Back
Home » லேட்டஸ்ட்
ஏலியன்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகள்.!
Gizbot | 9th Nov, 2018 09:00 AM
 • எம்.ஐ.டி பல்கலை

  தற்போது எம்.ஐ.டி பல்கலைகழகமும் சேர்ந்து மற்றொரு பெரிய யோசனையை முன்வைத்துள்ளது. பட்டப்படிப்பு மாணவரான ஜேம்ஸ் கிளார்க் என்பவர் ஏலியன்களை பூமிக்கு கவரும் விதமாக விண்வெளியில் அதிசக்தி வாய்ந்த லேசர் கதிரை பாய்ச்சலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அது வெகு தூரத்தில் உள்ள அறிவார்ந்த சமூகத்திற்கு ஒரு சமிக்ஞையாக அமைந்து, நமது இருப்பு தொடர்பாக எச்சரிக்கை செய்யும். அதன்மூலம் வேற்றுகிரகவாசிகளை நம்மை நோக்கி கவர்ந்திழுக்கமுடியும் அல்லது அவர்களாகவே அந்த லேசர்கள் கதிர்கள் மூலம் நம்மோடு உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.


 • ஆஸ்ட்ரோபிசிகல்

  ஆஸ்ட்ரோபிசிகல் என்னும் ஆய்வுகட்டுரை பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையின் படி, மிகப்பெரிய டெலஸ்கோப் (குறைந்தபட்சம் 100அடி நீளமுள்ளது. ஆனால் அந்த அளவு பெரிய தொலைநோக்கி தற்போது இல்லை) மூலம் லேசர் கதிரை பாய்ச்சும் போது, அதிலுள்ள இன்ப்ராரெட் அலைகளை 20,000 ஒளியாண்டுகள் தொலைவில் கூட உணர்ந்து கண்டுபிடிக்கமுடியும். குறிப்பாகநமக்கு மிக அருகாமையில் உள்ள நட்சத்திரமான ப்ராக்ஸிமா சென்டவ்ரி-க்கு அருகில் அறிவார்ந்த வேற்றுகிரகவாசி சமூகம் வசித்துவந்தால், 4 ஆண்டுகளில் இந்த செய்தி அவர்களை சென்றடையும். மேலும் இந்த கதிரை கொண்டு நம்மால் சிறப்பாக உரையாடல்களை மேற்கொள்ளவும் முடியும்.


 • எஸ்.ஈ.டி.ஐ

  "தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் முறைகளை பயன்படுத்தி வேற்றுகிரகவாசிகளை தொடர்புகொள்ளவதற்கான சாத்தியக்கூறுகள் என்பது மிகக்குறைவு. எஸ்.ஈ.டி.ஐ எனப்படும் வேற்றுகிரகவாசிகளுக்கான தேடலில் ஃபுல்-ஸ்கை சர்வே-ல் மேம்பாடுகள் ஏற்பட்டால், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த தேவைப்படும் காலம்(mean-time-to-handshake) தசாப்தஙக்ள் அல்லது நூற்றாண்டுகள் குறைய வாய்ப்புள்ளது.


 • தொலைநோக்கி

  ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்ற நிச்சயமாக ஏராளமான தடைகள் இருக்கும். மிகப்பெரிய தொலைநோக்கி மூலமாக அதிக திறனுடைய லேசர்கதிரை பாய்ச்சுவது என்பது மிகப்பெரிய சவால் மற்றும் ஆபத்தானதும் கூட. ஏனெனில் அதை பார்ப்பவர்களின் கண்பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது மற்றும் நமது செயற்கைகோள் தொழில்நுட்பத்தையும் பாதிக்கும் பேராபத்து உள்ளது. எனவே பாதிப்புகள் அதிகம் ஏற்படாதவாறு நிலவு அல்லது அதைப்போன்ற இடத்தை தேர்வு செய்வது நல்லது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிளார்க், இது வெறும் சாத்திக்கூறுகளை ஆராயும் ஆய்வறிக்கை தான். இது நல்ல யோசனையா, இல்லையா என்பது எதிர்கால செயல்பாட்டிற்கு ஏற்ப விவாதிக்கப்படும் என்றார்.

  இதை செயல்படுத்தி ஏலியன்களை தொடர்புகொள்ள முயலவேண்டும் என்பது தான் எனது கருத்து. நாம் நமது பூமியை முழுவதுமாக அழித்து, துறைமுகங்ககள் எல்லாம் 10அடி கடல் நீருக்குள் மூழ்குவதற்கு முன்பு அவர்கள் இங்கு வரவழைக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே நிலவில் பிரம்மாண்டமான தொலைநோக்கியை கட்டமைக்க துவங்குவோம் என்கிறார் கிளார்க்.
நம்பிக்கையின் அடையாளமோ அல்லது வெளிப்படையான ஏமாற்றமோ, எதுவாயினும் நமது அறிவியல் சமூகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் விண்வெளியில் நட்சத்திரங்களுக்கு அப்பால் ஏதேனும் ஒன்றை தேடுவது அதிகரித்துக்கொண்டேவருகிறது.

மிகப்பெரிய பாறை ஒன்று சூர்யகுடும்பத்தின் வழியாக வீசியெறியப்படுவதை ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அது ஒருவேளை ஏலியன் விண்கலத்தால் திறந்த விண்வெளி பரப்பில் வீசப்பட்டிருக்கலாம் என்பதை துவக்கத்திலேயே கிரகித்துக்கொள்ள முடிகிறது. அது வேற்றுகிரகவாசிகளின் ஆய்வு என லெஜிட் சைன்டிபிக் ஜேர்னலில் அதை ஹார்வர்டு விஞ்ஞானிகள் இந்த வாரம் வெளியிட வாய்ப்புள்ளது.

   
 
ஆரோக்கியம்