியலறையில் ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு செலவிட்ட 5 நிமிடங்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கழிப்பறை நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆக இனிமேல் பாத்ரூமில் நோ ஸ்மார்ட்போன் ப்ளீஸ்!


 • 08. லேப்டாப்பும் உணவுவேளையும்!

  லேப்டாப்பின் அருகே அல்லது லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு கவனமாக சாப்பிட்டாலும், உங்களுடைய காலை உணவில் இருந்து விழுந்த சிறிய பருக்கை அல்லது துளி ஒன்றை நிச்சயமாக உங்கள் லேப்டாப் விசைப்பலகை மீது இருந்து எடுக்கலாம். மேலோட்டமாக விழுந்தால் பரவாயில்லை. விசைகளின் இடையே உள்ள இடைவெளிகளில் சிக்கி கொண்டால் சிக்கல் தான். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாது. ஆனால் காலப்போக்கில், லேப்டாப் உடனான இந்த காலை உணவு பழக்கமானது கீபோர்ட்டின் செயல்பாட்டை குறைக்கும்.


 • 07. இரவு முழுவதும் சார்ஜ் செய்வது!

  இந்த செயல்முறையானது மிகவும் தீங்கானது என்று தமிழ் கிஸ்பாட் ஒரு நூறு முறையாவது சொல்லி இருக்கும். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொல்லி விடுகிறோம். 100% மேல் செய்யப்படும் சார்ஜ் ஆனது, காலப்போக்கில் பேட்டரியின் திறனை குறைக்க தொடங்குமாம்.


 • 06. 100% மட்டுமல்ல 0% சார்ஜும் ஆபத்து தான்!

  சில ஸ்மார்ட்போன்களின் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் ஆனது 100% முதல் 0% வரை என்கிற முழு அளவு சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜிங் சுழற்சிகளுக்கு திட்டமிடப்படுகின்றன. இம்மாதிரியான நூற்றுக்கணக்கான சுழற்சிகளுக்கு பிறகு, பேட்டரி திறன் குறையும். ஆக 0% சார்ஜ் என்கிற நிலையை அடைய விடாமல் பார்த்து கொள்வதும் நல்லது தான். அதாவது பேட்டரி நிலையானது தோராயமாக 20% கீழே செல்லும் போது அதை சார்ஜிங் செய்ய தொடங்குவது நல்லது.


 • 05. லேப்டாப் டிஸ்பிளேவை பிடித்து தூக்குவது!

  லேப்டாப் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றுப்படி, 17% மக்கள் தங்கள் மடிக்கணினிகளின் டிஸ்பிளேவில் ஏற்படும் கருப்பு புள்ளி கோளாறுகளை சந்திக்கின்றனர். சற்று கூர்ந்து கவனித்தால், அந்த கருப்பு புள்ளிகள் லேப்டாப்பின் மிகவும் வசதியான பிடிமான இடங்களில் தோன்றுவதை கண்டறிய முடியும். ஆம், புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம். குறிப்பிட்ட இடத்தில் நிகழும் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தான் அவைகள் ஏற்படுகின்றன. ஆன லேப்டாப்பை டிஸ்பிளே கொண்டு தூக்குவதை அல்லது நகர்த்துவதை தவிர்த்தல் நல்லது.

  04. காருக்குள் அல்லது ஸ்கூட்டருக்குள் கூடவே கூடாது!

  இது பாதுகாப்பு பற்றி மட்டும் அல்ல, தொழில்நுட்ப தீங்குகளையும் விளைவிக்கும் அல்லது சாதனங்கள் சூடாகும் விபரீதம் பற்றியதும் ஆகும். குறிப்பாக வாகனங்களுக்குள் சிக்கும் சாதனங்களில் உள்ள ஆப்ஸ்களின் செயல்திறன் பாதிப்படைவதாக கண்டறிய பட்டுள்ளது. மறுகையில், ஈரப்பதம் அதிக அளவில் இருந்தால், சாதனங்களில் ஒடுக்கம் தோன்றலாம்.


 • 03. வீடமைப்பு இரசாயனங்கள் கொண்டு சுத்தம் செய்வது!

  நம்மில் பலருக்கும் வீடமைப்பு இரசாயனங்கள் கொண்டு மடிக்கணினிகள், டெஸ்க்டாப்புகள், டாப்ளெட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளது. அதை உடனே நிறுத்துமாறு அறிவிரைக்கப்படுகிறது. அவைகளில் அம்மோனியா மற்றும் பிற பொருட்கள் உள்ளதால், கேஜெட்களின் திரைகளில் இருக்கும் ஆண்டிஸ்ட்டிக் மற்றும் எதிர்ப்பு பிரதிபலிப்பு பூச்சுகள் சேதம் அடைகின்றன. காலப்போக்கில் இந்த இரசாயன கலவைகள், உங்களின் டிஸ்பிளேவை மஞ்சள் நிறமாக மாற்றும்.


 • 02. படுக்கையும் லேப்டாப்பும்!

  ஒரு மடிக்கணினியின் ஏர் வெண்ட்ஸ் மூட படுவதால் பெரிய அளவிலான தீங்குகள் விளையும். லேப்டாப் ஏர் வெண்ட்ஸ் ஆனது காற்றுக்கு நேரடி அணுகலை வழங்குவதற்கு அவசியமாக உள்ளது. அது முற்றிலுமாக அடைக்கப்படும் பட்சத்தில் லேப்டாபின் இயக்கம் குறையலாம், குறிப்பிட்ட காலத்திற்க்கு பின்னர் இயங்குவது நிற்கலாம்.


 • 01. சார்ஜிங் பின் பொருத்தினால் மட்டும் போதாது!

  அவசரத்தில் அல்லது விரைவாக சார்ஜ் செய்ய வேண்டும் என்பதற்காக, உங்கள் நண்பரின் சார்ஜரைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்த்தை சார்ஜ் செய்து உள்ளீர்களா? ஒரு சார்ஜர் பொருந்துகிறது என்பதால், அது உங்கள் ஸ்மார்ட்போனுடனும் பொருந்தக்கூடியது என்று நினைக்க வேண்டாம். இது உண்மையில் ஒரு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான செயல்முறையாக இருக்க முடியும். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு உள்ளும் ஒரு சிறப்பு சிப் உள்ளது என்பதையும், அதற்கு ஏதுவான சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம்.
உங்கள் கையில் இருப்பது ஐபோனாக இருந்தாலும் சரி, சியோமியாக இருந்தாலும் சரி, லெனோவா லேப்டாப்பாக இருந்தாலும் சரி, மைக்ரோமேக்ஸ் லேப்டாப்பாக இருந்தாலும் சரி, சில குறிப்பிட்ட விஷயங்களை செய்யும் பட்சத்தில் அது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மெல்ல மெல்ல மரணிக்க தொடங்கும், அதாவது நமது ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பின் செயல்திறன் குறையும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

அனுதினமும் நமக்கும் நமது ஸ்மார்ட்போனிற்கும் / லேப்டாப்பிற்கும் இடையில் நிகழும் சில நடவடிக்கைகள் அல்லது பழக்கவழக்கங்கள் தான் நமது சாதனங்களுக்கு தீங்கிழைக்கிறது என்பது பற்றியாவது தெரியுமா? தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகளின் விளைவாக நமது ஸ்மார்ட்போன்களின் அல்லது லேப்டாப்களின் ஆயுட்காலம் குறைகிறது என்றால், அந்த நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் அல்லது தவறுகள் தான் என்ன?

   
 
ஆரோக்கியம்